03/12/2013

இந்த காலத்திலும் தபால் மூலம் நிர்வாக பணியா?

தகவல் தொடர்பு வளர்ந்துள்ள இந்த கால கட்டத்திலும், தபால் மூலம், நிர்வாகப் பணியை செய்யும் முறைக்கு, கல்வித்துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம், வலியுறுத்தி உள்ளது.

இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்று கட்ட போராட்டங்களை, கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் அறிவித்து உள்ளது. 4, 5, 6 தேதிகளில், கோரிக்கை அட்டை அணிந்து, பணியாற்றுவது; 11, 13 தேதிகளில், முதன்மை கல்வி அலுவலகங்களிலும், 27ம் தேதி, பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகத்திலும், ஆர்ப்பாட்டம் நடத்துவது என, சங்க நிர்வாகிகள் முடிவு எடுத்துள்ளனர்.

இது குறித்து, சங்கத்தின் அறிக்கை:

கல்வித் துறை வழக்குகள் தொடர்பாக, பள்ளி கல்வித் துறை மற்றும் தொடக்க கல்வித் துறையில் இருந்து சரியான வழிகாட்டி நெறிமுறைகள் வழங்காததால், மாநிலம் முழுவதும் இருந்து, கல்வித் துறை அலுவலர்கள், ஊழியர்கள், சென்னைக்கு வருகின்றனர். இதனால், மாவட்டங்களில், பணிகள் பாதிக்கப்படுகின்றன. ஆனாலும், வழக்குகள் தீரவில்லை. அனைத்து வழக்கு விவரங்களையும் தொகுத்து, ஒரே வழக்காக, சம்பந்தப்பட்ட துறையே, நேரடியாக, கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். சட்ட சிக்கல்களை தீர்க்க, மாவட்டந்தோறும், சட்ட அலுவலர் நியமிக்க வேண்டும்.

சிறிய புள்ளி விவரங்களை கூட, "மாவட்டங்களில் உள்ள பணியாளர்கள், நேரில், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வர வேண்டும்' என, அதிகாரிகள் உத்தரவிடுகின்றனர். இதனால், அரசின் பணமும், பணியாளரின், தினசரி வேலையும் பாதிக்கிறது. தகவல்தொடர்பு வசதி, எங்கேயோ போய்விட்ட இன்றைய நிலையிலும், நேரில், தபால்களை எடுத்துவரச் சொல்வது, தேவையில்லாத வேலை. இதற்கு, உடனடி முற்றுப்புள்ளி வைத்து, "இ மெயில்' மூலமாக, விவரங்களை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி:தினமலர்-சென்னை செய்திகள்

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font