24/06/2016

பொது வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெறுவதில் புதிய விதிகள்: நிதியமைச்சகம் அறிவிப்பு

பொது சேமநல நிதியை திரும்ப பெறுவதில் புதிய விதிகளை மத்திய நிதியமைச்சகம் 20.6.2016 அன்று அறிவித்துள்ளது.அதன்படி உயர்கல்வி அல்லது தீவிர சிகிச்சை காரணங்களுக்காக பொது சேம நல நிதியை இடையிலேயே திரும்ப பெற அனுமதியளித்து. இதற்கு முன்பு சந்தாதார் வைப்பு திட்டக் கணக்கை இடைநிறுத்தம் செய்து கொண்டாலும் 5 ஆண்டு நிறைவுக்கு பிறகே வைப்பு நிதியை பெற முடியும்.

2015-16 GPF ONLINE ACCOUNT SLIP PUBLISHED

22/06/2016

பழைய முறையில் பென்சன் கொடுப்பது பற்றி ஆய்வு செய்யப்படும் என்று சட்டசபையில் மாண்புமிகு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டசபையில் இன்று தி.மு.க. உறுப்பினர் ஐ.பெரியசாமி பேசும்போது, அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-

அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் முறையை அமல்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கைகள் வந்தன. இதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் 22.2.2016 அன்றே வல்லுனர் குழு அமைக்க உத்தரவிட்டார். அதன்படி அமைக்கப்பட்ட குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

அந்த குழுவின் பரிந்துரை அரசுக்கு கிடைக்க பெற்றவுடன் பழைய முறையில் ஓய்வூதியம் வழங்குவது பற்றி ஆய்வு செய்யப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு பெற்ற ஆசிரியர்கள் பணிவரன்முறை செய்ய தேவையில்லை பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் கடிதம்


18/06/2016

ஆதார் எண் வழங்காத ஓய்வூதியர்கள் அதற்கான புகைப்படம் எடுத்த நகல் ரசீது சமர்ப்பித்து பென்ஷன் பெறலாம்,” என, மாவட்ட கருவூல அதிகாரி அனுஜா தெரிவித்தார்.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆண்டு தோறும் மார்ச்சில் உயிருடன் உள்ளதை நிருபிக்க துணை கருவூலங்களில் 'லைப்' சான்று வழங்கி புதுப்பித்து கொள்ள வேண்டும். இந்த ஆண்டு ஓய்வூதியம் பெறும் அனைவரும் ஆதார் எண் கட்டாயம் வழங்க வேண்டும். அது இருந்தால் தான் புதுப்பிக்க முடியும். ஜூன் மாதத்திற்குள் ஆதார் எண் வழங்காதவர்களுக்கு, ஜூலையில் பென்ஷன் நிறுத்தப்படும் என துணை கருவூல அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு

கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத் தலைவர் நாகராஜ் மற்றும் செயலாளர் முரளி தலைமையில் ஊத்தங்கரை வட்டத்தில் 18.06.2016 அன்று புதிய வட்டத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்கை நடைபெற்றது.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font