13/03/2014

மார்ச் 23-ம் தேதி முதல் விமான படைக்கு ஆள் சேர்ப்பு முகாம்

சென்னை கிழக்கு தாம்பரத்தில் விமான படைக்கு ஆள்சேர்ப்பு முகாம் வரும் 23-ம் தேதி முதல் நடக்கிறது.இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
விமான படைக்கு ஆள் சேர்ப்பு முகாம் கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஏர்போர்ட் ஸ்டேஷன், ஏர்மேன் கலெக்ஷன் சென்டரில் வரும் 23ம்தேதி முதல் 26ம்தேதி வரை காலை 10 மணிக்கு நடக்கிறது. கல்வி தகுதி: 10ம் வகுப்பு, பிளஸ்2. இவற்றில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும். தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு பயிற்சியின்போது ஊக்கத் தொகையாக Rs.8,550 வழங்கப்படும். 
பயிற்சி முடிந்த பிறகு Rs.19,475 சம்பளம் வழங்கப்படும். திருமணமாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.
விவரங்களுக்கு காமாண்டிங் ஆபீசர், ஏர்மேன் கலெக்ஷன் சென்டர், ஏர்போர்ட் ஸ்டேஷன், கிழக்கு தாம்பரம்-46. என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.044 2239 0561,044 2239 6565,94452 99128 என்ற  எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் அந்த கூறப்பட்டுள்ளது.

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download