15/04/2014

7 ஆவது ஊதியக் குழுவின் படி ஊதிய நிர்ணயம் செய்யும் போது 2.24 ஆல் பெருக்க வேண்டும்.

Estimated 7th Pay Commission pay scales as on 01.01.2016- view of gconnect 

Even as the 7th Pay Commission was constituted recently by Government for revision of Pay and allowances of Central Government Employees, Railway Employees and Defence Personnels, wide spread speculations on projected 7th Pay Commission pay scales are already going on. Blogs that provide Central Government Employees news and information have already started estimatingpossible 7th CPC pay scales based on different ideas.GConnect.in was the first site that launched 6th Pay Commission Pay, Pension and arrears Calculator which received atmost popularity among Central Government Employees and CG Pensioners.In respect of revised Pay and allowances of 7th Pay Commission also GConnect would come up with similar pay and pension calculators.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 100% கடந்ததால், 25% கூடுதல் படிகள் பெற வாய்ப்பு

The Fifth Central Pay Commission had recommended uniform neutralization of DA at 100% to employees at all levels and increase in DA calculation too,according to the 12 monthly average of AICPIN for Industrial Workers (1982=100) as on 1st January 1996, of 306.33. The Linking Factor of 303.33 has now changed to 115.76. This was calculated as 4.63 in the 4th CPC. It was due to this change that the Dearness Allowance has increasedin recent years.

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக 1837 Probationary Officers பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: State Bank of India (SBI)

மொத்த காலியிடங்கள்: 1837

பணி: Probationary Officers

சம்பளம்: மாதம் ரூ.16,900 (with 4 increments) 14500-600/7-18700-700/2-20100-800/7-25700

தபால் வாக்கு அளிக்க உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு

தபால் வாக்கு அளிக்க உள்ள வாக்குசாவடி அலுவலர்களுக்கு
அன்புள்ள ஆசிரியர் நண்பர்களே அனைவரும் தபால் ஓட்டு போடுங்கள்.

14/04/2014

படைப்பாற்றல் இருந்தால் போதும்; உயர்ந்த நிலை அடையலாம்

திருப்பூரில் நடந்த தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி நேற்றுடன் நிறை வடைந்தது. கல்வியாளர்களின் கருத்துக்களை கேட்க, ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள், சந்தேகங்களை நிவர்த்தி செய்து புத்துணர்ச்சியுடன் சென்றனர்....


குரூப் 1 தேர்வில் அதிகளவில் பெண்களே வெற்றி!

துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட 25 பதவிகளுக்காக நடந்த, குரூப் 1 தேர்வில், 15 இடங்களை பெண்களே தட்டிச் சென்றனர்.முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், தேர்வுபெற்ற 25 பேருக்கு, பணி நியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடந்தது. 25 பேரில் 15 பேர் பெண்கள். நெய்வேலியைச் சேர்ந்த டினா குமாரி 623 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.

ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்

நாகை மாவட்டம், சீர்காழி தாலுகாவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, தேர்தல் விதிமுறைகளை மீறி, நீண்ட தூரத்தில் உள்ள இடங்களில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சீர்காழி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

-தினமலர் 

கல்வி கடன் தள்ளுபடி திட்டம் நிறுத்த உத்தரவு

லோக்சபா தேர்தல் நடைபெறுவதால், கல்வி கடனுக்கான வட்டி தள்ளுபடி திட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்கும்படி, மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.கல்வி கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்யும் திட்டத்தை, மத்திய நிதி அமைச்சகம் அறிவித்தது.

வி.ஏ.ஓ. தேர்வு: விண்ணப்பிக்க ஏப்-15 கடைசி நாள்

தமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 342 கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு
விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (ஏப். 15) கடைசி நாளாகும்.

ஆழ்துளைக் குழிகளில் விழும் குழந்தைகளை காப்பாற்ற வந்துவிட்டான் எந்திரன்!

கடந்த 10 ஆண்டுகளில் 30 குழந்தைகள் ஆழ்துளைக் குழிகளில் விழுந்திருக்கிறார்கள். அவர்களில் ஓரே ஒரு குழந்தை மட்டும் உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறது.

தபால் ஓட்டு சீட்டு தயார்!

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள், தேர்தல் பணி படிவம் (இ.டீ.சி) மூலமாக ஓட்டு போட வசதி செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பணி படிவம் வழங்கப்பட்டுள்ளது.

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களின் பணி என்ன? சிலைடு ஷோ விளக்கம்

13/04/2014

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் பெற்ற 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டு சமூக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்கள் அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் 24.4.2014- அன்று நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அரசு பொது விடுமுறை அளித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

தொடக்கக்கல்விதுறையில் இடைநிலை ஆசிரியரியருக்கு மாநில அளவில் பதவி உயர்வு நடைமுறைபடுத்திட தொடரப்பட்ட வழக்கு வருகிற 24.04.2014 அன்று விசாரணைக்கு வர உள்ளது.

அரசாணை எண்.1383/கல்வி/1988, நாள்.23.08.1988 (தொடக்கக் கல்வி சார்நிலை பணி விதிகள்) விதி 9 ஆனது உச்ச நீதிமன்ற தீர்ப்பு இந்திய அரசியல் சட்டம் பிரிவு 14,15 மற்றும் 16க்கு எதிராக உள்ளது. ஒன்றிய அளவில் பதவி உயர்வு வழங்குவது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என கடந்த 2011 ஆம் ஆண்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அரசு 4வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் அரசு இன்று வரை பதில் தாக்கல் செய்யவில்லை.

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், தங்களது கடமையை சரியாகச் செய்யாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை-பிரவீண்குமார் பேட்டி

தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் போலீஸாரும் அரசு ஊழியர்களும் தபால் மூலம் வாக்கு செலுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார்
கூறினார்.

அரசு பள்ளி மின் கட்டணத்தை நேரடியாக செலுத்த இயக்குனரகம் முடிவு

அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை செலுத்துவதில், குளறுபடி ஏற்பட்டு உள்ளது. இதை சரி செய்ய, இயக்குனரகம் மூலம் நேரடியாக கட்டணத்தை செலுத்த, முடிவு
செய்யப்பட்டு உள்ளது.

சிறப்பு டி.இ.டி., தேர்வு: ஏப்ரல் 22 க்குள் ஹால் டிக்கெட்

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (டி.இ.டி.,), ஹால் டிக்கெட்  ஏப்ரல் 22 ம் தேதிக்குள், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வு: விண்ணப்பம் சார்ந்த விபரம்

ஜூன் மாதம் நடக்க உள்ள, ஆசிரியர் பயிற்சி தனி தேர்வுக்கு,ஏப்ரல் -17 வரை, தேர்வுத் துறை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் அறிவித்து உள்ளார்.

பள்ளியில் பிள்ளைகள்... எத்தனை தொல்லைகள்! ஏன் என்று கேட்க ஆளில்லையோ?

அரசு துவக்க பள்ளிகளில், அடிப்படை பணியாளர்கள் இல்லாததால், சுகாதாரப்பணிகளில் பிஞ்சு மாணவர்களை ஈடுபடுத்தும் அவலம்
தொடர்கிறது.துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ தேர்வு ஒரு வாரத்தில் துவங்கவுள்ளது. தற்போது, தேர்வுக்கு தயாராக வேண்டிய நிலையில், சில அரசு பள்ளிகளில், சுகாதார பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். மாநில அளவில் 90 சதவீத துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், அடிப்படை மற்றும் துப்புரவு பணியாளர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தபாலில் அனுப்பிய சான்றுகள் மாயம்: இழப்பீடு வழங்க அஞ்சல் துறைக்கு உத்தரவு

அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய சான்றிதழ்கள் சென்று சேரவில்லை என, தொடரப்பட்ட வழக்கில், 'அஞ்சல் துறை, 8,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

டி.டி.எட் தேர்வு, தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் : தேர்வுத்துறை அறிவிப்பு

ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் படித்து தேர்வு எழுதி, தோல்வி அடைந்த மாணவர்கள் 10ம் தேதி முதல் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. அரசு ஆசிரியர் பள்ளிகளில் டிடிஎட் தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வு நடக்கிறது.

மே 21-ல் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெறும். இதற்கான ஹால் டிக்கெட்டு விண்ணப்பதார்களுக்கு ஏப்ரல் 22-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் தண்.வசுந்தராதேவி தெரிவித்தார்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் 2014-2015ஆம் கல்வியாண்டிற்கு உண்டான பள்ளி மாணவ மாணவியர் பயண அட்டைகள் கால தாமதமின்றி வழங்கிட மேற்கொள்ள வேண்டியது- சார்பு

IGNOU GENUINENESS APPLICATION FORMAT

தற்போது IGNOU  இரண்டாமாண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு PROVISIONAL CERTIFICATE, GRADE CARD வந்து கொண்டுள்ளது. வந்தவுடன் GENUINENESS CERTIFICATE பெற விண்ணப்பிக்கவேண்டும்.

வருமான வரியை சேமிப்பது எப்படி?

வருமான வரிப்பிரிவில் 80C பிரிவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த பிரிவில், நாம் ஒரு லட்சம் ரூபாய்வரை சேமிக்க முடியும். நாம் சேமிக்க எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் ஒரு நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் அடுத்த வருடம் 31 மார்ச் வரை. ஆனால் நம்மில் பலர் 10 அல்லது 11 மாதம் எந்தவித முயற்சியும் எடுக்காமல், கடைசி இரண்டு மாதங்களில் அந்த சமயம் கண்ணில் யார் படுகிறாரோ அவரிடம் எதையாவது வாங்கி அலுவலகத்தில் ரசீது கொடுப்பதையே பெரிய விஷயமாக நினைக்கிறார்கள்.

"நம்ம பள்ளி, நம்ம குழந்தை" -துவக்கப் பள்ளிகளுக்கு கையேடு தர முடிவு

அரசு துவக்கப்பள்ளியில் வரும், கல்வியாண்டில் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு, அழகிய வண்ணப்படங்களுடன்
கையேடு வழங்கப்பட உள்ளது.மத்திய அரசு மூலம் கடந்த, 2001ல், ஆறு முதல், 14 வயதுடைய அனைத்து வயது குழந்தைகளும், ஜாதி, மதம் மற்றும் சமூக வேறுபாடின்றி அனைவரும் கல்வி கற்கும் நோக்கத்துடன், 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' (எஸ்.எஸ்.ஏ) என்ற திட்டம், மாநிலம் முழுவதும் துவங்கப்பட்டது.

வாக்குச்சாவடிகளில் செல்போனுக்கு தடை : தேர்தல் ஆணையம் உத்தரவு

மக்களவை தேர்தலில் அசம்பாவிதங்களை தடுக்க வாக்குச்சாவடிகளில் செல்போன் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஆனால், வாக்குசாவடிகளில் உள்ள தேர்தல் அதிகாரி மட்டும் செல்போனில் எஸ்எம்எஸ் மூலம் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க பயன்படுத்தலாம் என்று தேர்தல் விதிமுறையில் குறிப்பிட்டுள்ளது. மக்களவை தேர்தல் 2014க்கான தேர்தல் விதிமுறையில், ‘‘வாக்குச்சாவடிகளில் செல்போன் பயன்படுத்துவது தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், வாக்குச்சாவடிகளில் உள்ள தேர்தல் பொறுப்பு அதிகாரி அல்லது முதன்மை அதிகாரி மட்டும் செல்போனில் எஸ்எம்எஸ் மூலம் அங்கு நடக்கும் நடவடிக்கைகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

பொதுத் தேர்வு வினாத்தாள்களில் பிழை ஆசிரியர்களுக்கு 'குட்டு' அவசியம்:தினகரன் தலையங்கம்

பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரியர்கள் கூறப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாகத்தான் தெய்வத்தையே முன்னோர்கள் கொண்டு வந்துள்ளனர். இவ்வளவு சிறப்பு ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படுவது, அவர்கள் தலைமுறையை மிகச்சிறந்த தூண்களாக உருவாக்குபவர்கள் என்பதால்தான்.எல்லாம் காசு என்று ஆகிவிட்ட நிலையில், ஆசிரியர்களில் சிலர் தொழில்பக்தியில் இருந்து தவறுவது வேதனை தரும் விஷயமாக இருக்கிறது. இதற்கு நல்ல உதாரணம், பொதுத் தேர்வு கேள்வித்தாள் பிழைகள்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வாக்குறுதி அளிப்பவருக்கே ஆதரவு

மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வாக்குறுதி அளிப்பவருக்கே ஆதரவு தர மத்திய, மாநில அரசு ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக கடந்த 4-ம் தேதி நாக்பூரில் நடந்த கூட்டத்தில் இதற்கான முடிவை ஊழியர்கள் சங்கங்கள் எடுத்துள்ளன.

மாலை 3 மணிக்கு மேல், முகவர்களை வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது: அலுவலர்களுக்கு எச்சரிக்கை

வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் முகவர்களை மாலை 3 மணிக்கு மேல் வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு ஆணையாளர் கே.ஆர்.செல்வராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.சேலம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியிலுள்ள 1,021 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் பற்றியும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்தும் முதல் கட்ட பயிற்சி வகுப்பு ஜெயராம் கல்லூரியில் நேற்று முன்தினம் நடந்தது.

06/04/2014

PAYROLL 9.1 - 100% DA SOFTWARE FOR PAYROLL DESIGNED BY நிக் NOTE : DOWNLOAD THE DBF FILE AND PASTE IT TO YOUR PAYROLL SOFTWARE...

அரசாணை எண்.96 நாள்.03.04.2014 மூலம் அகவிலைப்படி 100% உயர்த்தியுள்ளதால் ஏற்கனவே உள்ள SOFTWAREல் 2DIGIT வரை தான் உள்ளீடு செய்ய முடியும். ஆகையால் தற்பொழுது சென்னையில் உள்ள NIC மூலம் இப்புதிய FILE மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.இதை பதிவிறக்கம் செய்து PAYROLL FOLDER ஐ OPEN செய்து ஏற்கனவே DA.DBF FILE உள்ள இடத்தில் PASTE செய்யவும். பின்பு PAYROLL RUN எய்து பார்த்தால் அகவிலைப்படி (DA) 100% மாறிருக்கும்.

PAYROLL 9.1 - 100% DA SOFTWARE FOR PAYROLL DESIGNED BY NIC CLICK HERE...

SOFTWARE SPONSORED BY TNTF

கல்வி துறை வழங்கிய புத்தகத்தில் இருந்து 61 மதிப்பெண்களுக்கு 17 கேள்விகள் கேட்பு

படிப்பில் பின் தங்கியிருக்கும் மாணவ, மாணவியருக்கு உதவும் வகையில், பள்ளிக்கல்வித் துறை, இந்த ஆண்டு, சிறப்பு வினா வங்கி புத்தகத்தை தயாரித்து வழங்கி இருந்தது. நேற்று நடந்த, 10ம் வகுப்பு கணிதத் தேர்வில், இந்த புத்தகத்தில் இருந்து, 61 மதிப்பெண்களுக்கான, 17 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இந்த புத்தகத்தைப் பார்த்து தயாரான மாணவ, மாணவியர், அதிக மதிப்பெண் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மே 15ம் தேதி வரை தபால் ஓட்டு

தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் கூறியதாவது:

தேர்தல் பணியில் ஈடுபடுவோர் மற்றும் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு செல்லும் போலீசாரும் தபால் ஓட்டு போடலாம். அவர்களுக்கான
தபால் ஓட்டு விரைவு அஞ்சல் மூலமாக வினியோகம் செய்யப்படும்.

உயர்த்தப்பட்ட அகவிலைப்படி பாக்கியை எந்த வித காலதாமதமும் இல்லாமல் அரசுக் கருவூல அதிகாரிகள் வழங்க வேண்டும்.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு ரூ.1,000 முதல் ரூ.6 ஆயிரம் வரை கூடுதலாக கிடைக்கும்.அகவிலைப்படி உயர்வுக்கான உத்தரவை தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டு உள்ளார்.

வங்கிகளில் பிற சேவைகளுக்குக் கட்டணம்? - வாடிக்கையாளர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

வங்கிகளின் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது மகிழ்ச்சியான செய்திதான். ஆனால் இதற்குப் பதிலாக வங்கிகள் அளிக்கும் பிற சேவைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கலாம். இது அபராத கட்டணத்தை விட கூடுதல் சுமையாக வாடிக்கையாளர்களுக்கு மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் பயிற்சி வகுப்புக்கு செல்லும் நண்பர்கள் இந்த Module - ஐ pendrive இல் copy செய்து மற்ற தேர்தல் பணியாளர்கள் பயன் பெற உதவலாமே!

01.01.2014 முதற்கொண்டு உயர்தப்பட்ட அகவிலைப்படி வீதம் ஆணைகள்

அரசாணை எண்.96 நாள்.03.04.2014 - படிகள் - அகவிலைப்படி - 01.01.2014 முதற்கொண்டு உயர்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் பதிவிறக்கம் செய்ய இதனை அழுத்துக

அரசாணை எண்.97 நாள்.03.04.2014 - திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.1.2014 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் பதிவிறக்கம் செய்ய இதனை அழுத்துக

04/04/2014

வாக்குச்சாவடி அலுவலர்கள் பயிற்சிக்கு இடை நிலை ஆசியர்களுக்கு அழைப்பு: கணினி குளறுபடியால் குழப்பம்


மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம் மே முதல் வாரத்தில் வழங்கப்படுகிறது

மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் மே மாதம் முதல் வாரத்தில் வழங்கப்படுகிறது.பிளஸ்–2 தேர்வு முடிவு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ/
மாணவிகள் பிளஸ்–2 தேர்வை எழுதி முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.

தேர்தல் பணியில் பெண் ஊழியர்கள் படும்பாடு! - தினமணி தலையங்கம்

மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து பேட்டியளித்த தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார், வாக்குச்சாவடிகளில் பெண்களை நியமிப்பதில் சில சலுகைகளை அறிவித்திருந்தார்.
வாக்குச்சாவடிகளில் பெண்கள் தங்க வேண்டிய அவசியமில்லாத
வகையில் அவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு இரண்டு மணி நேரத்துக்குள் வாக்குச்சாவடிக்கு சென்றுவிடும் விதமாக அவர்களுக்குப் பணி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறியிருப்பது பெண்களுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளை நன்கு உணர்ந்து எடுக்கப்பட்டிருக்கும் முடிவு.

03/04/2014

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே-23 ல் வெளியீடு:அரசுத் தேர்வுத்துறை அறிவிப்பு

மே 9-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகளும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23-ம் தேதியிலும் வெளியிடப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

GROUP-2 (Non OT) II PHASE Results 04-11-2012 அன்று நடைப்பெற்ற Group-2 நேர்காணல் அல்லாத(Non -OT) பணிக்கான இரண்டாம் கட்ட (II PHASE Results) தேர்வு முடிவுகளை இணையத்தில் காணலாம்

வாக்குப் பதிவு அலுவலர் I,II,III - இன் பணிகள்...




கருணை அடிப்படையில் நியமனம் பெற்று பணிபுரிந்து வரும் இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்களுக்கு பணிவரன்முறை செய்தல் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்த பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

வாக்குச் சாவடி தலைமை அலுவலருக்கான கையேடு, பொருள்கள் சரிபார்த்தலுக்கான குறிப்பேடுகள், முகவருக்கான கையேடு

2013-2014 ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிகளுக்குண்டான கேடயம் வழங்கிட மாவட்டத்திற்கு-3 பள்ளிகள் தேர்ந்தெடுத்து அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை


தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download