23/03/2014

அண்ணாமலை பல்கலையில் பொது கலந்தாய்வு முறை அறிவிப்பு

அண்ணாமலை பல்கலைக்கழகம் அரசு பல்கலையாக மாற்றப்பட்டுள்ளதால் தொழிற்கல்வி நிலையங்களுக்கான சேர்க்கைச் சட்டம் விதிமுறைகள்படி, மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு முறையில் நடைபெறும் என பல்கலைக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அண்ணாமலை பல்கலைக் கழக நிர்வாக சிறப்பு அதிகாரி ஷிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்
கழகத்தில் பல்வேறு தொழிற்கல்வி படிப்புகளுக்கு, அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு என தனியாக கடந்த ஆண்டு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் 'கவுன்சிலிங்' முறைகள், மாணவர்கள் சேர்க்கை நடந்தது. கடந்த 2013ல் அண்ணாமலை பல்கலைக் கழகம், அரசு பல்கலைக் கழகமாக அமலுக்கு வந்தது. இதனால் பல்கலைக் கழக தொழிற் கல்வி படிப்புகளுக்கு, தமிழ்நாடு தொழிற்கல்வி நிலையங்களுக்கான சேர்க்கை சட்டம் 2006-ன் படி, மாணவர்கள் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்த அரசு ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. வரும் 2014-15ம் ஆண்டுக்கான தொழிற் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு அரசு இடஒதுக்கீடு விதிகள்படி நடைபெறும். இதற்கான விண்ணப்ப வினியோகம், கலந்தாய்வு மற்றும் மாணவர்கள் சேர்க்கை குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font