14/02/2013

கோவை கல்வி மாவட்டத்தை இரண்டாக பிரிக்க கோரிக்கை

கோவை கல்வி மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என கல்வி துறை நிர்வாக அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 
பள்ளி கல்வி நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் கோவையில் நடந்தது. மாநில தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். தொடக்க கல்வி அலுவலகங்களில் காலிப்பணியிடங்கள் தற்போது நிரப்ப பட்டுள்ள நிலையில், கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் மாற்றுப்பணி என்ற பெயரிலும் , கணக்கு தொகுப்பு பணி என்ற பெயரிலும் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களை நியமனம் செய்து வருவதால் பணியாளர்கள் பணியாற்றும் அலுவலகத்தில் பணி பாதிக்கப்படுகிறது. எனவே கணக்கு தொகுப்பு பணிக்கு சுழற்சி முறையில் அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலகத்திலும் உள்ள பணியாளர்களையும் நியமனம் செய்ய வேண்டும். 
கோவை கல்வி மாவட்டத்தில் 204 அரசு பள்ளிகளும், 56 உதவி பெறும் பள்ளிகளும் செயல்படுகின்றன. உதவி பெறும் பள்ளிகளில் பணி சார்ந்த விவரம் மற்றும் பணப்பயன்கள் மாவட்ட கல்வி அலுவலர் நிலையிலேயே செய்யப்படுகிறது.
 நலத்திட்டப்பணிகள் அதிக அளவில் உள்ளதால்  கோவை கல்வி மாவட்டத்தை கோவை வடக்கு, கோவை தெற்கு என இரண்டாக பிரிக்க வேண் டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் குணசேகரன், மனோகரன், அருண்குமார், நாகராஜன், அரிகுமார், ரங்கராஜ், கணேசன், ஜெரால்டு ஸ்டீபன், விஜயகுமார், அறிவழகன், தர்மலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.                                                                      Thanks to: http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=149487

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font