13/04/2014

ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வு: விண்ணப்பம் சார்ந்த விபரம்

ஜூன் மாதம் நடக்க உள்ள, ஆசிரியர் பயிற்சி தனி தேர்வுக்கு,ஏப்ரல் -17 வரை, தேர்வுத் துறை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் அறிவித்து உள்ளார்.

அவரது அறிவிப்பு:

தனி தேர்வர்கள் www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அத்துடன் ஏற்கனவே தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழின் நகலை இணைத்து, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 'வெப் கேமரா' வசதி செய்யப்பட்டு உள்ளது. எனவே, தனி தேர்வர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு, நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

தேர்வு கட்டணமாக, ஒரு பாடத்திற்கு, 50 ரூபாய் மதிப்பெண் சான்றிதழ் கட்டணமாக, 100 ரூபாய் (முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்), பதிவு மற்றும் சேவை கட்டணமாக, 15 ரூபாய், இணையதள பதிவு கட்டணமாக, 50 ரூபாயை, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திடமே செலுத்த வேண்டும். வரும் 13 மற்றும் 14 நாட்கள் தவிர, இதர நாட்களில், விண்ணப்பிக்கலாம். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download