18/04/2017

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பதவிக்கான பணியிடங்கள் - தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்


அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருந்ததையடுத்து, அதற்கான எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இந்த எழுத்துத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன. இதையடுத்து, அந்தந்த மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப, தேர்வில் வெற்றிபெற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இதைத்தொடர்ந்து தகுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, கடந்த 15 மற்றும் 16-ம் தேதிகளில் வெளியிடப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களுக்கான நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி கலந்து கொண்டு 6 பேருக்கு ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. கே.ஏ. செங்கோட்டையன், பள்ளிக் கல்வித்துறை செயலர் திரு. உதயச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பணிநியமன ஆணைகளை பெற்றுக் கொண்டவர்கள் அரசுக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர்.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font