25/02/2015

பிளஸ்–2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்!

உயர்கல்வியை தொடருவதற்கு உதவியாக பிளஸ்–2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்–2 தேர்வு வருகிற மார்ச் 5 ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி கல்வி அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் இன்று நடந்தது.

இந்த கூட்டத்தில் பிளஸ்–2 தேர்வை எந்தவித குழப்பமும் இல்லாமல் முறையாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. வினாத்தாள், விடைத்தாள் போன்றவற்றை எவ்வாறு கையாள்வது, பாதுகாப்பது என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

தேர்வு முடிந்ததும் ஒவ்வொரு நாளும் விடைத்தாள்களை திருத்தும் மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படும் பணி, வினாத்தாளை பாதுகாப்பாக வைப்பது குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கல்வித்துறை செயலாளர் சபீதா, "இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வு எழுதும் மாணவ–மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவு வந்த பின்னர் 10 நாட்களுக்கு பிறகுதான் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதனால் என்ஜினீயரிங், எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட உயர் படிப்புகளில் சேருவதற்கு சிரமம் ஏற்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ் அச்சடித்து வழங்குவதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. பிழையின்றி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படுவதால் உரிய கவனம் செலுத்த வேண்டியது உள்ளது.

தேர்வு முடிவு வந்த பின்னர் மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கு இடையே கால இடைவெளியில் உயர் படிப்பை தொடருவதற்கு பலரும் விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன் கருதி முதல் முறையாக இந்த வருடம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இந்த மதிப்பெண் சான்றிதழ் 90 நாட்களுக்கு செல்லத்தக்கது.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font