11/05/2014

113 அரசு பள்ளிகளில் 100 விழுக்காடு தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வில் தமிழ் நாடு முழுவதும் 113 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் தேர்ச்சி விகி தம் 90.6 சதவீதம் ஆகும்.இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 2.6 சதவீதம் அதிகம். 3,882 மாணவ மாணவிகள் கணக்கில் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.


இயற்பியலில் 2,710 பேரும், வேதியலில் 1,693 பேரும் 200க்கு 200 எடுத்துள்ளனர்.இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 5 சதவீதம் அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு 79 சத வீதமாக இருந்த தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 84.1 சத வீதமாக உயர்ந்து உள்ளது.தமிழ்நாடு முழுவதும் 2,403 அரசு மேல் நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் 113 அரசு பள்ளிகள் 100 சத விதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

இது பற்றி தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக் குனர் ராமேஸ்வரமுருகன் கூறும்போது, இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து அரசு பள்ளிகளையும் மாணவ,மாணவிகளை யும் ஊக்குவித்தனர். படிப்பில் பின்தங்கிய மாணவ- மாணவி களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது. இதுதான் தேர்ச்சி விகிதம் அதி கரிப்புக்கு காரணம் என்றார்.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font