14/05/2014

தமிழ்நாடு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாநில தலைவர் எத்திராஜூலு நேற்று வெளியிட்ட அறிக்கை

மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் கூட்டு முயற்சி மற்றும் கடின உழைப்பால் பிளஸ் 2 தேர்வில் கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 2.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


ஆனால், 60 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி வீதம் வந்துள்ள மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. சுமார் 30 சதவீதம் வரை ஆசிரியர் பணியிடங்கள், 60 சதவீதம் ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் காலியாக உள்ள நிலையில், எஞ்சியுள்ள ஆசிரியர்களை வைத்தே அரசின் 14 வகை நலத் திட்டப் பணிகள் பள்ளி வேலை நாட்களில் நிறைவேற்றப்படுகின்றன.

அதுமட்டும் அல்லாமல் டிஎன்பிசி, டிஆர்பி, டிடிஎட் தேர்வுகள், தேர்தல் ஆணையத்தின்  வாக்காளர் கணக்கெடுப்பு பணி, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.இவற்றை கணக்கில் கொள்ளாமல் தலைமை ஆசிரியர்களை மட்டுமே பொறுப்பாக்குவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. இருந்தும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்கு உரியது. எனவே அந்த உத்தரவுகளை  ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு எத்திராஜூலு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

-தினகரன் 

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font