02/04/2017

துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்.7 வரை அவகாசம்.

தமிழக அரசின் பல்வேறு துறை களில் பணியாற்றும் ஊழியர்கள்மற்றும் அதிகாரிகள், அதே போல், அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் ஆகி யோரின் பதவி உயர்வுக்காக ஆண்டுக்கு 2 தடவை (மே, டிசம்பர்) துறைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இத்தேர்வுகளை டிஎன்பி எஸ்சி நடத்துகிறது.

அந்த வகை யில்,2017-ம் ஆண்டுக்கான முதலாவது துறைத்தேர்வுகள் மே 24 முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 31 என்று முதலில் நிர்ணயிக்கப்பட்டிருந் தது. இந்த நிலையில், துறைத் தேர்வுகளுக்கு ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிப் பதற்கான கடைசி தேதி ஏப்.7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கான ஹால் டிக்கெட்டை விண் ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு மே 17 முதல் 31 வரை டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் இருந்து ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ள லாம். தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 7 மற்றும் 16 தேதியிட்ட டிஎன்பி எஸ்சி செய்தி வெளியீட்டில் வெளியிடப்படும் என்று தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா கூறியுள்ளார்.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font