07/11/2016

அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு இணையத்தில் பதிவு செய்ய பயிற்சி

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பணிப் பதிவேடு விவரங்களை அரசு இணையதளத்தில் பதிவு செய்வது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள், அரசு அலுவலகப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.


நாமக்கல் சார்நிலைக் கரூவூலம் மூலம் ஊதியம் பெறும் பகுதிகளில் உள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள், அரசுத் துறை பணியாளர்களுக்கு நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்தப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. உதவிக் கருவூல அலுவலர் மாதேஸ் பயிற்சி அளித்தார்.

இதன்படி பணிப் பதிவேட்டில் உள்ள அனைத்துப் பதிவுகளும் பதிவிடப்படவுள்ளன. ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் அடிப்படை விவரங்களான பெயர் பிறந்த தேதி, பணியில் சேர்ந்த தேதி, மொழி, இனம், பதவி உயர்வு, சம்பளம், வீட்டு முகவரி, ரத்த வகை, அங்க மச்ச அடையாளங்கள், புகைப்படம், இமெயில் முகவரி, செல்லிடப்பேசி எண், இரண்டு, நான்கு சக்கர ஓட்டுநர் உரிம எண், பான் கார்டு எண் போன்றவை முதல்கட்டமாக பதியப்பட்டுள்ளன.

பணிப் பதிவேட்டில் பதியும் அனைத்து விவரங்களும் விடுப்பு, சரண்டர் போன்ற விவரங்களும், பணிக்கொடை போன்றவற்றுக்கான வாரிசு நியமனம், ஆதார் எண் போன்றவையும் இப்போது பதிவேற்றப்பட உள்ளன.
 பணிப் பதிவேடு விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யும்போது, ஊதியக் குழு ஊதிய நிர்ணயம், ஓய்வுக் காலப் பயன்கள், மாநிலக் கணக்காயருக்குக் கருத்துரு அனுப்புதல், ஓய்வூதிய நிர்ணயம், பதவி உயர்வு, மாவட்ட மாறுதல், முன்னுரிமைப் பட்டியல், வாரிசு நியமனம் போன்ற அனைத்தையும் எளிதில் தெளிவாக முடிக்க இயலும்.
 மேலும் அலுவலகத்தில் பணிப் பதிவேடு சிதிலமடைந்தாலோ, வெள்ளம், தீ, இடிபாடு போன்றவற்றால் பாழடைந்தாலோ, காணாமல் போய்விட்டாலோ அரசு ஊழியர்கள் அச்சம் அடைய தேவையில்லை.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font