15/03/2014

பெண் வாக்குப்பதிவு அலுவலர்கள், வீடுகளில் இருந்து 2 மணி நேரத்தில் வாக்குச்சாவடிக்கு செல்லும் வகையில் அவர்களுக்கு வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நேரம் இரண்டு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. வழக்கமாக காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலின் போது வாக்குப்பதிவு நேரம் 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம்.


பெண் வாக்குப்பதிவு அலுவலர்கள்:


ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பெண் வாக்குப்பதிவு அலுவலர்கள் வாக்குப்பதிவுக்கு முன் தினமே சென்று விட வேண்டும் என விதிமுறைகள் இருந்தன. இதையும் தேர்தல் ஆணையம் மாற்றி அமைத்துள்ளது. பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து 2 மணி நேரத்தில் வாக்குச்சாவடிக்கு செல்லும் வகையில் அவர்களுக்கு வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்படும்.


இணையதளங்கள் பயன்பாடு:


தேர்தல் பிரசாரத்துக்காக இணையதளங் களை பயன்படுத்தினால் அதுவும் வேட்பாளர் தேர்தல் கணக்கில் சேர்க்கப்படும். இணைய தளங்களை பயன்படுத்துவதற்கு தேர்தல் ஆணைய அனுமதியைப் பெற வேண்டும். எந்த இணைய தளம், அதுகுறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.


வங்கி பணப் பரிமாற்றம்:


வங்கி பணப்பரிமாற்றம் தொடர்பாக இதுவரை வருவாய்த் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது மாவட்டத் தேர்தல் அலுவலருக்கும் தகவலைத் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்துவோர், கூட்டம் நடப்பதற்கு 12 மணி நேரம் முன்பு தான் மேடை, கொடிதோரணங்களை அமைக்க வேண்டும். அதே போல் கூட்டம் முடிந்த 5 மணி நேரத்தில் அவற்றை அகற்ற வேண்டும்.

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download