13/04/2014

டி.டி.எட் தேர்வு, தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் : தேர்வுத்துறை அறிவிப்பு

ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் படித்து தேர்வு எழுதி, தோல்வி அடைந்த மாணவர்கள் 10ம் தேதி முதல் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. அரசு ஆசிரியர் பள்ளிகளில் டிடிஎட் தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வு நடக்கிறது.
இந்த தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் www.tndge.in என்ற இணைய தளத்தில்  பக்கம் 1 முதல் 3 வரை உள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்ய வேண்டும். அந்த விண்ணப்பத்துடன் ஏற்கெனவே தேர்வு எழுதி பெற்ற மதிப்பெண் சான்றுகளின் நகல்களை கண்டிப்பாக இணைத்து அந்தந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.


மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கணினி மூலம் போட்டோ எடுக்கும் கருவிகள் மூலம் போட்டோ எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளதால் அங்கேயே போட்டோவுடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து, அதே மையத்தில் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணத்தை பொருத்தவரை ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50, மதிப்பெண் சான்றுக்கு(முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு) தலா ரூ.100, பதிவு மற்றும் சேவைக் கட்டணம் ரூ.15, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 10ம் தேதி முதல் 17ம் தேதி வரை சமர்ப்பிக்க வேண்டும்.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font