13/03/2014

கோவை அரசு துணிவணிக பெண்கள் மேல்நிலைப்பள்ளியை மையமாக கொண்டு வீடியோகான்பிரஸ்சிங் முறையில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பித்தல் நிகழ்வு

கோவை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவின் படி இணையதளம் வாயிலாக ஒருங்கிணைக்கப்பட்ட ஐந்து பள்ளிகளில், 'வீடியோகான்பிரஸ்சிங்' முறையில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பித்தல் பணி நேற்று நடந்தது.தமிழகத்தில் இணையதளத்தில் பள்ளி களை ஒருங்கிணைக்கும் திட்டத்தில், (கனெக்டிங் கிளாஸ்) மாநிலம் ழுவதும் 160 உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளிலும், 128 நடுநிலை பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது, நேற்று கோவை அரசு துணிவணிக பெண்கள் மேல்நிலைப்பள்ளியை மையமாக கொண்டு, கணுவாய், கவுண்டம்பாளையம், கணபதி மற்றும் பொள்ளாச்சி அரசு பள்ளி உட்பட ஐந்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை இணையதளத்தில் ஒருங்கிணைத்து கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்கள் கற்பிக்கப்பட்டன.

அரசு துணி வணிக மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சந்திரசேகர் கூறியதாவது:
பிற பள்ளிகளில் கற்பிக்கும் முறைகளை, இதன் மூலம் ஆசிரியர்களும் அறிந்துகொள்ளலாம். எளிமையான முறையில் பாடங்களை கற்பிக்கலாம். மாணவர்களும் ஆர்வத்துடன் இதில் பங்கேற்றனர் என்றார்.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font