13/07/2016

பொள்ளாச்சி:பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை

அனைத்து கல்வி அலுவலகங்களுக்கும் கம்ப்யூட்டர், இன்டர்காம், ஜெராக்ஸ் வசதிகளை, மாநில மையம் செய்து தர வேண்டும் என, பள்ளிக்கல்வி நிர்வாக அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தின் பள்ளிக்கல்வி துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.கூட்டத்துக்கு, கல்வி மாவட்ட தலைவர் சுப்ரமணியகுமார் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். இணை செயலாளர் காளியப்பன் வரவேற்றார்.

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயல்படும் பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலகம் மற்றும் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள அரசு கட்டடத்தில் செயல்படும் தெற்கு உதவி தொடக்க கல்வி அலுவலகத்துக்கும் புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும்.
கடந்த 25 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ள இணைஇயக்குனர், துணை இயக்குனர் மற்றும் அலுவலக மேலாளர் பணியிடங்களை அமைச்சுப்பணியாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.

முதன்மை கல்வி அலுவலகங்களில், அமைச்சுப்பணியாளர் நிலையில் இருந்த நேர்முக உதவியாளர் (கணக்கு) பணியிடம் திரும்ப பெறப்பட்டுள்ளது. இது, பதவி உயர்வு கிடைக்கப்பெறாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. மாநில மையம் அல்லது வழக்கு மூலம் தீர்வு காண வேண்டும்.
மாவட்ட கல்வி அலுவலகம், உதவிதொடக்க கல்வி அலுவலகங்களுக்கு கூடுதல்பணியிடங்கள் ஏற்படுத்திட வேண்டும்.
மாவட்ட அளவில் தேவைக்கு அதிகமாக உள்ள கூடுதல் பணியிடங்களை கண்டறிந்து, பணியிடங்கள் அனுமதிக்கப்படாத பள்ளிகளுக்கு வழங்கிட வேண்டும். மாவட்ட அளவில் நிர்வாக சீரமைப்பு ஏற்படுத்திட வேண்டும்.அனைத்து கல்வி அலுவலகங்களுக்கும் கம்ப்யூட்டர், இன்டர்காம், ஜெராக்ஸ் மெஷின் வசதிகள் முழுமையாக ஏற்படுத்தித்தர, மாநில மையத்தை பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது, என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட இணைச்செயலாளர் பரமேஸ்வரன் நன்றி கூறினார்.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font