24/11/2017

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை நமது சங்கத்தின் மாநில நிர்வாகிகள் சந்தித்த பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கை

 

வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே!
-மகாகவி பாரதியார்.

அன்பு நண்பர்களே!

எங்களுக்கு வல்லமை வேண்டும் என்று நாம்  விரும்புவதெல்லாம் நல்ல வழியில் நாலுபேருக்கு ஊழியம் செய்யவேண்டும் என்பதற்காகவே!

அது தவிர நமக்கு வேறு நோக்கம் எதுவுமில்லை!

நமது நோக்கங்களும்
நமது உழைப்பின் தாக்கங்களுமே நம்மை பணியாளர்களிடம் நிலைபெறச்செய்யும்!

சுமார் 25 ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்ட நமது அமைச்சுப்பணியாளர்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாய் வந்ததுதான்
பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம்

அத்தகைய சங்கத்தின் பிரதிநிதிகளாய்...
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களைஇன்று(23.11.2017) அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

ஒரு மாணவர் தேர்வுக்கு படிப்பதைப்போல் நமது கோரிக்கைகளை ஆர்வத்துடன் படித்துப்பார்த்தார் நமது அமைச்சர் அவர்கள்!

அவர் அலுவலகம் புறப்படும் நேரத்தில் நாங்கள் சந்தித்தோம்
அப்போதும் அவர் அவசரப்படவில்லை!
நமக்கென நேரத்தை ஒதுக்கி பேசினார்!

நாங்கள் கொடுத்தது நான்கு கோரிக்கைகள்!

 1)அமைச்சுப்பணியாளர்களுக்கு துணை இயக்குநர் பணியிடங்கள் தோற்றுவித்தல்.

2)  நேரடி நியமனம் மூலம் 50%உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுவதை  தடுத்தல்.

3)ஆய்வக உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களாக பணிமாறுதல் வழங்குதல்.

4) சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்தில் நியமிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு பணிவரன்முறை செய்து பதவி உயர்வு உள்ளிட்ட பணிப்பயன்களை வழங்குதல்...

இந்த கோரிக்கைகள் குறித்து ஒரு கலந்துரையாடலை நம்முடன் நடத்தினார் நமது அமைச்சர்!

 இவர்களுக்கு இதை நிறைவேற்றி தரவேண்டும் என்ற எண்ணமே அவரது கலந்துரையாடலின் நோக்கமாயிருந்தது.

*இந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் மாண்புமிகு முதல்வர் அவர்களுடன் ஆலோசித்து இதற்கான அரசாணைகள் பிறப்பிக்கப்படும் என்றும்*

நம்பிக்கையளித்து நம்மை அனுப்பிவைத்தார் மாண்புமிகு அமைச்சர் அவர்கள்!


எப்போதும் நம்முடன் இருக்கும் பாசமிகு சகோதரர் சௌந்திர ராஜன் அவர்களும்...

ஓய்வுக்குப்பின்னும் சங்கத்தை மறக்காத அண்ணன் ராஜேந்திர பிரசாத் அவர்களும்...
இந்த சந்திப்பிற்கு உறுதுணையாய்  இருந்தார்கள்!

வாய்மைதான் வெல்லும்!
எனவே நாமும்
 வெல்வோம்!

எளிமையான அன்புடன்...

ப.நீதிமணி
த.ல.சீனிவாசன்
ல.கோ.முருகன்.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font