22/07/2014

டி.என்.பி.எஸ்.சி தேர்ந்து எடுத்த 1,395 இளநிலை உதவியாளர்கள் அரசு பள்ளிகளில் நியமனம்

தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாகக்கிடக்கின்றன. அந்த பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வை நடத்தியது. அதன் மூலம் 1,395 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அவர்களுக்கு பள்ளி கல்வித்துறையில் அதாவது அரசு பள்ளிக்கூடங்களில் நியமிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது.

இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுபடி பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2013-2014-ம் ஆண்டிற்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தொகுதி 4-ல் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு, பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 1395 பணிநாடுநர்களுக்கான நியமன ஆணை வழங்கும் கலந்தாய்வு இணையதளம் மூலம் நடைபெற உள்ளது. பணிநாடுநர்கள் தங்கள் முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலக கலந்தாய்வு மையத்தில் கலந்துகொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள (பணிநாடுநர்கள் முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டம்) பணிநாடுநர்களுக்கான கலந்தாய்வு 25-ந் தேதி அன்று காலை 11 மணிக்கும், இக்கலந்தாய்வில் சொந்த மாவட்டங்களில் போதுமான காலிப்பணியிடம் இல்லாததால் பணியிடம் கிடைக்கப்பெறாதவர்களுக்கும் மற்றும் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கும் 26-ந் தேதி காலை 9 மணிக்கும் பணிநாடுநர்களின் முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

கலந்தாய்வில் கலந்துகொள்ளும் பணிநாடுநர்கள் கலந்தாய்வு மையத்திற்கு கலந்தாய்வு நடைபெற உள்ள ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வருகைதர வேண்டுமென்றும், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட துறை ஒதுக்கீட்டு ஆணை, கல்விச் சான்றுகள், சாதிச்சான்று மற்றும் இதர ஆவணங்களை தவறாமல் கொண்டுவர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

-மாலைமலர்

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font