22/05/2014

சிறப்பு டி.இ.டி., தேர்வில் 4,476 பேர் பங்கேற்பு

தமிழகத்தில், நேற்று நடந்த, மாற்றுத் திறனாளிக்கான, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), 4,476 பேர், பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகள் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கென, தனியாக, சிறப்பு டி.இ.டி., தேர்வை (இரண்டாம் தாள்) நடத்த, முதல்வர், ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி, இத்தேர்வு, நேற்று, மாநிலம் முழுவதும், 39 மையங்களில் நடந்தது. காலை, 10:00 மணி முதல், பகல், 2:00 மணி வரை, தேர்வு நடந்தது.


மாற்றுத்திறனாளிகளுக்காக, கூடுதலாக, ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது. இதில், பார்வையற்றவர்கள், 1,175 பேரும், இதர குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள், 3,301 பேரும் பங்கேற்றனர். தேர்வெழுத பதிவு செய்தவர்களில், 218 பேர், "ஆப்சென்ட்.' தேர்வு எளிதாக இருந்ததாக, தேர்வர்கள் தெரிவித்தனர். சமூக அறிவியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட, 94வது கேள்வி மட்டும், பாடத்திற்கு சம்பந்தம் இல்லாததாக இருந்தது என, சிலர் தெரிவித்தனர். நான்கு வகை குறியீடுகளை கொடுத்து, அதை, நான்கு விடைகளுடன் பொருத்துமாறு, கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. இந்த கேள்வி, பாடத்தில் வரவில்லை என, பார்வையற்ற தேர்வர்கள் தெரிவித்தனர். விடைத்தாள் திருத்துவதற்கு முன், இந்த விவகாரம் குறித்து, ஆய்வு செய்யப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தெரிவித்தது.

-தினமலர் 

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font