11/05/2014

மறுகூட்டல், விடைத்தாள் பெற விண்ணப்பிக்கலாம்

பிளஸ்2 தேர்வர்கள் பிளஸ்2 தேர்வு மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 2014ல் தேர்வு எழுதிய பிளஸ்2 தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய எந்தவொரு பாடத்திற்கும் விடைத்தாளின் நகல் கோரியோ அல்லது மறுகூட்டல் கோரியோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் பிளஸ்2 தேர்வர்கள் இன்று காலை 10 மணி முதல் வரும் 14ம் தேதி மாலை 5 மணி வரை (ஞாயிறு நீங்கலாக) பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளி மூலமாகவே, தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.


விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள், மறுகூட்டல் மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேலும், விடைத்தாள் நகல் பெற பகுதி - 1 மொழி -ரூ.550, பகுதி -2 (ஆங்கிலம்) -ரூ.550, ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.275 கட்டணம் பெறப்படுகிறது. இதை போன்று, மறுகூட்டல் செய்ய பகுதி -1 மொழி, பகுதி -2 மொழி (ஆங்கிலம்) மற்றும் உயிரியல் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.305, ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் - ரூ.205 கட்டணமாக பெறப்படுகிறது. விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாக செலுத்த வேண்டும்.

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது, வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதவிறக்கம் செய்து கொள்ளவும். மேலும் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ளலாம். விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும்.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font