29/03/2014

இளநிலை உதவியாளர், தட்டச்சர்கள் பதவி உயர்வு பெற பயிற்சி:பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் தஞ்சை மாவட்ட அமைப்புக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

தஞ்சை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க அமைப்புக்குழு கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராசையா தலைமை தாங்கினார். இளங்கோவன், அறவாழி, திருமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநில தலைவர் பால்ராஜ், பொதுச்செயலாளர் ராஜேந்திரபிரசாத், மாநில அமைப்பு செயலாளர் சீனிவாசன், தலைமை செயலாளர் முருகன், அரசு அலுவலர் கழக மாவட்ட தலைவர் சதா.கருணாநிதி, மாவட்ட செயலாளர் தரும.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

மண்டல மாநாடு

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தஞ்சை மாவட்டத்தில் மே மாதத்தில் மாவட்ட தேர்தலை நடத்துவது. ஜூன் 2-வது வாரத்தில் தஞ்சை, நாகை, மற்றும் திருவாரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய சோழமண்டல மாநாட்டினை தஞ்சையில் நடத்துவது. அதற்கு முன்னேற்பாடாக அமைப்புக்குழு தலைவராக ராசையா, செயலாளராக இளங்கோவன், மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர்களாக அறவாழி, திருமாறன், ரமேஷ், பாலசுப்பிரமணியன், சாமிநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பயிற்சி

கருணை அடிப்படையில் நியமனம் பெற்ற இளநிலை, உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்களுக்கு நீண்டகாலமாக பணிவரன்முறை செய்யப்படாமல் உள்ளது. அவர்களுக்கு விரைவில் பணிவரன்முறை செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனரை கேட்டுக்கொள்வது. இதன் காரணமாக பவானிசாகரில் பயிற்சி பெற இயலாமல் 20 ஆண்டுகள் வரை இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்கள் பதவி உயர்வு பெற இயலாத நிலை உள்ளது. இதனை போக்க பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிகளில் துப்புரவாளர்களாக குறைந்த ஊதியத்தில் தற்போது நியமனம் செய்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் மற்றும் காவலர்களுக்கான ஊதிய விகிதத்தில் ஊதியம் மாற்றி அமைத்திட உரிய நடவடிக்கையினை தொடர்ந்து எடுத்து மேம்பட்ட ஊதியம் பெற்றத்தர கேட்டுக்கொள்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நன்றி:தினத்தந்தி-தஞ்சாவூர் பதிப்பு-26.3.2014

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font