31/03/2014

டிஸ்லெக்சியா பாதிப்பு: 50 மாணவர்களுக்கு தேர்வெழுத கூடுதலாக ஒரு மணி நேரம்

தர்மபுரி மாவட்டத்தில் மறதி நோயால்(டிஸ்லெக்சியா) பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் 50 பேருக்கு, தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் கல்வித்துறை வழங்கியுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி பொது தேர்வு நடைபெற்று வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 69 மையங்களில் 27,606 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மாவட்டத்தில் 6 இடங்களில் 10 வினாத்தாள்கள் கட்டுக்காப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களாக 20 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக 26 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதே போல, டிஸ்லெக்சியா மாணவர்கள் 50 பேருக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் விவேகானந்தன் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் டிஸ்லெக்சியா என்ற மறதி நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் தேர்வு எழுத கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது, என்றார்.தர்மபுரி அரசு மருத்துவமனை டாக்டர்களிடம் இந்த நோய் பாதிப்பு பற்றி கேட்டபோது, ‘மரபணு குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி மறதி ஏற்படும். ஒரே மாதிரியாக இருக்கமாட்டார்கள்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அனைத்து குழந்தைகளை போலவே புத்திசாலி குழந்தைகளாக இருப்பார்கள். ஆனால் எழுத படிக்க, சிரமப்படுவார்கள்‘ என்றனர்.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font