02/04/2017

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்க் போட உதவும் புதிய தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில், எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு (ESLC) மதிப்பெண்கள், முதன் முறையாக, புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில், இந்த ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.அனைத்து பணிகளிலும், தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில், எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள், புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஓ.எல்.ஐ.சி.ஆர்., எனப்படும் தொழில்நுட்பத்தை, ஓரியான் இண்டியா சிஸ்டம்ஸ் எனும் தனியார் நிறுவனம் வழங்கி இருக்கிறது.


ஓரியான் இண்டியா சிஸ்டம்ஸ் நிறுவனம், கடந்த 24 ஆண்டுகளாக, பள்ளி மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு தேவையான மென்பொருள் சேவைகளை வழங்கி வருகிறது.ஓ.எல்.ஐ.சி.ஆர்., தொழில்நுட்பத்தின் மூலமாக, ஆசிரியர்கள் மாணவர்களின் விடைத்தாள்களை மிக எளிதாக மதிப்பீடு செய்ய முடியும். ஆசிரியர்கள் மதிப்பெண்களை வழங்கும்போதே, அந்த மதிப்பெண்கள், டிஜிட்டலாக்கம் செய்யப்பட்டுவிடும்.

அதனால் தேர்வு துறை, உடனடியாக மாணவர்களின் மதிப்பெண்களை அறிந்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, இந்த தொழில்நுட்பத்தால் மாணவர்கள் குறித்த தகவல்கள், 100 சதவீதம் மறைக்கப்பட்டு விடும்.கோவா கல்வி துறையும், இந்த ஆண்டு, ஓ.எல்.ஐ.சி.ஆர்., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மாணவர்களின் தேர்வுத் தாள்களை மதிப்பீடு செய்கிறது.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font