13/03/2014

கல்வியின் வாயிலாக தனி மனித உயர்வு கிடைக்கிறது:பாரதியார் பல்கலை துணைவேந்தர் பேச்சு

கூடலூர் பாரதியார் பல்கலைக் கழக கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு மற்றும் இலக்கிய மன்ற நிறைவு விழா, நேற்று கோழிப்பாலம் கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் வடிவேல் வரவேற்றார்.
விழாவுக்கு கோவை பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சை தலைமை வகித்து பேசியதாவது:
"பத்தாண்டுகளுக்கு முன் இப்பகுதியில் பள்ளி படிப்பை முடிந்த மாணவர்கள் பலர் மேல்படிப்பை தொடர முடியாமல் இருந்தனர். இக்கல்லூரி துவங்கியதன் மூலம் இன்று ஏராளமானவர்கள், பட்ட படிப்பை முடித்துள்ளனர். தற்போது இக்கல்லூரியில் 2400 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.பலருக்கு எட்டாத இடத்திலிருந்த உயர் கல்வி, அரசு திட்டங்களினால், தற்போது அனைவருக்கும் எளிதாக கிடைக்கிறது."கல்வியின் வாயிலாக தனி மனித உயர்வு கிடைக்கிறது. எதிர்கால உயர்வுக்கு மாணவர்கள் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். இணைய தளங்களில் நல்ல விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்' என்றார்.

விளையாட்டு மற்றும் இலயக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு துணை வேந்தர் பரிசுகளை வழங்கினார்.விழாவில், பாரதியார் பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், பத்மநாதன், மங்கல்ராஜ், ஜெகதாலட்சுமணன், வால்பாறை கல்லூரி முதல்வர் ரமேஷ், ஆவின் இணையத்தின் தலைவர் மில்லர், நகராட்சி துணை தலைவர் ராஜாதங்கவேல், அ.தி.மு.க., ஒன்றிய செயலர் பத்மநாதன்,விரிவுரையாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். விரிவுரையாளர் பழனிசாமி நன்றி கூறினார்.

நன்றி:தினமலர்

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font