22/05/2014

2012 இல் தேர்வு எழுதியோருக்கும் 5% தளர்வு கேட்டு மீண்டும் முதல்வரிடம் மனு

2012ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் சார்பில், கே.புவனேஸ்வரி, எம்.ஏ.ரஷீதா பேகம், டி.சுதாமணி, எம்.சக்தி, எஸ்.அருண்குமார் உள்படபல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு மனு அனுப்பியுள்ளனர்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
மாணவர்களுக்கு சிறப்பான கல்வி கிடைக்க, தங்களின் பொற்கால ஆட்சியில் தான் ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் அதிகளவில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினர், தகுதி மதிப்பெண்ணான 60 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதம் விலக்கு அளிக்க கோரினர். இதைத் தொடர்ந்து, கடந்த நிதிநிலை அறிக்கை சட்டமன்ற கூட்டத் தொடரின் போது, அவர்களுக்கு 5 சதவிகித இடஒதுக்கீடு அளித்து ஆசிரியர் பணியில் சேர உதவி புரிந்தீர்கள்.


இதேபோல, 2012ம் ஆண்டு முதன் முதலாக ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கும் சலுகை அளிக்க வேண்டும். தகுதி தேர்வில் வென்றதற்கான சான்று மட்டுமாவது வழங்கினால், எங்களைப் போன்று நிபந்தனையின் அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர்கள், எங்கள் பணியை தடையின்றி தொடர முடியும்.


மேலும், இந்தச் சான்றிதழ் 7 ஆண்டுகள் வரை செல்லத்தக்கது என தேசியக் கல்வி வாரியம் அறிவித்துள்ளதால் வாய்ப்புக் கிடைக்கும்போது, பலரும் ஆசிரியர் வேலையில் சேர முடியும்.முதல்வர், எங்களின் கோரிக்கையையும் ஏற்பார் என்று நம்புகிறோம்.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font