02/12/2013

பள்ளிக்கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டிசம்பர் 11, 13 ஆகிய நாள்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் (சி.இ.ஓ.) முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களின் நிர்வாகிகள் கூட்டம், சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.வி.பால்ராஜ் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்தில்
* நீதிமன்ற வழக்குகளுக்காக மாவட்டந்தோறும் சட்ட அலுவலரை நியமனம் செய்ய வேண்டும்.நீதிமன்ற வழக்குகளுக்காகப் பணியாளர்களை அலைக்கழிக்கக் கூடாது.
* தபால்கள் அனுப்புவதற்கு கால அவகாசம் தரப்பட வேண்டும்.
* அமைச்சுப் பணியாளர்களுக்கு நேர்முக உதவியாளர் (நிர்வாகம்) என்ற பணியிடத்தை முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஏற்படுத்த வேண்டும்.
* இணை இயக்குநர்களுக்கு நேர்முக உதவியாளர் பணியிடம் உருவாக்க வேண்டும்.
* பள்ளி இரவுக் காவலர்களுக்கு 30 நாள்கள் ஈட்டிய விடுப்பு வழங்க வேண்டும்.
* கருணை அடிப்படை நியமனம் பணி வரன்முறையை விரைவுபடுத்த வேண்டும்.
* கண்காணிப்பாளர் பணியிடம் இல்லாத உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு பணியிடம் ஏற்படுத்தித் தர வேண்டும்.
* தேர்வுப் பணிக்கு கூடுதல் பணியிடம் உருவாக்கப்பட வேண்டும். உழைப்பூதியம் உயர்த்தப்பட வேண்டும்.
* கல்வி மாவட்ட அளவில் இளநிலை உதவியாளர் வரையிலான பதவி உயர்வுகளை ஒவ்வொரு ஆண்டும் வழங்க வேண்டும்
என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4, 5, 6 ஆகிய நாள்களில் கோரிக்கை அட்டை அணிந்து பணிக்குச் செல்வது, டிசம்பர் 11, 13 ஆகிய நாள்களில் இரு கட்டங்களாக முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பும், டிசம்பர் 27ஆம் தேதி மாநில அளவில் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்திலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

நன்றி:தினமணி.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font