28/06/2014

பங்கேற்ற அனைவருக்கும் அந்தந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள்

மதுரை: பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடந்த பணி நிரவல் (சர்பிளஸ்) கலந்தாய்வில் பங்கேற்ற அனைவருக்கும், அந்தந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள் கிடைத்தன.

இதனால், ஜூனியர் ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு துாக்கியடிப்பது தவிர்க்கப்பட்டது.பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் விகிதம் ஆய்வு செய்யப்பட்டு கூடுதலாக உள்ள பணியிடங்கள் ஆண்டுதோறும் கணக்கிடப்படுகின்றன. இதன்படி கூடுதலாக (சர்பிளஸ்) உள்ள ஆசிரியர்கள், பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் அடிப்படையில் மாற்றப்படுவர்.

வெளி மாவட்டங்களுக்கு துாக்கியடிக்கப்படுவதால், ஆசிரியர்கள் அச்சத்தில் இருந்தனர். நேற்று, இதற்கான மாறுதல் கலந்தாய்வு நடந்தது. ஆனால் கலந்தாய்வு துவங்கியதும், 2014-15ம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட கூடுதல் பணியிடங்களும் சேர்த்து காண்பிக்கப்பட்டன; இதனால் 600 சர்பிளஸ் ஆசிரியர்கள் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்படாமல், உள் மாவட்டங்களிலேயே பணியிடம் பெற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், இன்று (ஜூன் 27) பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. இதிலும், நேற்றுபோல கூடுதல் பணியிடங்களை காண்பித்தால், அனைவருக்கும் உள் மாவட்டங்களிலேயே பணி கிடைக்கும்.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் நாகசுப்பிரமணியன், செயலாளர் முருகன் கூறுகையில், "சர்பிளஸ் ஆசிரியர்களை வேறு மாவட்டங்களுக்கு மாற்ற இருந்தது தவிர்க்கப்பட்டது மகிழ்ச்சி. அதேபோல் இன்று (ஜூன் 27) நடக்கும் பொது மாறுதலிலும் கூடுதல் பணியிடங்கள் காண்பிக்க வேண்டும். அப்படி காண்பிக்கும் பட்சத்தில், மதுரை மாவட்டத்தில் மட்டும் 200 பணியிடங்கள் கூடுதலாக கிடைக்கும்" என்றனர்.

-தினமலர்-கல்விமலர் 

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font