2014-ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 15-வது மக்களவையின் ஆயுட்காலம் வரும் மே 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. 543உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லியில் விஞ்ஞான் பவனில்மக்களவைத் தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் அறிவித்தார். விஞ்ஞான் பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரி சம்பத், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். ஆந்திரப் பேரவையின் ஆயுட்காலம் ஜுன் 2ல் முடிவடைகிறது. சிக்கிம் பேரவையின் ஆயுட்காலம் ஜுன் 2ல் முடிவடைகிறது. வேட்பாளர் செலவை உயர்த்துவது பற்றி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்த அவர்,தேர்தல் தேதியுடன் பண்டிகை தேதி குறுக்கிடக் கூடாது என கட்சிகள் கோரியதாக குறிப்பிட்டார். மழைக்காலம் துவங்குவது,கடும் கோடைக்காலம் ஆகியவையும் கருத்தில் கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
81 கோடி வாக்காளர்கள்:
2014 மக்களவைத் தேர்தலில் 81.4 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் கூறியுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலை விட இந்த தேர்தலில் 10 கோடி வாக்காளர்கள் அதிகம் என்றும் கூறினார்.
முதல்கட்டத் தேர்தல்:
முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 7ம் தேதி நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2 மாநிலங்களில் 6தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்:
தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 24ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையிலும் ஏப்ரல் 24ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மே16-ல் வாக்கு எண்ணிக்கை:
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 16ல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.