31/03/2014

ஒருங்கிணைந்த பி.எஸ்சி., பி.எட். படிப்பு: விண்ணப்பிக்க மே-2 கடைசி தேதி

மத்திய அரசு கல்வி நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி.,பி.எட். படிப்பு மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு (சி.இ.இ.-2014) அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மே 2-ஆம் தேதி கடைசி நாளாகும்.

தேர்தல் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை: அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

தேர்தல் பணிக்கு, தேர்வு செய்யப்பட்டுள்ள ஊழியர்கள், பணிக்கு வராவிட்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் தெரிவித்தார்.

டிஸ்லெக்சியா பாதிப்பு: 50 மாணவர்களுக்கு தேர்வெழுத கூடுதலாக ஒரு மணி நேரம்

தர்மபுரி மாவட்டத்தில் மறதி நோயால்(டிஸ்லெக்சியா) பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் 50 பேருக்கு, தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் கல்வித்துறை வழங்கியுள்ளது.

ஓய்வூதியத்தை வீட்டிலேயே கொண்டு வந்து கொடுப்போம்:எஸ்.பி.ஐ புதிய திட்டம்

75 வயதுக்கு மேல் ஆகும் ஓய்வூதியதாரர்களுக்கு, அவர்களது மாதாந்திர ஓய்வூதியத்தை, அவர்களது வீட்டுக்கே கொண்டு சென்று அளிக்கும் திட்டத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிமுகம் செய்துள்ளது.

நீங்கள் வாக்குசாவடி தலைமை அலுவலரா? இந்த வீ டியோவினை காணுங்கள்! பயனுள்ளதாக இருக்கும்!!

இந்தியா போலியோ இல்லாத நாடாக உலக சுகாதார அமைப்பால் அறிவிப்பு

போலியோ இல்லாத நாடாக இந்தியாவை உலக சுகாதார அமைப்பு வியாழக்கிழமை அறிவித்தது.இதன் மூலம் உலக சுகாதார அமைப்பால் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள 11வது நாடு இந்தியாவாகும்.

ஏ.டி.எம். கார்டு பயன்படுத்துவோருக்கு காவல்துறை எச்சரிக்கை

ஏ.டி.எம். கார்டு பயன்படுத்துவோர் கவனத்துடனும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

பட்டப் படிப்பு மற்றும் முதுகலைப் படிப்பு முடித்த பின், பிளஸ் 2 முடித்த பெண்ணுக்கு ஆசிரியை பணி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர் நேரில் வர வேண்டியதில்லை

மாநில அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுபவர்கள் வரும் நிதியாண்டில் (2014-15) சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை நேரிலோ, தபாலிலோ அல்லது பிறநபர் மூலமாகவோ அளிக்கலாம்
என்று ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் தெரிவித்துள்ளது.

29/03/2014

இளநிலை உதவியாளர், தட்டச்சர்கள் பதவி உயர்வு பெற பயிற்சி:பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் தஞ்சை மாவட்ட அமைப்புக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

தஞ்சை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க அமைப்புக்குழு கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராசையா தலைமை தாங்கினார். இளங்கோவன், அறவாழி, திருமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

28/03/2014

TNPSC-துறை தேர்வுகள் கடைசி தேதி நீடிப்பு

2014- ஆம் ஆண்டு ‘மே’ மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தலைமை செயலாளர் மாற்றம்

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக மோகன் வர்க்கீஸ் நியமிக்கப்படுகிறார்.

26/03/2014

விபத்தில் சிக்கிய 10-ம் வகுப்பு மாணவி:சிறப்பு அனுமதி மூலம் மருத்துவமனையிலேயே தேர்வெழுதினார்.

கடலூர் பண்ருட்டியை அடுத்த வீரபெருமாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி பாக்கியலட்சுமி அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 10ம்- வகுப்பு பயின்று வருகிறார்.

தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலங்களில் இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலங்களில் இன்று 10-ம் வகுப்பு  பொதுத்தேர்வு தொடங்கியது. மொத்தம் 11,552 பள்ளிகளைச் சார்ந்த 10,38,876 மாணவ/மாணவியர்கள், 286 தேர்வு மையங்களில், 77,647 தனித் தேர்வர்கள் என மொத்தம் 11 இலட்சத்து 13 ஆயிரத்து 523 பேர்  தேர்வை எழுதுகின்றனர். இவை தவிர, புழல், திருச்சி சிறைச்சாலைகளில் 119 சிறைவாசிகளும் இத்தேர்வை எதிர்கொள்கின்றனர்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி பி.எட்., சேர்க்கை அறிவிப்பு வெளியீடு


இன்றைய கல்வி முறை குறித்து தமிழ் தி ஹிந்து பத்திரிகையின் தலையங்கம்

கோடை விடுமுறைக்கு பின் ஜூன்-2 ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

கோடை விடுமுறைக்கு பின் 2014-2015 ம் கல்வியாண்டிற்கான பள்ளி திறக்கும் நாள் ஜூன்-2 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

25/03/2014

TNTET - WEIGHTAGE - IN DETAIL


புதிய ஓய்வூதியத் திட்ட விவரம்: இனி தகவல் மையம் பராமரிக்கும், ஏ.ஜி.எஸ் அலுவலகம் செல்ல வேண்டாம்

அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்ட விவரங்கள் அரசு தகவல் தொகுப்பு மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் (ஏ.ஜி.எஸ். அலுவலகம்) தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில துணை கணக்காயர் வர்ஷினி அருண் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு: காப்பி அடித்தால் 5 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது

எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு நாளை தொடங்க உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 10 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். குழப்பங்கள் ஏதும் இல்லாமல் தேர்வை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை தேர்வுத் துறை செய்து வருகிறது. பிளஸ் 2 தேர்வுகள்

TNPSC-குரூப்-1 தேர்வு முடிவுகளை வெளியிட்டது

தேர்வு முடிவுகளை காண இதனை அழுத்துக
குரூப் 1 பிரதான தேர்வு முடிவுகள் டி என் பி எஸ் சி இணையதளத்தில்  வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடத்திய குரூப் 1 பிதான தேர்வுகளுக்கான முடிவுகள்

23/03/2014

மே முதல் வாரத்தில் பொறியியல் சேர்க்கை விண்ணப்பம்:அண்ணா பல்கலை

மே மாதம் முதல் வாரத்தில் இருந்து, பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வழங்கப்பட இருப்பதாக அண்ணா பல்கலை வட்டாரம் நேற்று தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு மே 4 முதல் 20ம் தேதி வரை அண்ணா பல்கலை மட்டும் இல்லாமல், பல்கலை உறுப்பு கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன; 2.34 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆயின.ஜூன் இறுதி முதல்

ப்ளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 10-க்குள் முடிக்க உத்தரவு

ப்ளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிகளை, ஏப்ரல், 10ம் தேதிக்குள் முடிக்க வேண்டும், என்று தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், ப்ளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 3ம் தேதி தொடங்கியது. எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வெழுதியுள்ளனர்.
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்: 5,000 பேருடன் பறக்கும் படை ரெடி

இன்னும் மூன்று நாட்களில், 26ம் தேதி துவங்க உள்ள பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான இறுதிகட்ட ஏற்பாடுகளை, தேர்வுத்துறை, தீவிரமாக செய்து வருகிறது. மாணவர்களை கண்காணிக்க, 5,000 பேர் அடங்கிய பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

கடந்த மார்ச்-3 ல் துவங்கிய

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேரத்தில் மாற்றமில்லை எனவும்,காலை 9.15 மணிக்கு தொடங்கும் எனவும் தேர்வுத்துறை அறிவிப்பு

2014-ம் ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 3,200 மையங்களில் 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை அந்தந்த பள்ளிகள் அரசுத் தேர்வுகள் இணையதளத்திலிருந்து வெள்ளி மற்றும்

மார்ச்29,30 மற்றும் 31ஆகிய தேதிகளில் அனைத்து வங்கிகளும் செயல்படும் என உத்தரவு

இந்த நிதியாண்டுக்கான வரிகளை செலுத்துவதற்கு வசதியாக இம்மாத இறுதியில் 29 (சனிக்கிழமை), 30 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 31 (திங்கள்கிழமை) ஆகிய தேதிகளில் அனைத்து வங்கிகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மத்திய கலால் மற்றும் சுங்கவரித்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ""நிதிச் சேவை செயலாளரை எங்களது அலுவலகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த நிதியாண்டின் கடைசி மூன்று நாள்களிலும் வங்கிகள் திறக்கப்பட்டிருக்கும்'' என்று தெரிவித்தார்.

தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் +2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயிற்கூட்டம் நடத்த தேர்வுத்துறை தடை

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயிற் கூட்டம் நடத்த தடைவிதித்து தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி மாநிலத்தில் 66 மையங்களில் நேற்று முன்தினம் துவங்கியது. முதல் கட்டமாக முதன்மை தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வரும் 24ம் தேதி உதவி தேர்வாளர்கள் திருத்தும் பணியை மேற்கொள்கின்றனர். முதல் கட்டமாக

அண்ணாமலை பல்கலையில் பொது கலந்தாய்வு முறை அறிவிப்பு

அண்ணாமலை பல்கலைக்கழகம் அரசு பல்கலையாக மாற்றப்பட்டுள்ளதால் தொழிற்கல்வி நிலையங்களுக்கான சேர்க்கைச் சட்டம் விதிமுறைகள்படி, மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு முறையில் நடைபெறும் என பல்கலைக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அண்ணாமலை பல்கலைக் கழக நிர்வாக சிறப்பு அதிகாரி ஷிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்

22/03/2014

ஆசிரியர் தகுதி தேர்வு: 2-ம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஏப்ரல்-7 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஏப்., 7 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது. டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி மதிப்பெண் அளவை, 60 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்து, கடந்த மாதம், முதல்வர் அறிவித்தார். இந்த சலுகை, கடந்த ஆண்டு

21/03/2014

மே மாதம் 18ம் தேதி நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

2014 மே மாதம் 18ம் தேதி நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.01.2014, 6.02.2014 மூலம் அறிவிப்பு செய்யப்பட்ட பதவிக்கான எழுத்து தேர்வு (குரூப்&2 தேர்வு) 18.05.2014 அன்று நடைபெறுவதாக இருந்தது.ஆனால், தமிழகத்தில் மே 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால், மேற்கண்ட தேர்வுக்கான தேதியை 29.06.2014 என்று மாற்றியுள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்விற்கான தேர்வு முடிவுகள் மே-9 ல் வெளியீடு

பிளஸ் 2 பொதுத் தேர்விற்கான தேர்வு முடிவுகள் வருகிற மே-9 ம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் துறை இயக்குனர் திரு.தேவராஜன்
தெரிவித்தார்.

19/03/2014

மார்ச் 21-ல் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு மார்ச் 21-ம் தேதி (வெள்ளிக் கிழமை) வெளியாகிறது. முதல் முறையாக, தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்ட பள்ளிகள் மற்றும் கேந்திரிய
வித்யாலயா உள்ளிட்ட அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சி-டெட் என்று அழைக்கப்படும் இந்த தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தி வருகிறது.

அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி நடத்தப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வை தமிழகம் உள்பட நாடு முழுவதும் 8 லட்சத்து 26 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் எழுதினர். இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கபட்டபடி தேர்வு முடிவு வருகிற 21-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவை www.ctet.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம்.

முதல்முறையாக ஆன்லைனில்

கொல்கத்தா பல்கலைக் கழகம்: பி.எச்டி.,ஆங்கிலம் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு

கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.2014ம் கல்வியாண்டில் பி.எச்டி.,யில் (இந்தி) படிப்புக்கு
தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆராய்ச்சி படிப்புக்கு விண்ணப்பிப்பவர் அங்கீகாரம் பெற்ற பல்கலையில் முதுகலை பட்டப் படிப்பில் குறைந்தப்பட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப படிவத்தை கொல்கத்தா பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.100 செலுத்தி பெற்று கொள்ளலாம்.

* மார்ச் 28 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VILLAGE ADMINISTRATIVE OFFICER (2013-2014) IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE

VILLAGE ADMINISTRATIVE OFFICER (2013-2014) IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE

தொடக்கக் கல்வி - "பி" "சி" மற்றும் "டி" பிரிவு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு கடவுச்சீட்டு பெற அல்லது புதுப்பிக்க மறுப்பின்மை சான்று நியமன அலுவலரே (DEEO) வழங்கலாம் என இயக்குனர் உத்தரவு

16/03/2014

TNPSC :மாவட்டக் கல்வி அதிகாரி தேர்வு 11 இடத்துக்கு 22,000 பேர் போட்டி

நேரடி மாவட்டக் கல்வி அதிகாரி தேர்வுக்காக 11 காலியிடங்களுக்கு 22ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு,ஜூன்-8 ம் தேதி நடக்கிறது.

மெயின் தேர்வு, நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் 11 பேருக்கு பணிவாய்ப்பு கிடைக்கும்.தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையில் 11 மாவட்டக் கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி. கடந்த பிப்ரவரியில் அறிவிப்பு வெளியிட்டது. இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் 9 காலியிடங்களும், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் களுக்கு 2 காலியிடங்களும் உள்ளன. டி.என்.பி.எஸ்.சி. தகவல் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற் கான கடைசி தேதி கடந்த 12-ம் தேதியுடன் முடிவடைந்தது. டி.இ.ஓ. தேர்வுக்கு சுமார் 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்தார்.11 காலியிடங்களுக்கு 22 ஆயிரம் பேர் போட்டி போடுகிறார்கள். 

                முதல்நிலைத் தேர்வு டி.இ.ஓ. தேர்வு என்பது முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு என இரு நிலைகளை உள்ளடக்கியது. முதல்நிலைத் தேர்வு ஜூன் 8-ம் தேதி நடத்தப்படுகிறது. இதிலிருந்து அடுத்தகட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு 550 பேர் தேர்வு செய்யப் படுவர். மெயின் தேர்வில் 2 பொதுஅறிவு தாள்களும் (தலா 300 மதிப்பெண்) கொள்குறி வகையிலான கல்வியியல் தாளும் (300 மதிப்பெண்) இடம் பெறும். இறுதியாக நேர்முகத் தேர்வு நடத்தப்படும். மெயின் தேர்வு, நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் 11 பேருக்கு பணிவாய்ப்பு கிடைக்கும்.

16-வது மக்களவைத் தேர்தல்-2014 சிறப்பு செய்திகள் (2014 - LOK SABHA ELECTION SPECIAL NEWS)

தேர்தல் பணி: பெண் ஊழியர்கள், இரவே ஓட்டுச் சாவடிக்கு வர வேண்டியதில்லை

"தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண் ஊழியர்கள், இரண்டு மணி நேர பயண தூரத்திற்குள் உள்ள, ஓட்டுச்சாவடிகளில் பணி அமர்த்தப்பட வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் கூறியதாவது:
தமிழகத்தில், தேர்தல் பணியில், மூன்று லட்சம் மத்திய, மாநில, அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பெரும்பாலும் அரசு ஊழியர்கள், பணி அமர்த்தப்படுகின்றனர்.

போதிய அரசு ஊழியர் இல்லாத மாவட்டங்களில், தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஊழியர்களை பணியமர்த்த, தேர்தல் கமிஷன், அனுமதி வழங்கி உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண் ஊழியர்களை, அவர்கள் வசிப்பிடத்தில் இருந்து, இரண்டு மணி நேர பயண தொலைவிற்குள் உள்ள, ஓட்டுச்சாவடிகளில், பணி அமர்த்த வேண்டும் என்றும், தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. எனவே, பெண்கள், இரவே, ஓட்டுச் சாவடிக்கு வந்து, தங்க வேண்டியதில்லை. பகலில் வந்தால் போதும். தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்கள், பணிக்கு வர முடியாத நிலையில் இருந்தால், மாவட்ட தேர்தல் அலுவலருக்கு, விண்ணப்பிக்க வேண்டும். அவர் இறுதி முடிவெடுப்பார். தேர்தல் பணிக்கு வராத ஊழியர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

கர்ப்பிணி, மாற்றுத்திறனாளிகள் தவிர ஊழியர்கள் கண்டிப்பாக தேர்தல் பணியாற்ற வேண்டும்: பிரவீன்குமார்

நாடாளுமன்ற தேர்தலில் 3 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கர்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகள் தவிர மற்ற அரசு ஊழியர்கள் அனைவரும் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறினார்.

சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் தேர்தல் பணிக்காக சுமார் 3 லட்சம் அரசு ஊழியர்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் கண்டிப்பாக தேர்தல் பணியாற்ற வேண்டும். கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தேர்வு எழுதும் ஊழியர்கள் தகுந்த ஆதாரத்தை மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் காட்டி விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். மற்றவர்கள் தேர்தல் பணியை புறக்கணித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பெண் ஊழியர்களுக்கு, அவர்களது வீட்டில் இருந்து 2 மணி நேரம் பயணம் செய்யும் தூரத்தில்தான் தேர்தல் பணி வழங்கப்படும். வாக்குச்சாவடி மையங்களில் இரவு தங்க வேண்டிய நிலை பெண் ஊழியர்களுக்கு ஏற்படாது. சில வாக்குப்பதிவு மையங்களில் அரசு ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால், தனியார் பள்ளி ஊழியர்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது புகார் தெரிவிக்க மாவட்டம் வாரியாக தனியாக இணையதளம் மற்றும் இலவச தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது. அதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். செல்போன் மூலமாகவே படம் எடுத்து தேர்தல் கமிஷனுக்கு அனுப்பினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? தெரிந்துகொள்ள புதிய எஸ்எம்எஸ் வசதி: வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள், தங்களது பெயர் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள தேர்தல் கமிஷன் எளிதான ஒரு வழிமுறையை முதன் முதலாக அறிமுகப்படுத்தியுள்ளது. உங்கள் செல்போனில் epic என டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு, வாக்காளர் அடையாள அட்டையில் இடம்பெற்றுள்ள எண்ணை டைப் செய்து, 9444123456 என்ற நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். உடனே, உங்கள் செல்போனுக்கு வாக்காளரின் பெயர், பாகம் எண், எந்த ஓட்டு சாவடி உள்ளிட்ட விவரங்கள் வந்து விடும். பெயர் இல்லாவிட்டால், ‘1950 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்‘ என்று பதில் வரும். இதையடுத்து வாக்காளர்கள் தேர்தல் கமிஷனின் கால்சென்டர் நம்பரான 1950 எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் வாக்காளர் பெயர் ஏன் இடம்பெறவில்லை என்பதை தெரிந்து கொண்டு, புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழகம் முழுவதும் உள்ள வாக்காளர்கள் 9444123456 என்ற தொலைபேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். பொதுமக்கள், தங்களிடம் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது. நாம் வாக்களித்து விடலாம் என்று நினைக்காதீர்கள். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று பிரவீன்குமார் கூறினார்.

15/03/2014

தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் சி&டி -யின் மாநிலத் தலைவர் திரு.பொ.சௌந்திரராஜன் அவர்களின் பிறந்த நாள் விழாவில் பங்கு கொண்டு வாழ்த்திய பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலவலர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு.ஏ.எஸ்.ராஜேந்திர பிரசாத் அவர்கள்,மாநில பொருளாளர் திரு. எம்.அதிகமான்முத்து அவர்கள்.


தமிழ்நாடு அமைச்சுப்பணி - பவானிசாகர் அடிப்படை பயற்சி முடிப்பதில் தாமதம்,விதி தளர்வு செய்து தகுதிகாண் பருவம் முடித்தல் இளையவருக்கு நிகராக பணிமுன்னுரிமை வழங்குதல்-சார்பு

பெண் வாக்குப்பதிவு அலுவலர்கள், வீடுகளில் இருந்து 2 மணி நேரத்தில் வாக்குச்சாவடிக்கு செல்லும் வகையில் அவர்களுக்கு வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நேரம் இரண்டு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. வழக்கமாக காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலின் போது வாக்குப்பதிவு நேரம் 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம்.


பெண் வாக்குப்பதிவு அலுவலர்கள்:


ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பெண் வாக்குப்பதிவு அலுவலர்கள் வாக்குப்பதிவுக்கு முன் தினமே சென்று விட வேண்டும் என விதிமுறைகள் இருந்தன. இதையும் தேர்தல் ஆணையம் மாற்றி அமைத்துள்ளது. பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து 2 மணி நேரத்தில் வாக்குச்சாவடிக்கு செல்லும் வகையில் அவர்களுக்கு வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்படும்.


இணையதளங்கள் பயன்பாடு:


தேர்தல் பிரசாரத்துக்காக இணையதளங் களை பயன்படுத்தினால் அதுவும் வேட்பாளர் தேர்தல் கணக்கில் சேர்க்கப்படும். இணைய தளங்களை பயன்படுத்துவதற்கு தேர்தல் ஆணைய அனுமதியைப் பெற வேண்டும். எந்த இணைய தளம், அதுகுறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.


வங்கி பணப் பரிமாற்றம்:


வங்கி பணப்பரிமாற்றம் தொடர்பாக இதுவரை வருவாய்த் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது மாவட்டத் தேர்தல் அலுவலருக்கும் தகவலைத் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்துவோர், கூட்டம் நடப்பதற்கு 12 மணி நேரம் முன்பு தான் மேடை, கொடிதோரணங்களை அமைக்க வேண்டும். அதே போல் கூட்டம் முடிந்த 5 மணி நேரத்தில் அவற்றை அகற்ற வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பயிற்சியில் பங்கேற்காத 600 பேருக்கு நோட்டீஸ்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணி தொடர்பாக ஆணை பெற்று, தேர்தல் பயிற்சியில் பங்கேற்காத 600 பேருக்கு மாவட்ட தேர்தல் பிரிவு
விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1104 இடங்களில் 3452 வாக்குச் சாவடி கள் அமைக்கப்பட உள்ளன. இப்பணிகளில் 18,500 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதற் கான பணி ஆணை ஊழியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தல் பணி தொடர்பாக ஆணை பெற்றவர் களுக்கு மாவட்டம் முழுவதும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கவில்லை. பயிற்சியில் பங்கேற்காதது குறித்து விளக்கம் கேட்டு, அவர்களுக்கு மாவட்ட தேர்தல் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பங்கேற்க முடியாதவர்கள் மனு அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தேர்தல் பணி தொடர்பாக ஆணை பெற்றவர்கள் தங்களது தேர்தல் பணி ரத்து, மாற்றல் தொடர்பாக அனைத்து மனுக்களையும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கா.பாஸ்கரன் அல்லது சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (விமான நிலைய விரிவாக்கத் திட்டம்) ரவீந்திரநாத் ஆகியோரிடம் மட்டும் நேரில் சந்தித்து அளிக்க வேண்டும் என்ற தகவலை தேர்தல் பிரிவு, அதன் தகவல் பலகையில் ஒட்டியுள்ளது.

இது குறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேர்தல் பணியை தவிர்ப்பதற்காக சிலர் பொய்யான காரணங்களை கூறி, பணியை நிராகரிக்கிறார்கள். கடந்த மக்களவைத் தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 ஆயிரம் ஊழியர்களைக் கொண்டு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் 18500 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பணிக்கு அதிக அளவில் ஊழியர்கள் தேவைப்படும் நிலையில், பலர் தங்கள் தேர்தல் பணியை ரத்து செய்ய வேண்டும் என்று கோருகின்றனர். தேர்தல் பணியை ரத்து செய்யக்கோரி வரும் மனுக்களை பரிசீலனை செய்து, தவிர்க்க முடியாத காரணங்கள் மட்டும் ஏற்கப்பட்டு, மற்ற மனுக்கள் நிராகரிக்கப்பட வேண்டும் என்று ஆட்சியர் பாஸ்கரன் கண்டிப்பாக தெரிவித்துவிட்டார் என்றார்.

17.03.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்

17.03.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்

~~~~~~~~~GROUPING MATTERS~~~~~~~

1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUSCOMMUNITIES)


2.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION (QDEPARTMENT DATED 05.10.2012AS AMENDED IN G.O.MS.NO.29 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 14.02.2014REGARDING WEIGHTAGE OF MARKS~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

3 WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD(REG. P.G. ASSISTANT IN TAMIL)~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

4.WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD [FOR RECRUITMENT] CHELLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS

5.WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD [FOR RECRUITMENT] CHELLENGING KEY ANSWERS 2013.BATCHES

1.GRADUATE ASSISTANT~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

2.B.T. ASSISTANT~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

3.SECONDARY GRADE ASSISTANT~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


4.EQUIVALENCE~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

14/03/2014

TNPSC - துறைத்தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

அண்ணாமலை பல்கலைக்கழக மே 2014 தேர்வு அட்டவணை தொலைதூரக் கல்விமுறை (DDE)

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ / மாணவிக்கு நான்கு சவரன் தங்க சங்கிலி பரிசு


தேர்தல் பணி மதிப்பூதியம் (ELECTION DUTY : REMUNERATION DETAILS)


பள்ளிக்கூட ஊழியர்களை காவல் பணிக்கு நியமிப்பதை கண்டித்து போராட்டம்


13/03/2014

கல்வியின் வாயிலாக தனி மனித உயர்வு கிடைக்கிறது:பாரதியார் பல்கலை துணைவேந்தர் பேச்சு

கூடலூர் பாரதியார் பல்கலைக் கழக கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு மற்றும் இலக்கிய மன்ற நிறைவு விழா, நேற்று கோழிப்பாலம் கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் வடிவேல் வரவேற்றார்.
விழாவுக்கு கோவை பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சை தலைமை வகித்து பேசியதாவது:
"பத்தாண்டுகளுக்கு முன் இப்பகுதியில் பள்ளி படிப்பை முடிந்த மாணவர்கள் பலர் மேல்படிப்பை தொடர முடியாமல் இருந்தனர். இக்கல்லூரி துவங்கியதன் மூலம் இன்று ஏராளமானவர்கள், பட்ட படிப்பை முடித்துள்ளனர். தற்போது இக்கல்லூரியில் 2400 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.பலருக்கு எட்டாத இடத்திலிருந்த உயர் கல்வி, அரசு திட்டங்களினால், தற்போது அனைவருக்கும் எளிதாக கிடைக்கிறது."கல்வியின் வாயிலாக தனி மனித உயர்வு கிடைக்கிறது. எதிர்கால உயர்வுக்கு மாணவர்கள் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். இணைய தளங்களில் நல்ல விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்' என்றார்.

விளையாட்டு மற்றும் இலயக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு துணை வேந்தர் பரிசுகளை வழங்கினார்.விழாவில், பாரதியார் பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், பத்மநாதன், மங்கல்ராஜ், ஜெகதாலட்சுமணன், வால்பாறை கல்லூரி முதல்வர் ரமேஷ், ஆவின் இணையத்தின் தலைவர் மில்லர், நகராட்சி துணை தலைவர் ராஜாதங்கவேல், அ.தி.மு.க., ஒன்றிய செயலர் பத்மநாதன்,விரிவுரையாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். விரிவுரையாளர் பழனிசாமி நன்றி கூறினார்.

நன்றி:தினமலர்

கோவை அரசு துணிவணிக பெண்கள் மேல்நிலைப்பள்ளியை மையமாக கொண்டு வீடியோகான்பிரஸ்சிங் முறையில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பித்தல் நிகழ்வு

கோவை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவின் படி இணையதளம் வாயிலாக ஒருங்கிணைக்கப்பட்ட ஐந்து பள்ளிகளில், 'வீடியோகான்பிரஸ்சிங்' முறையில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பித்தல் பணி நேற்று நடந்தது.தமிழகத்தில் இணையதளத்தில் பள்ளி களை ஒருங்கிணைக்கும் திட்டத்தில், (கனெக்டிங் கிளாஸ்) மாநிலம் ழுவதும் 160 உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளிலும், 128 நடுநிலை பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது, நேற்று கோவை அரசு துணிவணிக பெண்கள் மேல்நிலைப்பள்ளியை மையமாக கொண்டு, கணுவாய், கவுண்டம்பாளையம், கணபதி மற்றும் பொள்ளாச்சி அரசு பள்ளி உட்பட ஐந்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை இணையதளத்தில் ஒருங்கிணைத்து கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்கள் கற்பிக்கப்பட்டன.

அரசு துணி வணிக மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சந்திரசேகர் கூறியதாவது:
பிற பள்ளிகளில் கற்பிக்கும் முறைகளை, இதன் மூலம் ஆசிரியர்களும் அறிந்துகொள்ளலாம். எளிமையான முறையில் பாடங்களை கற்பிக்கலாம். மாணவர்களும் ஆர்வத்துடன் இதில் பங்கேற்றனர் என்றார்.

மார்ச் 23-ம் தேதி முதல் விமான படைக்கு ஆள் சேர்ப்பு முகாம்

சென்னை கிழக்கு தாம்பரத்தில் விமான படைக்கு ஆள்சேர்ப்பு முகாம் வரும் 23-ம் தேதி முதல் நடக்கிறது.இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
விமான படைக்கு ஆள் சேர்ப்பு முகாம் கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஏர்போர்ட் ஸ்டேஷன், ஏர்மேன் கலெக்ஷன் சென்டரில் வரும் 23ம்தேதி முதல் 26ம்தேதி வரை காலை 10 மணிக்கு நடக்கிறது. கல்வி தகுதி: 10ம் வகுப்பு, பிளஸ்2. இவற்றில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும். தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு பயிற்சியின்போது ஊக்கத் தொகையாக Rs.8,550 வழங்கப்படும். 
பயிற்சி முடிந்த பிறகு Rs.19,475 சம்பளம் வழங்கப்படும். திருமணமாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.
விவரங்களுக்கு காமாண்டிங் ஆபீசர், ஏர்மேன் கலெக்ஷன் சென்டர், ஏர்போர்ட் ஸ்டேஷன், கிழக்கு தாம்பரம்-46. என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.044 2239 0561,044 2239 6565,94452 99128 என்ற  எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் அந்த கூறப்பட்டுள்ளது.

11/03/2014

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள்: இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) முதல், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்திலிருந்து ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பத்தாம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 26 முதல் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.அறிவியல் பாடத் தேர்வு எழுதுவோர் செய்முறைத் தேர்வு நடைபெறும் நாள் குறித்த விவரத்தை, ஏற்கெனவே செய்முறை பயிற்சி பெற்ற பள்ளித் தலைமையாசிரியரிடம் மார்ச் 17-ஆம்  தேதி அறிந்து கொள்ளலாம்.செய்முறைத் தேர்வுகளை மார்ச் 18 முதல் 23-ஆம் தேதி வரை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

கீழ்க்கண்டவாறு ஹால் டிக்கெட்,அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செய்முறைத் தேர்வு சம்பந்தமான அறிவுரைகள் மற்றும் தேர்வு கால அட்டவணையை  பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

 CLICK HERE TO SSLC - MAR - 2014 - PRIVATE CANDIDATE - HALL TICKET - PRINT OUT 



09/03/2014

திருட்டு போன மடிக்கணினிகளுக்காக தலைமை ஆசிரியையின் சம்பளத்தில் பணப்பிடித்தம் செய்ய தடை- மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு


புகைப்படத்துடன் அடையாள அட்டை - அரசு பணியாளர்களுக்கு உத்தரவு

"அனைத்து அரசு பணியாளர்களும், கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களை, பள்ளிக்கல்வித்துறை சார்பில், 64 கல்வி மாவட்டங்களாக பிரித்துள்ளனர்.
தமிழகத்தில், அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என மொத்தம், 36,813 பள்ளிகளும், 8,395 நிதியுதவி பள்ளிகளும், 11,365 சுயநிதி பள்ளி என மொத்தம், 56,573 பள்ளி உள்ளன. இந்த பள்ளிகளில், கல்வி பயிலும், 1.35 கோடி மாணவர்களுக்கு, 56,000 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் வரும், அனைத்து துறையினருக்கும், அரசு முதன்மை செயலர் சபிதா அவசர சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அந்த சுற்றறிக்கையில், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் கீழ், அனைத்து அரசு பணியாளர்களும், அலுவலகத்தில் பணியாற்றும் நேரங்களில், தவறாமல் அவர்களது போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை அணிதல் வேண்டும், என ஆணையிட்டுள்ளார். முன்பு இருந்த அடையாள அட்டையில், அரசு பணியாளர்களது பெயர் மற்றும் பதவி ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தது. அந்த முறையை நவீனப்படுத்தும் விதமாக, அடையாள அட்டையில், பணியாளர்களின் பெயர் மற்றும் பதவியை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒன்றின் கீழ் ஒன்று இடம் பெறுமாறு மாற்றி அமைத்து, அடையாள அட்டை வழங்க, அனைத்து துறை தலைவர்களுக்கும், கலெக்டருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

05/03/2014

தமிழகத்தில் ஏப்ரல் 24ம் தேதி மக்களவைத் தேர்தல்: மே16-ல் வாக்கு எண்ணிக்கை

2014-ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 15-வது மக்களவையின் ஆயுட்காலம் வரும் மே 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. 543உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லியில் விஞ்ஞான் பவனில்மக்களவைத் தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் அறிவித்தார். விஞ்ஞான் பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரி சம்பத், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். ஆந்திரப் பேரவையின் ஆயுட்காலம் ஜுன் 2ல் முடிவடைகிறது. சிக்கிம் பேரவையின் ஆயுட்காலம் ஜுன் 2ல் முடிவடைகிறது. வேட்பாளர் செலவை உயர்த்துவது பற்றி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்த அவர்,தேர்தல் தேதியுடன் பண்டிகை தேதி குறுக்கிடக் கூடாது என கட்சிகள் கோரியதாக குறிப்பிட்டார். மழைக்காலம் துவங்குவது,கடும் கோடைக்காலம் ஆகியவையும் கருத்தில் கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

81 கோடி வாக்காளர்கள்:

2014 மக்களவைத் தேர்தலில் 81.4 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் கூறியுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலை விட இந்த தேர்தலில் 10 கோடி வாக்காளர்கள் அதிகம் என்றும் கூறினார்.

முதல்கட்டத் தேர்தல்:

முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 7ம் தேதி நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2 மாநிலங்களில் 6தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்:

தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 24ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையிலும் ஏப்ரல் 24ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மே16-ல் வாக்கு எண்ணிக்கை:


மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 16ல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபெறவிருக்கும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் விநியோகம்

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலும்இன்று (மார்ச் 5) முதல் விநியோகிக்கப்படஉள்ளன. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் வரும் 25-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். விண்ணப்பங்களை ரூ.50 செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.பி.எட். முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையிலும், ஆசிரியர் பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையிலும் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.பட்டதாரி ஆசிரியர்களுக்காக இந்தத் தேர்வு நடத்தப்படுவதால், இரண்டாம் தாள் தேர்வு மட்டுமே நடத்தப்படுகிறது.



04/03/2014

ஏழாவது ஊதியக் குழு அமைப்பது மற்றும் ஊழியர்களின் பரிசீலினைகளை ஆராய்வதற்கான அதிகாரப் பூர்வ அறிவிக்கை வெளியீடு

GOVERNMENT OF INDIA PUBLISHED THE GAZETTE NOTIFICATION  FOR SEVENTH CENTRAL PAY COMMISSION
Ministry Of Finance

(Department of Expenditure)
RESOLUTION
New Delhi, the 28th Febraury,2014
No.1/1/2013-E.III(A)
The Government of India have decided to appoint the Seventh Central Pay Commission comprsing the fallowing
1.Chairman – Justice Shri Ashok kumar Mathur

2.Member – Shri Vivek Rae
3.Member – Dr. Rathin Roy
4.Secretary – Smt. Meena Agarwal

2.The terms of reference of the commission will be as fallows
a) To examine, review, evolve and recommend changes that are desirable and feasible regarding the principles that should govern the emoluments structure including pay, allowances and other facilities/benefits, in cash or kind, having regard to rationalization and simplification therein as well as the specialized needs of various Departments, agencies and services, in respect of the following categories of employees:-
i. Central Government employees-industrial and non-industrial;
ii. Personnel belonging to the All India Services;
iii. Personnel of the Union Territories;
iv. Officers and employees of the Indian Audit and Accounts Department;
v. Members of regulatory bodies (excluding the Reserve Bank of India) set up under Acts of Parliament; and
vi. Officers and employees of the Supreme Court.
b) To examine, review, evolve and recommend changes that are desirable and feasible regarding principles that should govern the emoluments structure, concessions and facilities/benefits, in cash or kind, as well as retirement benefits of personnel belonging to the Defence Forces, having regard to historical and traditional parities, with due emphasis on aspects unique to these personnel.
c) To work out the framework for an emoluments structure linked with the need to attract the most suitable talent to Government service, promote efficiency, accountability and responsibility in the work culture, and foster excellence in the public governance system to respond to complex challenges of modern administration and rapid political, social, economic and technological changes, with due regard to expectations of stakeholders, and to recommend appropriate training and capacity building through a competency based framework.
d) To examine the existing schemes of payment of bonus, keeping in view, among other things, its bearing upon performance and productivity and make recommendations on the general principles, financial parameters and conditions for an appropriate incentive scheme to reward excellence in productivity, performance and integrity.
e) To review the variety of existing allowances presently available to employees in addition to pay and suggest their rationalization and simplification, with a view to ensuring that the pay structure is so designed as to take these into account.
f) To examine the principles which should govern the structure of pension and other retirement benefits, including revision of pension in the case of employees who have retired prior to the date of effect of these recommendations, keeping in view that retirement benefits of all Central Government employees appointed on and after 01.01.2004 are covered by the New Pension Scheme (NPS).
g) To make recommendations on the above, keeping in view:
i. the economic conditions in the country and need for fiscal prudence;
ii. the need to ensure that adequate resources are available for developmental expenditures and welfare measures;
iii. the likely impact of the recommendations on the finances of the State Governments, which usually adopt the recommendations with some modifications;
iv. the prevailing emolument structure and retirement benefits available to employees of Central Public Sector Undertakings; and
v. the best global practices and their adaptability and relevance in Indian conditions.
h) To recommend the date of effect of its recommendations on all the above.
3.The Commission will devise its own procedure and may appoint such advisors, Institutional Consultants and Experts, as it necessary for any particular purpose. It may call for such information and take such evidence, as it may consider necessary. Ministries and Departments of Government of India shall furnish such information and documents and other assistance as may be required by the commission. The government of India trusts the State Governments, Service Associations and other concerned will extend to the Commission their fullest cooperation and assistance
4.The Commission will have Headquarters in Delhi
5.The Commission will make its recommendations within 18 months of the date of its constitution. It may consider, if necessary, sending interim reports on any of the matters as and when the recommendations are finalised.
.

                                                                                                                     RATAN P.WATAL, Secy

16-வது மக்களவைத் தேர்தல் தேதி நாளை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு எனவும்,நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மக்களவைத் தேர்தலுக்கான கால அட்டவணை நாளை வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாளை காலை 10.30மணிக்கு வெளியாகும் எனவும்,ஏப்ரல் 7 முதல் 10-ம் தேதிக்குள் மக்களவைத் தேர்தல் தொடங்கும் என்றும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

15-வது மக்களவையின் பதவிக் காலம் ஜூன் 1-ம் தேதியுடன் நிறைவடைவதால் மே 31-க்குள் புதிய மக்களவை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதன்படி தேர்தல் தேதிகளை இறுதி செய்வதற்கான பணிகள் இப்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.கடந்த 2009 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 16 முதல் மே 13 வரை ஐந்து கட்டங்களாக நடத்தப் பட்டது. தற்போதைய மக்களவைத் தேர்தலை 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை 6 கட்டங்களாக குறைக்கவும் ஆலோ சிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றுமுதல் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வரும்.

கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு

கடந்த மாதம் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கோடை வெப்பம் காரணமாக தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று பெரும்பாலான கட்சிகளின் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டனர். ஆனால் இதனை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. ஏற்கெனவே திட்டமிட்டபடி ஏப்ரலில் வாக்குப் பதிவை நடத்த ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.மக்களவைத் தேர்தலோடு தெலங்கானா (117), ஆந்திரம் (சீமாந்திரா) (175), ஒடிசா (147), சிக்கிம் (32) ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களையும் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.சில அவசரச் சட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்திருப்பதால் தேர்தல் தேதி அறிவிப்பு சற்று தள்ளிப்போகலாம் என்று உறுதி செய்யப்படாத சில தகவல்களும் வெளியாகி உள்ளன.

6 அல்லது 7 கட்டத் தேர்தல்

நாடு முழுவதும் 6 அல்லது 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்றும் தீவிரவாத அச்சுறுத்தல் நிறைந்த மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் முதல் கட்டத்தி லேயே தேர்தல் நடக்கும் என்றும் தெரிகிறது.
வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வாக்குப் பதிவின்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற் கொண்டு வருகிறது. அதன்படி பெரும் எண்ணிக்கையிலான மாநில போலீஸார் மற்றும் துணை ராணுவப் படைகளை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசுகள், அந்தந்த மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் சார்பில் ஏற்கெனவே ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

81.4 கோடி வாக்காளர்கள்

நாடு முழுவதும் 81.4 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். இதில் 9.71 கோடி பேர் புதிய வாக்காளர்கள். மொத்தம் 8 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 12 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. புதிதாக 2.5 லட்சம் மின்னணு எந் திரங்கள் விரைவில் வந்து சேரும். தேர்தல் பணியில் மொத்தம் 1.1 கோடி பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு படையினரும் கூடுதல் தேர்தல் பார்வையாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

புதிய அம்சங்கள் அறிமுகம்

கடந்த மக்களவைத் தேர்தலின்போது வேட்பாளர்கள் தேர்தல் செலவு வரம்பு ரூ.40 லட்சமாக இருந்தது. இந்தத் தேர்தலில் செலவு வரம்பு ரூ.70 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் வேட்பாளரை நிராகரிக்கும் உரிமையை வழங்கும் ‘நோட்டா’ வசதி அறிமுகம் செய்யப்பட்டது. மக்களவைத் தேர்தலில் இந்த வசதி முதல்முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது.மேலும் வாக்களித்ததை உறுதி செய்யும் வகையில் ஒப்புகைச் சீட்டு வழங்கும் முறை யும் இத்தேர்தலில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஆறாவது ஊதியக் குழுவிற்கும், ஏழாவது ஊதியக் குழுவிற்கும் இடையே ஒப்பீடு

Terms of Reference of 6th Central Pay Commission and 7th Central Pay Commission (please click here)

Comparison table is given below, there is no much difference between the ToR of both CPC

The below table describes the difference in Terms of References between 6th and 7th CPC...


Terms of Reference of the Sixth Central Pay Commission 

A. To examine the principles, the date of effect thereof that should govern the structure of pay, allowances and other facilities/benefits whether in cash or in kind to the following categories of employees :-

1. Central government employees – industrial and non-industrial.
2. Personnel belonging to the All India Services.
3. Personnel belonging to the Armed Forces.
4. Personnel to the Union Territories.
5. Officers and employees of the Indian Audit and Accounts Department.
6. Members of the regulatory bodies (excluding the RBI) set up under Acts of Parliament*.
7. Officers and employees of Supreme Court of India**.

B. To transform the Central Government Organisations into modern, professional and citizen-friendly entities that are dedicated to the service of the people.

C. To work out a comprehensive pay package for the categories of Central Government employees mentioned at (A) above that is suitably linked to promoting efficiency, productivity and economy through rationalization of structures, organizations, systems and processes within the government, with a view leveraging economy, accountability, responsibility, transparency, assimilation of technology and discipline.

D. To harmonize the functioning of the Central Government Organisations with the demands of the emerging global economic scenario. This would also take in account, among other relevant factors, the totality of benefits available to the employees, need of rationalization and simplification, thereof, the prevailing pay structure and retirement benefits available under the Central Public Sector Undertakings, the economic conditions in the country, the need to observe fiscal prudence in the management of the economy, the resources of the Central Government and the demands thereon on account of economic and social development, defence, national security and the global economic scenario, and the impact upon the finances of the States if the recommendations are adopted by the States.

E. To examine the principles which should govern the structure of pension, death-cum-retirement gratuity, family pension and other terminal or recurring benefits having financial implications to the present and former Central Government employees appointed before January 1, 2004.

F. To make recommendations with respect to the general principles, financial parameters and conditions which should govern payment of bonus and the desirability and feasibility of introducing Productivity Linked Incentive Scheme in place of the existing ad hoc bonus scheme in various Departments and to recommend specific formulae for determining the productivity index and other related parameters.

G. To examine desirability and the need to sanction any interim relief till the time the recommendations of the Commission are made and accepted by the Government. *A. vi substituted by Ministry of Finance Resolution No.5/2/20006-E.III (A) dated the 7th December, 2006. **A. vii substituted by Ministry of Finance Resolution No.5/2/2006-E.III (A) dated the 8th August, 2007.

The Commission will devise its own procedure and may appoint such Advisers, institutional consultants and experts, as it may consider necessary for any particular purpose. It may call for such information and take such evidence, as it may consider necessary. Ministries and Departments of the Government of India will furnish such information and documents and other assistance as may be required by the Commission.

The Government of India trusts that State Governments, Service Association and others concerned will extend to the Commission their fullest cooperation and assistance. The Commission will have its headquarters in Delhi.

The Commission will make its recommendations within 18 months of the date of its constitution. It may consider, if necessary, sending reports on any of the matters as and when the recommendations are finalized.
Terms of Reference of the 7th Central Pay Commission (please click here)
Cabinet approved TOR of 7th CPC 7th Central Pay Commission

The Union Cabinet today gave its approval to the Terms of Reference of 7th Central Pay Commission (CPC) as follows:-
a) To examine, review, evolve and recommend changes that are desirable and feasible regarding the principles that should govern the emoluments structure including pay, allowances and other facilities/benefits, in cash or kind, having regard to rationalization and simplification therein as well as the specialized needs of various Departments, agencies and services, in respect of the following categories of employees:-
i. Central Government employees-industrial and non-industrial;
ii. Personnel belonging to the All India Services;
iii. Personnel of the Union Territories;
iv. Officers and employees of the Indian Audit and Accounts Department;
v. Members of regulatory bodies (excluding the Reserve Bank of India) set up under Acts of Parliament; and
vi. Officers and employees of the Supreme Court.

b) To examine, review, evolve and recommend changes that are desirable and feasible regarding principles that should govern the emoluments structure, concessions and facilities/benefits, in cash or kind, as well as retirement benefits of personnel belonging to the Defence Forces, having regard to historical and traditional parities, with due emphasis on aspects unique to these personnel.

c) To work out the framework for an emoluments structure linked with the need to attract the most suitable talent to Government service, promote efficiency, accountability and responsibility in the work culture, and foster excellence in the public governance system to respond to complex challenges of modern administration and rapid political, social, economic and technological changes, with due regard to expectations of stakeholders, and to recommend appropriate training and capacity building through a competency based framework.

d) To examine the existing schemes of payment of bonus, keeping in view, among other things, its bearing upon performance and productivity and make recommendations on the general principles, financial parameters and conditions for an appropriate incentive scheme to reward excellence in productivity, performance and integrity.

e) To review the variety of existing allowances presently available to employees in addition to pay and suggest their rationalization and simplification, with a view to ensuring that the pay structure is so designed as to take these into account.

f) To examine the principles which should govern the structure of pension and other retirement benefits, including revision of pension in the case of employees who have retired prior to the date of effect of these recommendations, keeping in view that retirement benefits of all Central Government employees appointed on and after 01.01.2004 are covered by the New Pension Scheme (NPS).

g) To make recommendations on the above, keeping in view:
i. the economic conditions in the country and need for fiscal prudence;
ii. the need to ensure that adequate resources are available for developmental expenditures and welfare measures;
iii. the likely impact of the recommendations on the finances of the State Governments, which usually adopt the recommendations with some modifications;
iv. the prevailing emolument structure and retirement benefits available to employees of Central Public Sector Undertakings; and
v. the best global practices and their adaptability and relevance in Indian conditions.

h) To recommend the date of effect of its recommendations on all the above. The Commission will make its recommendations within 18 months of the date of its constitution.

It may consider, if necessary, sending interim reports on any of the matters as and when the recommendations are finalised. 

The decision will result in the benefit of improved pay and allowances as well as rationalization of the pay structure in case of Central Government employees and other employees included in the scope of the 7th Central Pay Commission.

Background
Central Pay Commissions are periodically constituted to go into various issues of emoluments’ structure, retirement benefits and other service conditions of Central Government employees and to make recommendations on the changes required.

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download