14/04/2014

குரூப் 1 தேர்வில் அதிகளவில் பெண்களே வெற்றி!

துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட 25 பதவிகளுக்காக நடந்த, குரூப் 1 தேர்வில், 15 இடங்களை பெண்களே தட்டிச் சென்றனர்.முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், தேர்வுபெற்ற 25 பேருக்கு, பணி நியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடந்தது. 25 பேரில் 15 பேர் பெண்கள். நெய்வேலியைச் சேர்ந்த டினா குமாரி 623 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.
இரண்டாம் இடத்தை கீதா பிரியா என்பவரும், மூன்றாம் இடத்தை ரேஷ்மி என்பவரும் பிடித்தனர். திருமணம் ஆன இவர்கள் மூவருமே துணை கலெக்டர் பதவியை தேர்வு செய்தனர். மதுரை, திருமங்கலத்தைச் சேர்ந்த ஷாஜிதா, டி.எஸ்.பி., பதவியை தேர்வு செய்தார்.

அவர் கூறுகையில், &'&'சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த நான், காவல் துறையில், அதிகாரியாக பணியில் சேர்வதை பெருமையாக கருதுகிறேன். எனினும் ஐ.ஏ.எஸ்., என்பது என் தாகமாக உள்ளது. தொடர்ந்து ஐ.ஏ.எஸ்., பதவிக்கு முயற்சி செய்வேன்" என்றார்.

முதலிடம் பிடித்த டினா குமாரி கூறுகையில், &'&'தேர்வை, ஏதோ மலைபோல் நினைத்து பயப்படாமல், தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் எதிர்கொண்டால் சாதிக்கலாம். அறிவிப்பு வெளியானதில் இருந்து கடினமாக உழைத்தேன்; அதற்கான பலன் கிடைத்துள்ளது" என்றார்.

சிவகாசியைச் சேர்ந்த ஹரி பாஸ்கர் என்ற இளைஞர் முதல் முயற்சியிலேயே தேர்வு பெற்றார். இவருக்கு வேலை வாய்ப்பு அலுவலர் பதவி கிடைத்தது. டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நவநீதகிருஷ்ணன், 25 பேருக்கும் பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.

-தினமலர் 

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download