25/03/2014

புதிய ஓய்வூதியத் திட்ட விவரம்: இனி தகவல் மையம் பராமரிக்கும், ஏ.ஜி.எஸ் அலுவலகம் செல்ல வேண்டாம்

அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்ட விவரங்கள் அரசு தகவல் தொகுப்பு மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் (ஏ.ஜி.எஸ். அலுவலகம்) தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில துணை கணக்காயர் வர்ஷினி அருண் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:


அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தொடர்பான பணிகள் அனைத்தும், ஜனவரி 1ம் தேதி முதல் தமிழக தகவல் தொகுப்பு மையத்திடம் ஒப்படைக் கப்பட்டுள்ளன. இனி 2013, 14ம் ஆண்டு கணக்கு முதல் இத்திட்டம் தொடர்பான பணிகள் அனைத்தும் அரசு தகவல் தொகுப்பு மையத்தால் பராமரிக்கப்படும்.

தொடர்பு கொள்ள…..

மேலும் 2012-13ம் ஆண்டுக்கான சந்தாதாரர்கள் அனைவரின் கணக்கு விவரப் பட்டியல்கள் அந்தந்த கருவூல அலுவலர்கள் மூலம் வரைவு மற்றும் வழங்கல் அலுவலர்களுக்கு அனுப்பும் பொருட்டு, சென்னை கருவூல கணக்கு இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.இனி அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்த அனைத்து விவரங்களுக்கும் சந்தாதாரர்கள், ஆணையர், அரசு தகவல் தொகுப்பு மையம், சென்னை - 600025. என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும். தமிழக அரசு ஊழியர்களுக்கான 2011-12ம் ஆண்டின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு அறிக்கை, குறுந்தகடுகளில் பதிவு செய்யப்பட்டு, கருவூல அதிகாரி களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் சந்தாதாரர்கள் டி.டி.ஓ.,வை அணுகி அவரவர் கணக்கு அறிக்கையை பெற்றுக் கொள்ளலாம். இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், 044-24314477 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font