07/11/2016

துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு 9-ம் தேதி வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் கே.அருள்மொழி தெரிவித்தார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவி யாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3), வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 5,451 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. இத்தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தியது. சென் னையில் 325 மையங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 5,296 மையங் களில் தேர்வு நடத்தப்பட்டது.


சென்னை திருவல்லிக்கேணி என்கேடி தேசிய பெண்கள் மேல் நிலைப்பள்ளி மையத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள் மொழி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வே.ஷோபனா ஆகியோர் நேற்று காலை 11 மணி அளவில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, தேர்வு நடப்பதைப் பார்வையிட்டனர். பின் னர் செய்தியாளர்களிடம் அருள் மொழி கூறியதாவது:

குரூப்-4 தேர்வு எழுத 15 லட் சத்து 64 ஆயிரத்து 471 பேர் அனு மதிக்கப்பட்டனர். அவர்களில் 2,291 பேர் மாற்றுத்திறனாளிகள். சென்னையில் தேர்வு எழுத அனு மதிக்கப்பட்டவர்கள் 1 லட்சத்து 12 ஆயிரத்து 56 பேர். தேர்வுக்கூடத்தில் முறைகேடுகள் நடக்காமல் தடுக் கும் வகையில், 5,296 தலைமை கண்காணிப்பாளர்கள், 18,216 கண் காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர். 566 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, ஒவ்வொரு மாவட்டத் திலும் ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழுக்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத் தப்பட்டுள்ளன. தேர்வுக்கு அனு மதிக்கப்பட்டவர்களில் சுமார் 80 சதவீதம் பேர் தேர்வு எழுதியி ருக்கலாம் என்று தெரிகிறது. தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். கடந்த ஓராண்டில் மட்டும் 15 எழுத்து தேர்வுகள், 13 நேர்காணல் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, 22 தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

துணை ஆட்சியர் (ஆர்டிஓ), காவல்துறை துணை கண் காணிப்பாளர் (டிஎஸ்பி) உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்ப விரைவில் குரூப்-1 தேர்வு நடத்தப்பட உள்ளது. டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ( www.tnpsc.gov.in ) இதற்கான அறிவிப்பு 9-ம் தேதி (புதன்கிழமை) வெளி யிடப்படும். டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளைப் பொருத்த வரை, தகுதி, திறமை அடிப் படையில் மட்டுமே விண்ணப்பதாரர் கள் பணிகளுக்கு தேர்வு செய்யப் படுகின்றனர். தேர்வு எழுதுபவர்கள் இதை உணர்ந்து படிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கான அறி வுரைகள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட அறிவுரைகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் 7-ம் தேதி (இன்று) வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font