16/03/2014

TNPSC :மாவட்டக் கல்வி அதிகாரி தேர்வு 11 இடத்துக்கு 22,000 பேர் போட்டி

நேரடி மாவட்டக் கல்வி அதிகாரி தேர்வுக்காக 11 காலியிடங்களுக்கு 22ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு,ஜூன்-8 ம் தேதி நடக்கிறது.

மெயின் தேர்வு, நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் 11 பேருக்கு பணிவாய்ப்பு கிடைக்கும்.தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையில் 11 மாவட்டக் கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி. கடந்த பிப்ரவரியில் அறிவிப்பு வெளியிட்டது. இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் 9 காலியிடங்களும், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் களுக்கு 2 காலியிடங்களும் உள்ளன. டி.என்.பி.எஸ்.சி. தகவல் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற் கான கடைசி தேதி கடந்த 12-ம் தேதியுடன் முடிவடைந்தது. டி.இ.ஓ. தேர்வுக்கு சுமார் 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்தார்.11 காலியிடங்களுக்கு 22 ஆயிரம் பேர் போட்டி போடுகிறார்கள். 

                முதல்நிலைத் தேர்வு டி.இ.ஓ. தேர்வு என்பது முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு என இரு நிலைகளை உள்ளடக்கியது. முதல்நிலைத் தேர்வு ஜூன் 8-ம் தேதி நடத்தப்படுகிறது. இதிலிருந்து அடுத்தகட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு 550 பேர் தேர்வு செய்யப் படுவர். மெயின் தேர்வில் 2 பொதுஅறிவு தாள்களும் (தலா 300 மதிப்பெண்) கொள்குறி வகையிலான கல்வியியல் தாளும் (300 மதிப்பெண்) இடம் பெறும். இறுதியாக நேர்முகத் தேர்வு நடத்தப்படும். மெயின் தேர்வு, நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் 11 பேருக்கு பணிவாய்ப்பு கிடைக்கும்.

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download