15/04/2016

விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயில் கூட்டம்!

தமிழகம் முழுவதும் நாளை துவங்க உள்ள, 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையங்களில், வாயில் கூட்டம் நடத்தி, துண்டு பிரசுரங்கள் வினியோகிக்க, ஆசிரியர் சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.

அதில், அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு திரட்டும் நிலை உள்ளதால், தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஏப்., 16ம் தேதி முதல், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், 16 மற்றும், 17ம் தேதிகளில் முதன்மை தேர்வர்கள் மட்டும் பங்கேற்கவும், 18ம் தேதி முதல், உதவி தேர்வர்கள் பங்கேற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், நிர்வாக வசதிக்காக, இரண்டு அல்லது மூன்று விடைத்தாள் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


ஒவ்வொரு மையத்திலும், 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். அவற்றில், முகாம் துவங்கும் முன், வாயிற்கூட்டங்கள் நடத்தி, ஆசிரியர் சங்கத்தின் நடவடிக்கை குறித்த துண்டு பிரசுரங்களை, ஆசிரியர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் சங்கங்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்த பழைய பென்ஷன் முறையை அமல்படுத்துதல், ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரை, சம்பள முரண்பாடுகளை களைதல் உள்ளிட்டவைகளுக்கு சாதகமாக தி.மு.க., தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது. அந்த அறிக்கைக்கு பெரும்பாலான ஆசிரியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. அவற்றை வெளிப்படையாக, இந்த வாயிற்கூட்டங்களில் வெளிப்படுத்தவும் திட்டமிட்டுள்ளன.

தேர்தல் நடத்தும் அரசு அலுவலர்களான, ஆசிரியர்களிடம், ஒரு சில கட்சிக்கு ஓட்டு போடும்படி மறைமுகமாக வலியுறுத்தவும் வாய்ப்புள்ளதாக கருதப்படுவதால், இந்த கூட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

-தினமலர் 

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font