24/12/2015

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிக்கல்வி இயக்கக அலுவலக அடிப்படை பணியாளர்களுக்கு உதவி

பள்ளிக்கல்வி இயக்கக வளாக குடியிருப்புகளில் ஏற்ப்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிக்கல்வி இயக்கக அலுவலக அடிப்படை பணியாளர்களுக்கு,சென்னை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினரால் 10.12.2015 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட வெள்ள நிவாரணப் பொருட்களை பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் உயர்.திரு ச.கண்ணப்பன் அவர்களும் மற்றும் இணை இயக்குநர் பெருமக்களும் வழங்கினார்கள்.உடன் நமது சங்கத்தின் மாநில மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள்.

13.12.2015 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கிய பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர்


13.12.2015 அன்று காஞ்சிபுரம் மாவட்டம்,உத்திரமேரூர் வட்டத்திற்குட்பட்ட மானாம்பதி ஊராட்சியில் வசிக்கும் 150 குடும்பங்களுக்கு ரூபாய் ஒரு இலட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கும் நமது சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள்.

15.03.2015 அன்றுள்ளவாறு இருக்கைப்பணி கண்காணிப்பாளர் பதவியில் பணியாற்றும் பணியாளர்களில் மாநில அளவிலான திருத்திய முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

பள்ளிக்கல்வி இணை இயக்குநர்(பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகள் மற்றும் கூடுதல் விபரம் காண மற்றும் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...


கூடுதல் விபரம் பக்கம் 3 முதல் 5 வரை காண மற்றும் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...


15.03.2015 அன்றுள்ளவாறு இருக்கைப்பணி கண்காணிப்பாளர் பதவியில் பணியாற்றும் பணியாளர்களில் மாநில அளவிலான திருத்திய முன்னுரிமைப் பட்டியல் காண மற்றும் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...

27/11/2015

பதவி உயர்வுக்கு ஆபத்து - என்ன சொல்கிறது 7-வது ஊதியக் குழு?

ஏழாவது ஊதியக் குழு தன் அறிக்கையை 19.11.2015-ல் மத்திய நிதியமைச்சரிடம் வழங்கி, பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தியது. அன்று முதல், ஊடகங்களும் சமூக வலைதளங்களும் மத்திய அரசு
ஊழியர்களுக்கு அதிக அளவில் ஊதிய உயர்வு வழங்கப்படுவதைப் போல ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றன. ஆனால், உண்மை நிலை என்ன?

15.03.2015 அன்றைய நிலவரப்படி உதவியாளர் பதவியிலிருந்து (இருக்கைப்பணி) கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பெயர்ப் பட்டியல்

Direct Assistant Amendment To Special Rules

07/10/2015

15.3.2015 அன்றுள்ளவாறு இருக்கைப்பணி கண்காணிப்பாளர் பதவியில் பணியாற்றும் பணியாளர்களில் கண்காணிப்பாளர் பணி மாறுதலுக்கு தகுதியுடையவர்களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

பள்ளிக்கல்வி இணை இயக்குநர்(பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகள் மற்றும் வ.எண்.1 முதல் 13 முடிய உள்ள முன்னுரிமைப் பட்டியல் காண மற்றும் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...

வ.எண்.14 முதல் 34 முடிய உள்ள முன்னுரிமைப் பட்டியல் காண மற்றும் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...

வ.எண்.35 முதல் 55 முடிய உள்ள முன்னுரிமைப் பட்டியல் காண மற்றும் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...

வ.எண்.56 முதல் 83 முடிய உள்ள முன்னுரிமைப் பட்டியல் காண மற்றும் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...

வ.எண்.84 முதல் 92 முடிய உள்ள முன்னுரிமைப் பட்டியல் காண மற்றும் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...

05/10/2015

31.10.2015 அன்று நடைபெறும் நமது சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட மாநாடு அழைப்பிதழ்


நமது சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மேற்கு தாம்பரம் பேபி உயர்நிலைப் பள்ளியில் 10.10.2015 அன்று காலை நடைபெறுகிறது.


பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள்/உதவியாளர்களுக்கு சுருக்கப்பட்ட பவானிசாகர் அடிப்படைப் பயிற்சி பவானிசாகர்,திருச்சி,சேலம், கோவை ஆகிய மையங்களில் நடைபெறுகிறது.

1.பவானிசாகர் மையத்தில் நடைபெறும் பயிற்சிக்கு பள்ளிக்கல்வி இணை இயக்குநர்(பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகள் மற்றும் பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் பெயர்ப்பட்டியல் காண,தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...

2.திருச்சி மையத்தில் நடைபெறும் பயிற்சிக்கு பள்ளிக்கல்வி இணை இயக்குநர்(பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகள் மற்றும் பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் பெயர்ப்பட்டியல் காண,தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...

3.சேலம் மையத்தில் நடைபெறும் பயிற்சிக்கு பள்ளிக்கல்வி இணை இயக்குநர்(பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகள் மற்றும் பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் பெயர்ப்பட்டியல் காண,தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...

4.கோவை மையத்தில் நடைபெறும் பயிற்சிக்கு பள்ளிக்கல்வி இணை இயக்குநர்(பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகள் மற்றும் பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் பெயர்ப்பட்டியல் காண,தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...

27/09/2015

பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க தர்மபுரி மாவட்ட பேரவை கூட்டம்

தர்மபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க, மாவட்ட பேரவை கூட்டம், மாவட்ட தலைவர் சின்னச்சாமி தலைமையில், தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. துணைத்தலைவர் செந்தில்அரசு வரவேற்றார்.

நமது சங்கத்தின் சென்னை மாவட்ட மாநாடு துளிகள் மற்றும் பத்திரிகை செய்தி

16/09/2015

BHARATHIDASAN UNIVERSITY DISTANCE EDUCATION B.ED ADMISSION (NO ENTRANCE) - LAST DATE : 10/10/2015

பி.எப். சந்தாதாரர்களுக்கு பிரத்யேக மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம்

பிராவிடண்ட் பண்டு சந்தாதாரர்களுக்கு என பிரத்யேகமாக புதிய மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை மத்திய மந்திரி மந்தாரு தத்தாத்ரேயா
இன்று துவங்கி வைத்தார். இதன் மூலம், எஸ்.எம்.எஸ். வழியாக யூ.ஏ.என். நம்பரை ஆக்டிவேஷன் செய்வது, மிஸ்டு கால் வழியாக ஆக்டிவேட் செய்வது ஆகிய சேவைகளை பெறலாம். மேலும், சந்தாதாரர்கள் மாதந்தோறும் தங்கள் கணக்குகளின் விபரங்களை மொபைல் வழியாகவே தெரிந்து கொள்ள முடியும்.

25/08/2015

நீதிமன்ற அவமதிப்பு வழக்கா? கல்வித்துறை எச்சரிக்கை... அலறும் கல்விப்பணியாளர்கள்...

யாரேனும் நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்தால், வழக்குகளை கவனிக்கும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது. இதனால் கல்வித்துறை பணியாளர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.

22/08/2015

15.3.2015 நிலவரப்படி உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த இளநிலை உதவியாளர்கள்/தட்டச்சர்கள் முன்னுரிமை பட்டியல் வெளியீடு

15.3.2015 நிலவரப்படி உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த இளநிலை உதவியாளர்கள்/தட்டச்சர்கள் முன்னுரிமை பட்டியல் வெளியீடு-தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகள் காண/தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...


15.3.2015 நிலவரப்படி உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த இளநிலை உதவியாளர்கள்/தட்டச்சர்கள் முன்னுரிமை பட்டியல் காண/தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...

16/08/2015

பி.எட்., படிக்க புதிய விதிமுறை

பி.எட்., படிப்புக்கான புதிய விதிமுறைகளை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, நவம்பருக்கு, சென்னை உயர் நீதிமன்றம்
தள்ளி வைத்துள்ளது. தேசிய ஆசிரியர் கல்விக் குழு, 2014ல்,ஆசிரியர் கல்வி தொடர்பாக, புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது. அதில், பி.எட்., - எம்.எட்., படிப்பை, ஓராண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்துதல், மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை குறைத்தல் உட்பட, பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

4-ம் வகுப்பு படித்தவருக்கு அரசு வேலை தர உத்தரவு

எட்டாம் வகுப்பு படிக்கவில்லை' எனக்கூறி, கருணை வேலை அளிக்க மறுத்த, மின்வாரிய அதிகாரியின் உத்தரவை,சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த, திருமணி ராஜா என்பவர், தாக்கல் செய்த மனு:கள்ளக்குறிச்சியில், மின் வாரிய அலுவலகத்தில் பணியாற்றிய என் தாய், 2012 ஜூலையில் இறந்தார். நான், நான்காம் வகுப்பு படித்துள்ளேன்; கருணை அடிப்படையில் வேலை கோரினேன்.

11/08/2015

புள்ளியியல் துறையாக மாறிய கருவூலத் துறை: அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம்

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பெற்றுத் தரும் பணியில் ஈடுபட்டுள்ள கருவூலத் துறை அலுவலர்களுக்கு, இப்போது புதிய பணி கொடுக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்ட இதர புள்ளிவிவரங்களைச் சேகரித்து, சென்னையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க அடிக்கடி அழைப்பு விடுப்பதால் ஊதியம் வழங்கும் பணியில் தொய்வு ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

09/08/2015

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு

 
பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலப்  பேரவைக் கூட்டம் திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.முன்னதாக மாநில புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.இதில் மாநிலத் தலைவராக ஏ.எஸ்.ராஜேந்திர பிரசாத்,பொதுச் செயலாளராக டி.எல்.சீனிவாசன்,பொருளாளராக ப.நீதிமணி ஆகியோர் உட்பட இணை செயலாளர்கள்,துணைத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மாநில தலைவர் ராஜேந்திரபிரசாத் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில தலைவர் எம்.வி.பால்ராஜ் முன்னிலை வகித்தார். அமைச்சுப்பணியாளர்களுக்கு இணை இயக்குனர், துணை இயக்குனர் ஆகிய பணியிடங்களை வழங்க வேண்டும்.

29/07/2015

வெள்ளை மாளிகையே அண்ணாந்து பார்க்க வைத்தவர் கலாம் - தினமணி

மேகாலயா மாநிலம், ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக தற்கால இந்திய சரித்திரத்தின் நாயகன் கலாம் கலந்து கொண்டார். மாலை சுமார் 6 மணியளவில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தார். அவரது எழுச்சி உரையை மாணவர்களும் பேராசிரியர்களும் ஆவலுடன் கேட்டுக்கொண்டிருந்தனர்.
சுமார் 6.30 மணியளவில் மேடையில் பேசிக் கொண்டிருந்த கலாம் திடீரென மார்பை பிடித்துக் கொண்டு அப்படியே சரிந்தார். இதனால் மேடையில் இருந்தவர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர்.

நமது சங்கத்தின் மாநில நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடும் போட்டியாளர்கள் பெயர்கள் பதவி வாரியாக மற்றும் தேர்தல் சுற்றறிக்கை

எங்கள் கண்ணீரை காணிக்கையாக்குகின்றோம்

08/07/2015

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட மாநாடு

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் பொள்ளாச்சி கல்வி மாவட்ட 6-ஆம் ஆண்டு குடும்பவிழா


பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் இரண்டாவது மாநில பிரதிநிதிகள் பேரவை கூட்டம் மற்றும் மாநில நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல்

08.08.2015 அன்று நமது சங்கத்தின் இரண்டாவது மாநில பிரதிநிதிகள் பேரவை கூட்டம் மற்றும் மாநில நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெறுகிறது.

இடம்:புனித ஜான் வெஸ்டரி ஆங்கிலோ இந்திய மேல்நிலைப்பள்ளி.
             திருச்சிராப்பள்ளி மாவட்டம். (மத்திய பேருந்து நிலையம் அருகில்)

நாள்:08.08.2015 சனிக்கிழமை - பேரவை கூட்டம் துவங்கும் நேரம்:காலை 10.35 மணி

மாநில பிரதிநிதிகள் பேரவை கூட்ட அறிவிப்பு,மாநில நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் நிகழ்ச்சி நிரல்&விதிமுறைகள்,முக்கிய குறிப்புகள் மற்றும் வேட்புமனு படிவம் ஆகியவற்றை காணவும்,தரவிறக்கம் செய்யவும் இதனை அழுத்துக...

22/06/2015

கல்வித்துறையில், மாவட்ட வாரியாக தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும் மாநாட்டில் தீர்மானம்

அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்திட மாவட்ட வாரியாக கல்வித்துறையில் தனிப் பிரிவு ஏற்படுத்திட வேண்டும் என கிருஷ்ணகிரியில் நடந்த பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க
மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

18/06/2015

PAY ORDER FOR 710 AND 200 RMSA SCHOOLS

அரசு ஊழியர்களுக்கு ஆதார் எண் அவசியம்: கருவூலத் துறை சுற்றறிக்கை-இந்த மாதத்துக்கான ஊதியத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா?

தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் அடிப்படை விவரங்களுடன் ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும் என்று கருவூலத் துறை அறிவுறுத்தியது.தமிழக அரசு ஊழியர்களில் பலருக்கும் ஆதார் எண் இல்லாத காரணத்தால், கருவூலத் துறையின் இந்த அறிவிப்பு
அவர்களை பதற்றம் அடையச் செய்துள்ளது. இதனால், இந்த மாதத்துக்கான ஊதியத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமோ என்றும் ஊழியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட மாநாடு அழைப்பிதழ்

16/06/2015

பள்ளிக் கல்வி இயக்ககத்தில் பணியாற்றி கடந்த மே மாதம் ஓய்வு பெற்றவர்களை நமது சங்க மாநில,மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்தி பாராட்டிய நிகழ்வு புகைப்படங்களாய்...



சந்திப்பு

கௌரவிப்பு

கோவை முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றி வந்த மதிப்புமிகு திருமதி அ.ஞானகௌரி அவர்கள் சேலம் மாவட்டத்திற்கு மாறுதல் ஆனதைத் தொடர்ந்து,நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில் நமது சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.வி.பால்ராஜ் அவர்கள் தலைமையில் கோவை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரண்டு சென்று வாழ்த்துரை வணங்கி பொன்னாடை போர்த்தி,நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்த போது.



நமது சங்கத்தின் சிவகங்கை மாவட்ட அமைப்புக் குழு கூட்டம்

23.05.2015 அன்று சிவகங்கை மாவட்ட அமைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.நமது சங்கத்தின் மாநில துணைத் தலைவர்கள் குலாம் ரபீக்,வரதராசன் ஆகியோர் பங்கேற்பு.மாவட்ட நிர்வாகிகள் பாலமுருகன்,முருகன்,ராம சுப்ரமணியன்,கந்தசாமி,பட்டாபி ஆகியோர் இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர்.

சந்திப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் நாகராஜன் தலைமையில் அம்மாவட்டத்தின் சங்க நிர்வாகி சந்திரசேகர்,மற்றும் அசோக் குமார் ஆகியோர் அரசு அலுவலர் கழக மாநிலத் தலைவர்(சி&டி) திரு பொ.சௌந்தரராஜன் அவர்களையும்,நமது மாநில தலைவர் எம்.வி.பால்ராஜ்,மாநில பொதுச்செயலாளர் ஏ.எஸ்.ராஜேந்திரபிரசாத்,மாநில பிரச்சார செயலாளர் பி.நீதிமணி ஆகியோரையும் சந்தித்து தங்களுக்காக சங்கம் எடுத்த முயற்சிக்கு நன்றி தெரிவித்தார்கள்.

15/05/2015

உங்களின் மாத சம்பளம், PF, போனஸ், ARREARS போன்ற ECS தகவல் மற்றும் தற்போதைய நிலவரங்களை ஆன்லைனில் இங்கே அறிந்து கொள்ளுங்கள்

HSE- +2 SUPPLEMENTRY EXAM JUNE 2015 GUIDELINES

பள்ளிக்கூட வாகனங்களில் கடைப்பிடிக்க வேண்டிய 22 விதிமுறைகள் தமிழக அரசின் 3 துறைகள் இணைந்து உத்தரவு

இந்த கல்வியாண்டு முதல் பள்ளிக்கூட வாகனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய 22 விதிமுறைகளை தமிழக அரசின் 3 துறைகள் வெளியிட்டு உள்ளன.

22 விதிமுறைகள்

மாணவர்களை, அவர்களது வீட்டில் இருந்து பள்ளிக்கூடங்களுக்கும், பள்ளிக்கூடங்களில் இருந்து வீடுகளுக்கும் ஏற்றிச்செல்வதற்கு பயன்படுத்தப்படும் பஸ்-வேன் போன்ற வாகனங்கள் கடைபிடிக்க வேண்டிய 22 விதிமுறைகள் அடங்கிய பட்டியலை தமிழக அரசின் போக்குவரத்துத்துறை, பள்ளிக்கல்வி மற்றும் வருவாய் துறைகள் இணைந்து வெளியிட்டுள்ளன.

பிளஸ்-2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 7-ந் தேதி வெளியானது. இந்த நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதன் முறையாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்றும், இந்த மதிப்பெண் சான்றிதழை 6 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்றும், நிரந்த மதிப்பெண் சான்றிதழ் இன்னும் சில நாட்களில் வழங்கப்பட உள்ளதாகவும், எனவே மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளியிலும், தனித்தேர்வர்கள் அவரவர் தேர்வு எழுதிய மையத்தில் தலைமை ஆசிரியரிடம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளியில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெற குவிந்தனர். 

தமிழ்நாடு முழுவதும் புகாருக்கு வழி வகுக்காமல் பள்ளிக்கூடங்களை நடத்தவேண்டும் முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் முதன்மை செயலாளர் அறிவுரை

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப்பள்ளிக்கூடங்களும் எந்த வித புகாருக்கும் இடம் அளிக்காமல் சிறப்பாக நடத்தவேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அறிவுரை வழங்கினார்.

20/04/2015

பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்

கோவையில் பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். கோவை மாவட்ட தலைவர் மனோகர் வரவேற்புரையாற்றினார்.

12/04/2015

அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகள் 22-ந் தேதி முடிவடைகிறது கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி திறக்கப்படும்

அரசு மேல்நிலைப்பள்ளிகள் 22-ந் தேதியுடன் முடிவடைகின்றன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி திறக்கின்றன என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரத்து 177 தொடக்கப்பள்ளிகளும், 9 ஆயிரத்து750 நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. 5 ஆயிரத்து 602 உயர்நிலைப்பள்ளிகளும், 6 ஆயிரத்து 299 மேல்நிலைப்பள்ளிகளும் இருக்கின்றன.

80 வயதை தாண்டினாலும் ‘மறுமணம் ஆகவில்லை’ என சான்றிதழ் அளித்தால் தான் ஓய்வூதியம்-மூத்த குடிமக்கள் அவதி

80 வயதை தாண்டினாலும் ‘மறு மணம் ஆகவில்லை’ என சான்றிதழ் அளித்தால் தான் ஓய்வூதியம் வழங்கப்படும் என தமிழக அரசு
வெளியிட்டு உள்ள புதிய உத்தரவினால் மூத்த குடிமக்கள் நாள்தோறும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

D.A. ORDER RELEASED BY FINANCE MINISTRY TODAY.


இளநிலை உதவியாளர் சஸ்பெண்டைக் கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு


தமிழக வரலாற்றில் பள்ளிக்கல்வித்துறையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு ஐ.எஸ்.ஒ.9001 தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

தமிழக வரலாற்றில் முதன்முறையாக பள்ளிக்கல்வித் துறையின் 'புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு' ஐ.எஸ்.ஒ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாய் இருப்பவர் அங்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலராய் பணியாற்றும் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்.

29/03/2015

கிருஷ்ணகிரி மாவட்ட உதவியாளர்கள் சஸ்பெண்ட் விவகாரம்:இன்று (30.03.2015) பள்ளிக்கல்வி இயக்கக வளாகத்தில் நமது சங்கத்தின் சார்பில் மதிய உணவு இடைவேளை கூட்டம்

Results of Departmental Examinations - DECEMBER 2014

வாட்ஸ்அப்பில் கேள்வித்தாள் அவுட்-உதவியாளர்கள் சஸ்பெண்டுக்கு எதிர்ப்பு: கிருஷ்ணகிரியில் 31ம் தேதி ஆர்ப்பாட்டம்

கல்வித்துறை பணியாளர்கள் சஸ்பெண்ட் கண்டித்து கிருஷ்ணகிரியில் வரும் 31ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட அமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், பங்கேற்ற சங்கத்தின் மாநில தலைவர் பால்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

07/03/2015

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை மேற்பார்வையிட கல்வி அதிகாரிகள் நியமனம்

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக பள்ளிக் கல்வி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் அளவிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிம் கார்டு வாங்கும்போது உஷார் ....

சிம் கார்டு வாங்குவதற்காக உங்களின் முகவரிச் சான்றிதழ் உள்ளிட்ட எந்த சான்றிதழின் நகலைக் கொடுத்தாலும், அதன் மேல் பேனாவினால் இரண்டு கோடுகளைப் போட்டு விட்டு, தெளிவாக எந்த நிறுவனத்திற்கு
என்ன காரணத்திற்காக அந்த நகலைக் கொடுக்கிறீர்கள் என்பதை தேதியுடன் எழுதி விட்டு கையெழுத்திடுங்கள்.இதன் மூலம் உங்கள் சான்றிதழை நகல் எடுத்து வேறு யாருக்கோ உங்கள் பெயரில் சிம் கார்டு உள்ளிட்டவைகளை எடுப்பதைத் தடுக்க முடியும்.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டம்-2009 குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்திடும் பொருட்டு பள்ளி ஆண்டு விழா கொண்டாட நிதி

03/03/2015

டி.என்.பி.எஸ்.சி துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

இடைநிலை ஆசிரியர்கள்:
1. 004 - Deputy Inspectors Test-First Paper (Relating to Secondary and Special Schools) (without
books)
2. 017 - Deputy Inspector’s Test--Second Paper (Relating to Elementary Schools) (Without Books)
3. 119 - Deputy Inspector’s Test (Educational Statistics (With Books).
4 . 176 - Account Test for Subordinate Officers - Part I .

(or)
114 The Account Test for Executive Officers (With Books).
5 . 208 - The Tamil Nadu Government Office Manual Test (Previously the District Office Manual--Two Parts) (WithBooks).

பதவி உயர்வுக்கான டி.என்.பி.எஸ்.சி துறைத்தேர்வுக்கு அரசு ஊழியர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

அரசு ஊழியர்கள் பதவி உயர்வுக்கான துறைத்தேர்வுகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பள்ளிக்கல்வி அமைச்சருடன் சந்திப்பு

பகுதிநேர சிறப்பாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித் துறை அமைச்சரை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க தலைவர் எம்.ராஜா, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில தலைவர் ரவிசந்தர் மற்றும் நிர்வாகிகள், நேற்று தலைமை செயலகம் வந்து பள்ளி கல்வி துறை அமைச்சர் வீரமணியை சந்தித்து பேசினர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான அரசு விதிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும். சிறப்பு ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது. தற்போது, ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு ஓய்வு: 50 சதவீத காலியிடம் நேரடியாக நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு

27/02/2015

தூத்துக்குடி மாவட்ட மாநாடு தற்போது மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.


நமது சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட மாநாடு அழைப்பிதழ்


பள்ளிக்கல்வி இயக்கக அலுவகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற திரு வரதராஜன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து,நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்த நமது சங்கத்தின் மாநில பொருளாளர் திரு எம்.அதிகமான்முத்து மற்றும்,மாநில அமைப்புச் செயலாளர் திரு டி.எல்.சீனிவாசன் ஆகியோர்.


கோவை வந்த தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் சி&டி யின் மாநிலத் தலைவர் திரு பொ.சௌந்திரராஜன் அவர்களை நமது சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு எம்.வி.பால்ராஜ் அவர்கள் தலைமையில் பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.உடன் கோவை வருவாய் மாவட்ட நிர்வாகிகள்.


தர்மபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவகத்திற்கு ஜனவரி மாதம் வருகை தந்த பள்ளிக்கல்வி இயக்குநர் உயர்.திரு எஸ்.கண்ணப்பன் அவர்களுக்கு நமது சங்கத்தின் மாவட்ட செயலாளர் திரு ஜெ.சிவராமன்,மாவட்டத் தலைவர் திரு செ.சின்னசாமி ஆகியோர் தலைமையில் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.


25/02/2015

பிளஸ்–2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்!

உயர்கல்வியை தொடருவதற்கு உதவியாக பிளஸ்–2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்–2 தேர்வு வருகிற மார்ச் 5 ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி கல்வி அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் இன்று நடந்தது.

04/01/2015

தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2009 - அரசு ஊழியர் ஒரு வருடம் முழுமையாக பணிபுரிந்து வருடாந்திர ஊதிய உயர்விற்கு ஒரு நாள் முன்னர் ஓய்வு பெறுபவர்களுக்கு ஒரு ஊதிய உயர்வு வழங்க அரசு உத்தரவு

DSE - PAY AUTHORIZATION ORDER FOR 13 HIGH HM / 500 PGT / 710 BT / 200 PETs REG ORDERS

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஆண்டு ஊதிய உயர்வு: தமிழக அரசு புதிய உத்தரவு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு கிடைப்பதில் புதிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

ஆண்டு ஊதிய உயர்வு பெறத் தகுதியான நாளுக்கு முந்தைய தினம் ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கு அந்த ஊதிய உயர்வை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

கல்வித்துறையில் போராட்டம்: தேர்வுப்பணியில் சிக்கல்

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font