23/03/2014

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்: 5,000 பேருடன் பறக்கும் படை ரெடி

இன்னும் மூன்று நாட்களில், 26ம் தேதி துவங்க உள்ள பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான இறுதிகட்ட ஏற்பாடுகளை, தேர்வுத்துறை, தீவிரமாக செய்து வருகிறது. மாணவர்களை கண்காணிக்க, 5,000 பேர் அடங்கிய பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

கடந்த மார்ச்-3 ல் துவங்கிய
பிளஸ் 2 பொது தேர்வு, 25-ம் தேதியுடன் முடிகிறது. அதற்கு அடுத்த நாள், 26ம் தேதியில் இருந்து, பத்தாம் வகுப்பு பொது தேர்வு துவங்குகிறது. தேர்வு துவங்க இன்னும் மூன்று நாட்களே இருப்பதால், இறுதிகட்ட ஏற்பாடுகளை தேர்வுத்துறை தீவிரமாக செய்து வருகிறது. மாநிலம் முழுவதும், 3,100 மையங்களில் (பள்ளிகள்), 50 ஆயிரம் அறைகள், தேர்வுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. மொழித்தாள் தேர்வுகளின்போது, ஒரு லட்சம் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதன்பின் நடக்கும் தேர்வுகளில், பணியாளர் எண்ணிக்கை, 50 சதவீதமாக குறையும். மாணவ, மாணவியரை கண்காணிக்க, 5,000 உறுப்பினர்கள் அடங்கிய பறக்கும் படை குழுக்களை, தேர்வுத்துறை அமைத்துள்ளது. இந்த குழுக்கள், எந்தெந்த மாவட்டங்களில் பணியில் ஈடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட, அனைத்து விவரங்களும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டு உள்ளன. 10.26 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வை எழுதுகின்றனர்.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font