23/03/2014

ப்ளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 10-க்குள் முடிக்க உத்தரவு

ப்ளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிகளை, ஏப்ரல், 10ம் தேதிக்குள் முடிக்க வேண்டும், என்று தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், ப்ளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 3ம் தேதி தொடங்கியது. எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வெழுதியுள்ளனர்.
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட
தேர்வுகள் முடிவடைந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.
கடந்த ஆண்டுகளில், மதிப்பீடு செய்யும் முன், "டம்மி' போடும் பணிகள், ஒரு வாரத்துக்கும் மேல் நடக்கும். நடப்பு கல்வியாண்டில் பார்கோடு எண், ஃபோட்டோவுடன் கூடிய விடைத்தாள் உள்ளிட்ட மாற்றங்களால், நேரடியாக மதிப்பீடு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.

ப்ளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிகளை, ஏப்ரல், 10ம் தேதிக்குள் முடிக்க வேண்டும், என்று தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், அதற்கான பயிற்சி வகுப்புகள் உள்ளிட்டவைகளுக்கு செல்ல வேண்டியிருக்கும். இதனால், முன்கூட்டியே விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிகளை முடிக்கும் வகையில், முடுக்கிவிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும், பாடவாரியாக உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, முன்கூட்டியே விடைத்தாள் எண்ணிக்கையும் திட்டமிடப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், குறிப்பிட்ட தேதிக்குள் எளிதாக விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிகள் முடிவடையும், என எதிர்பார்க்கப்படுகிறது.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font