18/06/2016

ஆதார் எண் வழங்காத ஓய்வூதியர்கள் அதற்கான புகைப்படம் எடுத்த நகல் ரசீது சமர்ப்பித்து பென்ஷன் பெறலாம்,” என, மாவட்ட கருவூல அதிகாரி அனுஜா தெரிவித்தார்.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆண்டு தோறும் மார்ச்சில் உயிருடன் உள்ளதை நிருபிக்க துணை கருவூலங்களில் 'லைப்' சான்று வழங்கி புதுப்பித்து கொள்ள வேண்டும். இந்த ஆண்டு ஓய்வூதியம் பெறும் அனைவரும் ஆதார் எண் கட்டாயம் வழங்க வேண்டும். அது இருந்தால் தான் புதுப்பிக்க முடியும். ஜூன் மாதத்திற்குள் ஆதார் எண் வழங்காதவர்களுக்கு, ஜூலையில் பென்ஷன் நிறுத்தப்படும் என துணை கருவூல அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஏற்கனவே ஆதார் எண் வைத்திருந்தவர்கள் உடனே புதுப்பித்தனர். ஆதார் இல்லாதவர்கள் அவசரமாக மையங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்தனர். அடுத்த 40 நாட்களுக்குள் குறுந்தகவல் வரும். 'ப்ரவுசிங்' சென்டரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றனர். ஆனால் ஆதார் புகைப்படம் எடுத்த பலருக்கும் ஆதார் எண் தயாராக வில்லை.

இதற்கு காரணம் புகைப்படம் எடுக்கும் மையங்களில் இருந்து ஆதார் கார்டு தயாராகும் மையங்களுக்கு உரிய நாட்களில் அனுப்புவது இல்லை. அதனால் ஆதார் உரிய நாளில் தயார் ஆவது இல்லை என புகார் கூறுகின்றனர்.

அதுபோல சிலர் உடல்நிலை காரணமாக ஆதார் புகைப்படம் எடுக்க முடியாத நிலையிலும் உள்ளனர். இவர்கள் அடுத்த மாதம் பென்ஷன் வருமா என்ற ஏக்கத்தில் தவிக்கின்றனர்.

மாவட்ட கருவூல அதிகாரி அனுஜா கூறுகையில், 'மாவட்டத்தில் 11,800 பேர் பென்ஷன் பெறுகின்றனர். இதில் 10,300பேர் ஆதார் எண்களுடன் புதுப்பித்துள்ளனர்.

இதில் மாநில அளவில் தேனி மாவட்டம் 3வது இடத்தில் உள்ளது. 1,500 ஓய்வூதியர்கள் ஆதார் எண் வழங்க வேண்டியுள்ளது. ஆதார் எண் வழங்காதவர்கள் அதற்கான புகைப்படம் எடுத்த ரசீது நகலை கருவூலங்களில் சமர்ப்பித்தால் அதனை பெற்று கொண்டு பென்ஷன் வழங்க அனுமதித்துள்ளோம். ஆதார் எண் ஜூலை மாதத்திற்குள் வழங்காவிட்டால் ஆகஸ்ட் பென்ஷன் பெறுவதில் சிரமம் ஏற்படும். விரைவில் ஆதார் எண் வழங்க வேண்டும்,” என்றார்.

-தினமலர் 

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font