14/04/2014

தபால் ஓட்டு சீட்டு தயார்!

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள், தேர்தல் பணி படிவம் (இ.டீ.சி) மூலமாக ஓட்டு போட வசதி செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பணி படிவம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த படிவம் இருந்தால், அரசு அலுவலர் தான் வசிக்கும் பகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிக்குள் எந்த ஓட்டு சாவடி யில் ஓட்டு போட அனுமதி வழங்கப்படும். பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலமாக தபால் ஓட்டு போடுபவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறையும் என தெரிகிறது. கோவை மாவட்ட அளவில் 15 ஆயிரம் தபால் ஓட்டு படிவம் மற்றும் தபால் உறை (படிவம் 13 ஏ) அச்சடிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் பெயர், கட்சியின் பெயருடன் இந்த படிவம் தயார் செய்யப்பட்டுள்ளது.

சின்னம் அச்சடிக்கப்படவில்லை. வரும் 15ம் தேதி சட்டமன்ற தொகுதிகள் வாரியாக ஓட்டு சாவடி அலுவலர்களுக்கு இறுதி கட்ட பயிற்சி வகுப்பு நடக்கவுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் தபால் ஓட்டு சீட்டு வழங்கப்படும். அன்றைய தினம் கோவை, பொள்ளாச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் தபால் ஓட்டு பெட்டி வைக்கப்படும். தேர்தல் பணியில் உள்ள அலுவலர்கள் இந்த ஓட்டு பெட்டியில் தபால் ஓட்டு போடலாம். ஓட்டு எண்ணிக்கை நடக்கும் ஒரு மணி நேரம் முன்பு வரை தபால் ஓட்டு போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font