05/03/2016

பி.எப்.,வட்டிக்கு வரி விதிப்பதை நிறுத்தி வைக்க பிரதமர் பரிந்துரை

வருங்கால வைப்பு நிதிக்கு வரி விதிப்பதை நிறுத்தி வைக்குமாறு, நிதியமைச்சகத்துக்கு, பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து இது தொடர்பான அறிவிப்பை நிதியமைச்சர் அருண் ஜெட்லி விரைவில் பார்லிமென்டில் வெ ளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்லிமென்டில், பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். 'தொழிலாளர்கள் ஓய்வு அடையும்போது பெறும், இ.பி.எப்., மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி.பி.எப்., தொகையில், 60 சதவீதத்தின் மீது ஓய்வுக்கால வரி விதிக்கப்படும்' என, பட்ஜெட்டில் கூறப்பட்டது.
இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து, இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இ.பி.எப்., தொகைக்கான வட்டிக்கு மட்டுமே வரி விதிக்கப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து இது தொடர்பான இறுதி முடிவை பிரதமர் எடுக்க வேண்டும் என எம்.பி.,க்கள் கூட்டத்தில் ஜெட்லி கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், பி.எப்., வட்டிக்கு வரி விதிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், இது தொடர்பாக விரிவாக ஆய்வு நடத்த வேண்டும் எனவும், நிதியமைச்சகத்துக்கு பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளார். இதனையடுத்து, பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று, தனது அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின்னர், இது தொடர்பான அறிவிப்பை ஜெட்லி பார்லிமென்டில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் தலையீட்டின் மூலம், 60 லட்சம் ஊழியர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது.

-தினமலர் 

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font