14/05/2014

அண்ணாமலைப் பல்கலை எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்: இதுவரை 5 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு இதுவரை 5 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.


விண்ணப்ப விநியோகம் கடந்த மே 2-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விண்ணப்ப விற்பனை ஜூன் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஜூன் 11-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பத்தை அண்ணாமலை நகரில் உள்ள பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திலும், தமிழகத்தில் உள்ள அனைத்து தொலைதூரக் கல்வி இயக்கக படிப்பு மையங்களிலும் ரூ.1500 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

அஞ்சல் மூலம்: அஞ்சல் மூலம் விண்ணப்பம் பெற விரும்புவர்கள் ரூ.1550-க்கான (ரூ.50 அஞ்சல் கட்டணம் சேர்த்து) சென்னையில் மாற்றத்தக்க வங்கி வரைவோலையை ​(D‌e‌m​a‌n‌d D‌r​a‌f‌t)​ பதிவாளர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ​(R‌e‌g‌i‌s‌t‌r​a‌r,​​ A‌n‌n​a‌m​a‌l​a‌i U‌n‌i‌v‌e‌r‌s‌i‌t‌y)​ என்ற

பெயரில் எடுத்து பதிவாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,

அண்ணாமலை நகர், சிதம்பரம்-608002 என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

தனி கலந்தாய்வு: மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே அனுமதி சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீடு விதிப்படியும், மாணவர்கள் மேல்நிலைப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்படும். சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். கலந்தாய்வு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய இரு படிப்புகளுக்கும் ஒரே விண்ணப்பம் போதுமானது என்கிறார் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ் மீனா.

எத்தனை இடங்கள்? எம்பிபிஎஸ் படிப்பில் மொத்தம் 150 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் மொத்தம் 100 இடங்களும் உள்ளன.

கட்டணம்: எம்பிபிஎஸ் படிப்பிற்கான ஆண்டு கட்டணம் ரூ.5,54,370; பிடிஎஸ் படிப்பிற்கான ஆண்டு கட்டணம் ரூ.3,50,370.

 விண்ணப்பங்கள் மற்றும் அனுமதி சேர்க்கை குறித்த விவரங்களை பல்கலைக்கழக இணையதளம் w‌w‌w.a‌n‌n​a‌m​a‌l​a‌i‌u‌n‌i‌v‌e‌r‌s‌i‌t‌y.ac.‌i‌n -​இல் தெரிந்து கொள்ளலாம். மேலும் பல்கலைக்கழக உதவி மைய

தொலைபேசி எண்கள் 04144- 238348, 238349 ஆகியவற்றை தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம் என அண்ணாமலை

பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

-தினமணி 

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font