07/12/2013

கோரிக்கை அட்டையுடன் பணியாற்றிய பள்ளி கல்வித்துறை அலுவலர்கள்

புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கோரிக்கை அட்டை அணிந்து பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் பணியாற்றினர். 

புதுக்கோட்டை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம், முதன்மைக்கல்வி அலுவலகம் உள்ளி ட்ட பள்ளிக்கல்வித்துறை யில் பணியாற்றும் அலுவலர்கள் நேற்று கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்தனர். இதேபோல் இன்று (5ம் தேதி), நாளை (6ம் தேதி) ஆகிய நாட்களிலும் தங்கள் கோரிக்கை குறித்து பிரசுரம் செய்த அட்டை யினை அணிந்து பணி செய்ய உள்ளனர்

மேலும் 11 மற்றும் 12ம் தேதி ஆகிய 2 நாட்கள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

அமைச்சுப் பணியாளர்களுக்கு என இணை இயக்குனர், துணை இயக்குனர் பணியிடம் வழங்கிட வேண்டும். நீதிமன்ற வழக்குகளுக்காக மாவட்டந்தோறும் சட்ட அலுவ லரை நியமனம் செய்ய வேண்டும்.
நீதிமன்ற வழக்குகளுக்காக பணியாளர் களை அலைக்கழிக்க கூடாது. அமைச்சுப் பணியாளர்களுக்கு நேர்முக உதவியாளர் (நிர்வாகம்) என்ற பணியிடத்தை முதன்மைக்கல்வி அலுவலகங்களில் ஏற்படுத்தித் தர வேண்டும். பள்ளி இரவு காவலர்களுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். 

கருணை அடிப்படை நியமனம் பணிவரன்முறை விரைவுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக்கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் இப்போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட பொதுக்குழு கூட்டம்

பரமக்குடி கே.ஜே. கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
 இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சு.ராஜசேகரன் தலைமை வகித்தார். செயலாளர் கு.கண்ணன், மாநில துணைத் தலைவர் எ.குலாம்ரபீக், மாநில மூத்த ஆலோசகர் உ.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி கல்வி மாவட்ட தலைவர் சு.ராமச்சந்திரன் வரவேற்றார்.
 கூட்டத்தில் அமைச்சுப் பணியாளர்களுக்கென இணை இயக்குநர், துணை இயக்குநர் பணியிடம் வழங்க வேண்டும். நீதிமன்ற வழக்குகளுக்காக மாவட்டம் தோறும் சட்ட அலுவலரை நியமனம் செய்வதுடன், பணியாளர்களை அலைக்கழிப்பு செய்யக் கூடாது.
 தபால்கள் அனுப்ப கால அவகாசம் தரவேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு 4800 முதல் 10 ஆயிரமும், கூடுதலாக ரூ 1300-ம் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
 அமைச்சுப் பணியாளர்களுக்கு நேர்முக உதவியாளர் என்ற பணியிடத்தை முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஏற்படுத்துவதுடன், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மாற்றுப்பணியில் அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.
 பள்ளி இரவு காவலர்களுக்கு 30 நாள்கள் ஈட்டிய விடுப்பு வழங்குவதுடன், கருணை அடிப்படையில் நியமனம் பணிவரன்முறையை விரைவுபடுத்த வேண்டும். அரசு தேர்வுத் துறையில் மாறுதல் வழங்கப்படுவதைப் போல முன்னுரிமை அடிப்படையில் மாறுதல்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 இதனைத் தொடர்ந்து பரமக்குடி கல்வி மாவட்ட புதிய நிர்வாகிகள் தலைவர் சு.ராமச்சந்திரன், செயலாளர் கே.லோகநாதமுருகன், பொருளாளர் எம்.வீரமணிகண்டன் ஆகியோரும், ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் தலைவர் எஸ்.குமரேசன், செயலாளர் வி.சுப்பிரமணியன், பொருளாளர் ராமு ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட பொருளாளர் ப.தர்மலிங்கம் நன்றி கூறினார்.











03/12/2013

திருச்சி மாவட்ட பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க துணைத்தலைவர் ரகுநாதன் வெளியிட்டள்ள அறிக்கை:

நீதி மன்ற வழக்குகள் சார்பாக ஏற்படும் செலவினங்களை எவ்வாறு ஈடு செய்வது என்பதற்கு பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர்கள், சார்நிலை அலுவலர்களுக்கு உரிய அறிவுரை, எழுத்துப்பூர்வமான உத்தரவுகளை வழங்க வேண்டும்.
தற்போது வழக்கு சார்பான பணிக்கு வரும் அலுவலக பணியாளர்கள் தங்களது மாத சம்பளத்தில் இருந்து செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர், இதற்கு உடனடியாக மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புள்ளி விவரங்களை சென்னை தலைமை அலுவலகத்திற்கு நேரில் கொண்டுவர வேண்டும் என்று அலுவலர்கள் பணிக்கப்படுவதால் அரசு நிதி வீணாவதுடன், பணியாளரின் அன்றாட வேலையிலும் காலவிரயம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க மின்னஞ்சல், அஞ்சல் மூலமாக விவரங்களை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருகி வரும் வேலை பளுவிற்கிடையே பணிபுரியும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர் களை மாற்றுப்பணிக்கு உட்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தேர்வு பணி மற்றும் மைய மதிப்பீட்டு பணிகளை கவனிக்க ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கும் கூடுதல் பணியிடம் உருவாக்க வேண்டும்.

அனைத்து மாவட்டத்திலும் நீதிமன்ற வழக்குகளுக்காக அலுவலர்களை உட்படுத்துவதை தவிர்த்து சட்ட அலுவலர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல தமிழகம் முழுவதும் வரும் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை கோரிக்கை அட்டையை அணிந்தும்,11, 13 தேதிகளில், முதன்மை கல்வி அலுவலகங்களிலும், 27ம் தேதி, பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகத்திலும், ஆர்ப்பாட்டம் நடத்துவது என, சங்க நிர்வாகிகள் முடிவு எடுத்துள்ளனர்.தமிழகம் முழுவதும் உள்ள எங் கள் சங்கத்தை சேர்ந்த 1 லட்சம் பேர், திருச்சி மாவ ட்டத்தில் 350 பேரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த காலத்திலும் தபால் மூலம் நிர்வாக பணியா?

தகவல் தொடர்பு வளர்ந்துள்ள இந்த கால கட்டத்திலும், தபால் மூலம், நிர்வாகப் பணியை செய்யும் முறைக்கு, கல்வித்துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம், வலியுறுத்தி உள்ளது.

இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்று கட்ட போராட்டங்களை, கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் அறிவித்து உள்ளது. 4, 5, 6 தேதிகளில், கோரிக்கை அட்டை அணிந்து, பணியாற்றுவது; 11, 13 தேதிகளில், முதன்மை கல்வி அலுவலகங்களிலும், 27ம் தேதி, பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகத்திலும், ஆர்ப்பாட்டம் நடத்துவது என, சங்க நிர்வாகிகள் முடிவு எடுத்துள்ளனர்.

இது குறித்து, சங்கத்தின் அறிக்கை:

கல்வித் துறை வழக்குகள் தொடர்பாக, பள்ளி கல்வித் துறை மற்றும் தொடக்க கல்வித் துறையில் இருந்து சரியான வழிகாட்டி நெறிமுறைகள் வழங்காததால், மாநிலம் முழுவதும் இருந்து, கல்வித் துறை அலுவலர்கள், ஊழியர்கள், சென்னைக்கு வருகின்றனர். இதனால், மாவட்டங்களில், பணிகள் பாதிக்கப்படுகின்றன. ஆனாலும், வழக்குகள் தீரவில்லை. அனைத்து வழக்கு விவரங்களையும் தொகுத்து, ஒரே வழக்காக, சம்பந்தப்பட்ட துறையே, நேரடியாக, கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். சட்ட சிக்கல்களை தீர்க்க, மாவட்டந்தோறும், சட்ட அலுவலர் நியமிக்க வேண்டும்.

சிறிய புள்ளி விவரங்களை கூட, "மாவட்டங்களில் உள்ள பணியாளர்கள், நேரில், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வர வேண்டும்' என, அதிகாரிகள் உத்தரவிடுகின்றனர். இதனால், அரசின் பணமும், பணியாளரின், தினசரி வேலையும் பாதிக்கிறது. தகவல்தொடர்பு வசதி, எங்கேயோ போய்விட்ட இன்றைய நிலையிலும், நேரில், தபால்களை எடுத்துவரச் சொல்வது, தேவையில்லாத வேலை. இதற்கு, உடனடி முற்றுப்புள்ளி வைத்து, "இ மெயில்' மூலமாக, விவரங்களை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி:தினமலர்-சென்னை செய்திகள்

02/12/2013

பள்ளிக்கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டிசம்பர் 11, 13 ஆகிய நாள்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் (சி.இ.ஓ.) முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களின் நிர்வாகிகள் கூட்டம், சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.வி.பால்ராஜ் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்தில்
* நீதிமன்ற வழக்குகளுக்காக மாவட்டந்தோறும் சட்ட அலுவலரை நியமனம் செய்ய வேண்டும்.நீதிமன்ற வழக்குகளுக்காகப் பணியாளர்களை அலைக்கழிக்கக் கூடாது.
* தபால்கள் அனுப்புவதற்கு கால அவகாசம் தரப்பட வேண்டும்.
* அமைச்சுப் பணியாளர்களுக்கு நேர்முக உதவியாளர் (நிர்வாகம்) என்ற பணியிடத்தை முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஏற்படுத்த வேண்டும்.
* இணை இயக்குநர்களுக்கு நேர்முக உதவியாளர் பணியிடம் உருவாக்க வேண்டும்.
* பள்ளி இரவுக் காவலர்களுக்கு 30 நாள்கள் ஈட்டிய விடுப்பு வழங்க வேண்டும்.
* கருணை அடிப்படை நியமனம் பணி வரன்முறையை விரைவுபடுத்த வேண்டும்.
* கண்காணிப்பாளர் பணியிடம் இல்லாத உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு பணியிடம் ஏற்படுத்தித் தர வேண்டும்.
* தேர்வுப் பணிக்கு கூடுதல் பணியிடம் உருவாக்கப்பட வேண்டும். உழைப்பூதியம் உயர்த்தப்பட வேண்டும்.
* கல்வி மாவட்ட அளவில் இளநிலை உதவியாளர் வரையிலான பதவி உயர்வுகளை ஒவ்வொரு ஆண்டும் வழங்க வேண்டும்
என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4, 5, 6 ஆகிய நாள்களில் கோரிக்கை அட்டை அணிந்து பணிக்குச் செல்வது, டிசம்பர் 11, 13 ஆகிய நாள்களில் இரு கட்டங்களாக முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பும், டிசம்பர் 27ஆம் தேதி மாநில அளவில் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்திலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

நன்றி:தினமணி.

18/11/2013

கல்வித்துறையில் வழக்குகள் அதிகரிப்பு-கலக்கத்தில் அலுவலர்கள்

பள்ளிக்கல்வித்துறைக்கு எதிராக, தினமும் வழக்குகள் நீதிமன்றத்தில் அதிகரித்து வருகின்றன. மாநிலம் முழுவதும் 6,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போதிய வழிகாட்டுதல், நிதியின்மையால் கல்வி அலுவலர்கள், சிக்கலில் தவிக்கின்றனர்.
பள்ளிக்கல்வித்துறைக்கு எதிராக, துறை சார்ந்தவர்கள், துறை சாராதவர்கள் மற்றும் பொதுநல என்ற பிரிவுகளின் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில், இடமாறுதல், ஊதிய முரண்பாடு, ஓய்வூதியம், பணிநியமன முறைகேடு, முறையற்ற அரசாணை போன்ற காரணங்களுக்காக பலர், நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். மாநிலம் முழுவதும், 6500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்குகளை கையாள்வதற்கு, போதிய நிதியின்மையால் பள்ளிகள் வளர்ச்சி, பராமரிப்பு, விளையாட்டு போட்டிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை பயன்படுத்தும் அவலநிலை, பல மாவட்டங்களில் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில தலைவர் பால்ராஜ் கூறுகையில்,""பள்ளிக்கல்வித்துறையில் போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால், நாளுக்குநாள் நீதிமன்ற வழக்குகள் அதிகரித்து வருகின்றன. நீதிமன்ற செலவுக்காக, பள்ளிக்கல்வித்துறை எவ்வித நிதியும் ஒதுக்குவது கிடையாது. நீதிமன்றங்கள் சார்ந்த போதிய அடிப்படை தெரியாத நிர்வாக ஊழியர்கள் பெரும் அலைக்கழிப்பு, மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஒழுங்கான வழிகாட்டுதல் இன்றி திணறிவருகின்றோம்,'' என்றார்.

கல்வித்துறை தலைமை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"பல்வேறு பணிச்சுமைகளுக்கு மத்தியில், நீதிமன்ற வழக்குகள் என்பது பெரும் தலைவலியாக உள்ளது. நீதிமன்ற வழக்குகளை, கல்வித்துறை அலுவலர்களை கொண்டு கையாள்கின்றோம். ஒருங்கிணைந்த மாவட்டங்கள் அளவில், வழக்குகளை எதிர்கொள்ள அலுவலர்களை நியமிக்கவேண்டும். போதிய தெளிவில்லாத அரசாணைகளால் தான் வழக்குகள் அதிகரிக்கிறது' என்றார்.

தினமலர்-16.11.2013

07/07/2013

காஞ்சிபுரத்தில் நடந்த பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தலைமை வகித்த மாநிலத் தலைவர் எம்.வி. பால்ராஜ் கூறியது:

தமிழக பல்வேறு அரசுத் துறைகளில் அமைச்சுப் பணியாளர்களுக்கென்று இணை இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களை உருவாக்குவது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா 1992 ஆகஸ்ட் 1-ஆம் தேதி அரசாணை எண் 598 வெளியிட்டார். இதைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை, விவசாயத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் இப்பணியிடங்கள் நிறைவேற்றப்பட்டன.
கல்வித் துறையில் இந்த அரசாணை கடந்த 22 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. அதாவது பள்ளிக்கல்வித் துறையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு கீழ் இணை இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர் பொறுப்பு கல்வி பணி சார்ந்தவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்படுகிறது. இவர்களே கல்வித்துறையில் உள்ள நிர்வாகப் பொறுப்புகளையும் கூடுதலாகக் கவனிக்க வேண்டியுள்ளது. அரசாணை எண் 598 படி நிர்வாக அலுவலர்களான அமைச்சுப் பணியாளர்களுக்கென தனியாக நிர்வாக பொறுப்புகளை மட்டும் கவனிக்கும் வகையில் இணை இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் கல்வித்துறையில் நிர்வாகச் சிக்கல்கள் கடுமையாக உள்ளன. எனவே கல்வித் துறையில் உள்ள அமைச்சுப் பணியாளர்களுக்கென உருவாக்கப்பட்ட இயக்குநர்கள் பதவிகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும் உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்துக்கு கூடுதல் பணியிடங்களுக்கு அரசு அனுமதியளிக்க வேண்டும். கண்காணிப்பாளர் பணியிடம் தோற்றுவிக்கப்படாத உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு கண்காணிப்பாளர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும். தேர்வுப் பணிக்கென புதிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர் வலியுறுத்தினார்.
இதில் காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் வி. சோமசுந்தரம், நகர்மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு, தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன், அமைப்புச் செயலாளர் சீனிவாசன், பொதுச் செயலாளர் ராஜேந்திர பிரசாத், பொருளாளர் அதியமான் முத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நன்றி:தினமணி-07.07.2013-காஞ்சிபுரம் செய்திகள்.

12/03/2013

சஸ்பெண்ட் உத்தரவை திரும்பபெற வலியுறுத்தல்

ஊட்டி, : பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் நீலகிரி மாவட்ட மையத்தின் அவசர கூட்டம் ஊட்டி அரசு மேல்நிலை பள்ளியில் நடந்தது. கூட்டத்தில் சங்க பொறுப்பாளர்கள் ரவி, ரவிச்சந்திரன் மற்றும் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

   கூட்டத்தில் ஊட்டி அரசு மேல்நிலை பள்ளியில் பணிபுரியும் இரவு காவலர், துப்புரவு பணியாளர் ஆகியோரை தேர்வு பணி சம்பந்தமாக எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமலும், உரிய விளக்கத்தை அளிக்க வாய்ப்பு அளிக்காமலும்  கடந்த மாதம் 27ம் தேதி முதல் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். 
இதனை வன்மையாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மேலும் உடனடியாக இந்த நடவடிக்கையை திரும்பபெற வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் முதன்மை கல்வி அலுவலரை கண்டித்து சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.             நன்றி:தினகரன்-11.3.2013

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font