11/05/2014

மே 21 முதல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் மே 21-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் மார்ச் 3 முதல் மார்ச் 25-ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடைபெற்றது. மொத்தம் 2,242 தேர்வு மையங்களில் 8.79 லட்சம் மாணவ, மாணவியர் இந்தத் தேர்வை எழுதினர். பள்ளிகளின் மூலமாக 8.26 லட்சம் பேரும், தனித் தேர்வர்களாக 53 ஆயிரம் பேரும் தேர்வுகளை எழுதினர்.


தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 9) வெளியானது. 90.60 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.பள்ளிகள் மூலம் தேர்வு தேர்வு எழுதிய 8.20 லட்சம் மாணவ, மாணவிகளுக்கும் மே 21-ஆம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. தனித் தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி ஏற்கெனவே தொடங்கியுள்ளது.

பி.இ. படிப்பில் சேர விண்ணப்பிக்க...பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்க மே 20-ஆம் தேதி கடைசி தேதியாகும். எனவே, பி.இ. விண்ணப்பத்துடன் இணையதளம் மூலம் பெறப்படும் மதிப்பெண் பட்டியலை இணைத்தால் போதுமானது. மாணவர்கள் கலந்தாய்வுக்கு வரும்போது பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழைக் கொண்டு வர வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜாராம் தெரிவித்தார்.

-தினமணி

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font