24/05/2014

பிளஸ் 2 தேர்வைப்போல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விலும், கோவை மாணவர்கள் சாதனை சரித்திரத்தை எழுதியுள்ளனர்

மாநில அளவில், கடந்த ஆண்டு எட்டாம் இடத்தில் இருந்த கோவை, தற்போது 95.6 சதவீதம் பெற்று ஐந்தாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று அரசு தேர்வுத்துறையால் வெளியிடப்பட்டது.
கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கோவை மாவட்டத்தில், மாநில அளவில் முதல் இடம் (பிரெஞ்ச்) ஒரு மாணவரும், மாநில அளவில் இரண்டாம் இடத்தை ஐந்து மாணவர்களும், மூன்றாம் இடத்தில் 16 மாணவர்கள் உட்பட, மாநில அளவிலான ரேங்க் பட்டியலில், முதல் மூன்று இடங்களுக்கான பட்டியலில், கோவை மாணவர்கள் 22 பேர் இடம்பெற்று சாதனை படைத்துள்ளனர். மாநில அளவில் நான்காம் இடத்தை மட்டும் கோவை மாவட்டத்தில், 38 பேர் பெற்றுள்ளனர்.
கோவை மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 43 ஆயிரத்து 49 மாணவர்கள் எழுதியுள்ளனர். இதில், 41 ஆயிரத்து 154 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 5.38 சதவீத தேர்ச்சி விகிதம் அதிகரித்து, தற்போது 95.6 சதவீத ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளது.

இக்கல்வியாண்டில், கோவை மாவட்ட தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதற்கு அரசு பள்ளிகளின் ஒத்துழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. 146 அரசு பள்ளிகள் பங்கேற்ற இத்தேர்வில், முதல் முறையாக 91.58 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், 26 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில்: 

''பொதுத்தேர்வுகளை பொறுத்தவரை, கோவை மாவட்டம் சிறந்த செயல்பாடுகளை வெளிபடுத்தியுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளும் முன்னேறி வருவது மகிழ்ச்சிக்குரியது. கடந்த ஆண்டு, குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற பள்ளிகள், கற்றல் திறன் குறைவாகவுள்ள மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்தப்பட்டது. மேலும், மாநிலத்தில் முதல் முறையாக, காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு, ஆண்டு துவக்கத்திலேயே நிரப்பப்பட்டது. தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களின் சிறந்த ஒத்துழைப்பு மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்துள்ளது. மாநில அளவில், மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து 22 பேர் தரப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது இதுவே முதல் முறை,'' என்றார்.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font