26/03/2014

தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலங்களில் இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலங்களில் இன்று 10-ம் வகுப்பு  பொதுத்தேர்வு தொடங்கியது. மொத்தம் 11,552 பள்ளிகளைச் சார்ந்த 10,38,876 மாணவ/மாணவியர்கள், 286 தேர்வு மையங்களில், 77,647 தனித் தேர்வர்கள் என மொத்தம் 11 இலட்சத்து 13 ஆயிரத்து 523 பேர்  தேர்வை எழுதுகின்றனர். இவை தவிர, புழல், திருச்சி சிறைச்சாலைகளில் 119 சிறைவாசிகளும் இத்தேர்வை எதிர்கொள்கின்றனர்.
இந்த முறை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பல்வேறு புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. விடைத்தாள் புத்தக பக்கங்களின் எண்ணிக்கை 30-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. வினாத்தாள்கள் சீலிடப்பட்ட உறையிலிருந்து மாணவர்கள் முன்னிலையில்தான் பிரிக்கப்பட்டு, விநியோகிக்கப்படும். சென்னையில்...: சென்னையில் 588 பள்ளிகளிலிருந்து மொத்தம் 56,556 மாணவர்கள் 207 மையங்களில் தேர்வை எழுத உள்ளனர். இவர்களில் 27,943 பேர் மாணவர்கள், 28,613 பேர் மாணவிகள் ஆவர். இந்த ஆண்டு தமிழ் வழியில் தேர்வு எழுதும் 7 லட்சத்து 31 ஆயிரத்து 430 மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேட்டைத் தடுப்பதற்காக, தேர்வு மையங்களை 5 ஆயிரம் பேர் கொண்ட கொண்ட கண்காணிப்புப் படையினர் தீவிரமாகக் கண்காணிப்பார்கள். ஒரு சில மையங்களில் கண்காணிப்புக் குழுவினர் தேர்வு ஆரம்பித்து முடியும் வரை, அங்கேயே இருந்து தேர்வுப் பணிகளைப் பார்வையிடுகின்றனர்.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font