28/02/2014

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை அனுமதி

இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 100 சதவிகிதம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இம்முடிவால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள். மேலும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இதனால் பலன் பெறுவார்கள். மேலும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதிய வரம்பை ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும் அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் உடனடியாக 28 லட்சம் சந்தாதாரர்கள் பலன் அடைவார்கள்.

இபிஎஸ் - 95 திட்டத்தின் கீழ் வரும் சந்தாதாரர்களுக்கு இப்பலன் கிடைக்கும்.இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு வரும் நிதி ஆண்டில் மட்டும் 1,217 கோடி ரூபாய் கூடுதலாக தேவைப்படும்.

26/02/2014

ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வினால் 42647 பேர் தேர்ச்சி

ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தாள் 1 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 12ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்க்கும்பணி துவங்கவுள்ளது.தற்போது 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் 42647 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேர்தல் பணியில் இருந்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு விலக்கு?

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுப் பணிகளில் ஈடுபட வேண்டியிருப்பதால், மக்களவைத் தேர்தல் பணியில் இருந்து தலைமை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகம் முழுவதிலும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வருகிற மார்ச் 3ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி நிறைவடைகின்றன. இதைத்தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
நிகழாண்டு முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 40 பக்கங்கள் கொண்ட பிரதான விடைத்தாள்கள் அளிக்கப்படுகின்றன. அதோடு மாணவ, மாணவிகளின் பெயர், புகைப்படம், தேர்வு எண், பாடத் தேர்வு ஆகியவற்றைக் குறிப்பிடுவதற்காக தனியாக தாள் இணைக்க வேண்டும். இந்தத் தாளை 40 பக்கங்கள் கொண்ட பிரதான விடைத்தாளுடன் இணைத்து தைக்க வேண்டும்.

தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் அதற்கு மேல்பட்ட தாளில் விடைகளை எழுதும் நிலை ஏற்பட்டால், தனியாக அளிக்கப்படும் தாள்களை பிரதான விடைத்தாளுடன் இணைத்து நூல் மூலம் கட்டி தேர்வரிடம் அளிக்க வேண்டும்.இந்தப் பணி மட்டுமன்றி, தேர்வு மையத்தில் மாணவர்கள் அமருமிடத்தில் எழுதப்படும் தேர்வு எண் உள்ளிட்ட தேர்வு தொடர்பான அனைத்துப் பணிகளையும் பள்ளித் தலைமை ஆசிரியர் நேரடிப் பார்வையில் செய்ய வேண்டும் என தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் 94 மேல்நிலைப் பள்ளி, 125 உயர்நிலைப் பள்ளிகள், ஆயிரத்துக்கும் அதிகமான தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் சுமார் 6 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களை மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதன்படி, பணியாற்றும் ஆசிரியர்களின் பட்டியலைத் தயார் செய்து அந்தந்தக் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் தேர்தல் பணிக்கான உத்தரவு அளிக்கப்பட்டு வருகிறது.
மேல்நிலை, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தினால், தேர்வுப் பணியில் சுணக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என பல மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதேபோல, தருமபுரி மாவட்டத்தில் உள்ள தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு உள்ள பணிச்சுமையை கருத்தில் கொண்டு, தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், தேர்தல் பணி தொடர்பான முதல் கூட்டம் அந்தந்த வட்டத்தில் புதன்கிழமை (பிப்.26) நடைபெற உள்ள நிலையில், இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் நல்லதொரு முடிவை எடுக்கும் என்ற நம்பிக்கையில் தலைமை ஆசிரியர்கள் உள்ளனர்.

இரண்டு மந்தனப் பணிகளில் எதற்கு முக்கியத்துவம் அளிப்பது?


மேல்நிலைக் கல்வி கணினி பயிற்றுநர் 1880 தற்காலிக தோற்றுவிக்கப்பட்டது -1.1.2014 முதல் 31.12.2014 வரை தொடர் நீடிப்பு ஆணை

22/02/2014

பள்ளிக் கல்வித் துறையில், 106 கோடியே 8 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான பள்ளிக் கட்டடங்கள், நூலகங்கள், கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலகம், திருவள்ளூர் கல்வி வளாகக் கட்டடம் ஆகியவற்றை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்து, மடிக்கணினி மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கி, பள்ளிகளிலுள்ள வகுப்புகளை இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் திட்டத்தை துவக்கி, ஆங்கில மொழி உச்சரிப்புக் கட்டகத்தை வெளியிட்டார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  ’’பள்ளிகளில் பயிலும் மாணவ–மாணவியருக்கு தரமான கல்வி அளிப்பதோடு மட்டுமல்லாமல், அம்மாணாக்கர்களின் படிக்கும் சூழலை மேம்படுத்தத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், ஈரோடு மாவட்டம், மாத்தூரில் 2 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், நாமக்கல், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 109 அரசு பள்ளிகளில் 97 கோடியே 64 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் சுற்றுச்சுவர்கள்;
மாற்றுத் திறனுடைய குழந்தைகளின் வாசிப்புத் திறனை அதிகரிப்பதற்காக கோயம்புத்தூர் மாவட்ட நூலகத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு வசதிகளுடன் கூடிய தனிப் பிரிவு மற்றும் குழந்தை களுக்கான சிறப்பு பிரிவு;
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டம் புதிதாக ஏற்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியினை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகம்;
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம் மற்றும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகம் ஆகிய அலுவலகங்களை ஒருங்கிணைத்து ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்வி வளாகம்; என 102 கோடியே 69 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள், நூலகக் கட்டடங்கள், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டக் கல்வி அலுவலகம், திருவள்ளூர் கல்வி வளாகம் ஆகியவற்றை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
மாவட்ட நூலகங்களை சிறப்பான முறையில் மேற்பார்வையிட வேண்டும் என்ற கருத்துடன் 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 32 மாவட்டங்களிலுள்ள மாவட்ட நூலக அலுவலர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கும் அடையாளமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒருவருக்கு மடிக்கணினியை வழங்கினார்.
பள்ளி அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டிகளில் பங்கேற்ற 11 வயது, 14 வயது, 17 வயது மற்றும் 19 வயதிற்குட்பட்ட 11,25,628 மாணவ, மாணவியர்களில் 24 மாணவ, மாணவியர்கள் வெற்றி பெற்றனர். இவர்களில், முதலிடம் பெற்ற 8 மாணவ, மாணவியருக்கு பரிசுத் தொகையாக தலா 1,200 ரூபாய், இரண்டாம் இடம் பெற்ற 8 மாணவ, மாணவியருக்கு தலா 800 ரூபாய், மூன்றாம் இடம் பெற்ற 8 மாணவ, மாணவியருக்கு தலா 400 ரூபாய், என மொத்தம் 24 மாணவ, மாணவியருக்கு 19 ஆயிரத்து 200 ரூபாய் பரிசுத் தொகை வழங்குவதன் அடையாளமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒரு மாணவிக்கு பரிசுத் தொகையினை வழங்கி பாராட்டினார்.
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவ, மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் இறக்க நேரிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அம்மாணாக்கர்களின் எதிர்கால கல்வி பாதிக்கப்படாமலிருக்க, அக்குடும்பத்தில் உள்ள அனைத்து பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்விச் செலவு, பராமரிப்பு செலவிற்காக 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை நிரந்தர வைப்பு நிதியாக வழங்கும் திட்டம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 30.3.2005 அன்று தொடங்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், 2011-12 மற்றும் 2012-13ஆம் கல்வி ஆண்டுகளில் மொத்தம் 720 மாணவ- மாணவியர்கள் பயன் பெறும் வகையில் 3 கோடியே 60 லட்சம் ரூபாய் முதல்–அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது. அதேபோன்று, 2013-2014ஆம் கல்வியாண்டில் 360 மாணவ மாணவியர்களுக்கு ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்குவதன் அடையாளமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒரு மாணவருக்கு 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகைக்கான பத்திரத்தை வழங்கினார்.
கல்வியின் தரம் நிலை நிறுத்தப்படுவதற்கு தேவைக்கேற்ப ஆசிரியர்களை நியமிப்பது இன்றியமையாதது என்பதைக் கருத்தில் கொண்டு காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் கூடுதலாகத் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ச்சியாக 71,526 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணையிடப்பட்டு, அதில் 52,417 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 593 பேர்களுக்கு முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா 2 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.
தமிழ்நாடுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் நிரப்பப்படாமல் இருந்த இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 23 பேர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் அடையாளமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒருவருக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணை வழங்கினார்.
பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக் காலத்தில் காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களில் 504 பேர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்குவதன் அடையாளமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒருவருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.
தொலைதூர மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்கும் பொருட்டு மாநில அரசால் இணைய தளம் வாயிலாக "பள்ளிகளிலுள்ள வகுப்புகளை இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் திட்டம்" என்ற புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திறன்மிக்க ஆசிரியர்கள், மாவட்ட வள மையத்திலிருந்தோ அல்லது தாங்கள் கற்பிக்கும் பள்ளிகளில் இருந்தோ தொலைதூர மற்றும் மலைப் பகுதிகளிலுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்குப் பாடங்களைக் கற்பிக்க இயலும். இந்த திட்டத்தைத் துவக்கி வைக்கும் வகையில், முதற்கட்டமாக 288 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 44,800 மாணவ மாணவிகள் பயன் பெற்றிட பள்ளிகளிலுள்ள வகுப்புகளை இணைத்து 24 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்து பயிலும் திட்டத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் தங்களது ஆங்கில திறனை மேம்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்குடன் அரசு பள்ளிகளில் 6917 ஆங்கில வழிப் பிரிவுகள் துவங்கப்பட்டன. அப்பிரிவுகளில் படிக்கும் மாணவ மாணவிகள் தங்களது கேட்டல், பேசுதல், படித்தல் மற்றும் எழுதுதல் திறன்களை வளர்க்க வேண்டும் என்பதற்காக சிறப்பான ஆங்கில மொழி உச்சரிப்புக் கட்டகம் ஒன்று ஆசிரியர்களுக்கென வடி வமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் மாணவர்களும் இக்கட்டகத்தை படிக்கும் போதே அதற்குரிய உச்சரிப்பு ஒலியையும், உச்சரிப்பில் அழுத்தம், இடைநிறுத்தம் போன்றவற்றை குறுந்தகட்டின் மூலம் கேட்டு ஆங்கில மொழி அறிவை வளர்த்துக் கொள்ளும் முறையில் இக்கட்டகம் உருவாக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 1600 பள்ளிகளில் ஒரு கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஆங்கில மொழி உச்சரிப்புக் கட்டகத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் K.C.வீரமணி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் சபிதா, தமிழ்நாடுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன், பள்ளிக் கல்வி இயக்குநர் டாக்டர் ராமேஷ்வர முருகன், தொடக்கப் பள்ளி இயக்குநர் டாக்டர் இளங்கோ மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளிக்கல்வித்துறையில் 504 பேர் கருணை அடிப்படையில் நியமனம்

பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக் காலத்தில் காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களில் 504 பேர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்குவதன் அடையாளமாக  முதல்வர் அவர்கள் ஒருவருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.

மேலும், தமிழ்நாடுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் நிரப்பப்படாமல் இருந்த இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 23 பேர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் அடையாளமாக,முதல்வர் அவர்கள் ஒருவருக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணை வழங்கினார்.


பள்ளிகல்வித்துறையில் 504 பேருக்கு கருணை அடிப்படையில் நியமனம் வழங்கியமைக்கும்,தமிழ்நாடுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் நிரப்பப்படாமல் இருந்த இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 23 பேர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியமைக்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு இதயப்பூர்வமான நன்றியினை பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் தெரிவித்துக்கொள்கிறது.

குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் ஆசிரியர்களின் பி.எட். கல்வித் தகுதியைப் பறிக்க அரசு முடிவு செய்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா கூறினார்.

நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு குழந்தைகள் உரிமைகள் தொடர்பான மாநில அளவிலான பயிலரங்கம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் அவர் பேசியது: குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகளை அரசு மிக முக்கியமான பிரச்னையாகப் பார்க்கிறது. இத்தகைய புகார்களுக்கு ஆளாகும் ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர்.

பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஆசிரியர்களை உடனடியாக பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை 5 ஆசிரியர்கள் இவ்வாறு பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அரசுப் பணியிலிருந்து நீக்கப்படும் இந்த ஆசிரியர்கள் வேறு எங்கும் பணிபுரியாத வகையில் அவர்களை ஆசிரியர் பணியில் இருந்து தகுதி நீக்கம் செய்யவும், அவர்களது பி.எட். பட்டத்தைப் பறிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

குழந்தைகளிடம் விழிப்புணர்வு: பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகாமல் எவ்வாறு தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக ஆசிரியர்களின் மூலமாக பள்ளிக் குழந்தைகளுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த இலவச நோட்டுப் புத்தகங்களின் அட்டைகளிலும் வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

புதிய சாஃப்ட்வேர்: இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் 10 ஆயிரம் பேர் இந்த ஆண்டு புதிதாகப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் பள்ளிகளில் இடையில் நின்றுவிடாமல் பள்ளிப் படிப்பை முடிப்பதை உறுதிசெய்யும் வகையில் புதிதாக சாஃப்ட்வேர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாஃப்ட்வேர் மூலம் ஒவ்வொரு மாணவரையும் தொடர்ந்து கண்காணிக்க முடியும்.

மத்திய அரசு பதில் தரவில்லை: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை மற்றும் நலிவடைந்தப் பிரிவுகளைச் சேர்ந்த 50 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கட்டணத்தை திருப்பிச் செலுத்த குறைந்தபட்சம் ரூ.25 கோடி தேவைப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். ஆனால், இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என்றார் சபிதா.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் குஷால் சிங், அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

-தினமணி 

இனி ஓய்வு பெறவிருக்கும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பெற புது விண்ணப்பம்

இனி ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு, "பென்ஷன்' மற்றும் இதர பணப்பலன்களை வழங்கும் நடைமுறையை எளிதாக்கும் பொருட்டு புது
விண்ணப்பத்தை அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

இதற்காக "படிவம்-5" என்ற புதிய விண்ணப்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் அனைத்து விதமான தகவல்களையும், சம்பந்தப்பட்ட ஊழியரே சுயமாக சான்றொப்பம் அளிக்க வேண்டும்
இதில் அந்த ஊழியர், பெயர், முகவரி, வங்கி கணக்கு விபரம் அளிக்க வேண்டும். மேலும் மொபைல் போன் நம்பர், மெயில் முகவரி ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும்.இதன் மூலம் தனிப்பட்ட ஊழியருக்கு ஏற்படும் சிரமங்களை சரி செய்வதோடு, அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாக இருக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

20/02/2014

மலைவாழ் இடங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஹில்ஸ் அலவன்ஸ் திருத்தியமைக்கப்பட்ட ஆணை

மத்திய அரசு ஊழியர்களுக்கான டி.ஏ.வை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க முடிவு!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவீதம் அளவுக்கு உயர்த்துவதுடன் 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் இந்த அறிவிப்பு வெளியாகும் என
தெரிகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது.

மார்ச் மாதம் அறிவிக்கப்படும் உயர்வு ஜனவரி 1 ல் இருந்தும், செப்டம்பர் மாத உயர்வு ஜுலை 1 ல் இருந்தும் அமல்படுத்தப்படும். கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி 90 சதவீதமாக உயர்ந்தது. மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதால் நன்னடத்தை விதி அமலுக்கு வருவதற்கு முன்பாக அகவிலைப்படி உயர்வை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முறையும் 10 சதவீதத்துக்கு குறையாமல் அகவிலைப்படி உயர்த்தப்படும். 10 சதவீத அகவிலைப்படி உயர்வு அளித்தால் மொத்த அகவிலைப்படி 100 சதவீதமாக உயரும். வழக்கமாக அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டினால் அதனை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும். அடிப்படை சம்பளம் உயர்ந்தால் வீட்டுவாடகை, போக்குவரத்து முதலான இதர படிகளும் உயரும். இதன் காரணமாக அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்காமல் மத்திய அரசு தள்ளிப்போட்டு வந்தது. தற்போது 7 வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அகவிலைப்படியில் குறைந்தது 50 சதவீதத்தையாவது அடிப்படை சம்பளத்துடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைத்தால் 30 முதல் 35 சதவீதம் வரை சம்பளம் உயரும் என மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 30 லட்சம் ஓய்வூதியக்காரர்கள் பலன் அடைவார்கள் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

19/02/2014

பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் ஒய்வு பெற்ற மற்றும் இறந்த பணியாளர்களுக்கு EXGRATIA வழங்குவது சார்பான அரசாணைகள் வெளியீடு

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது சங்கத்தின் சார்பில் நன்றி அறிவிப்பு


பள்ளிக்கல்வி 2011-2012 ஆம் கல்வியாண்டில் RMSA திட்டத்தின் கீழ் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்ட 3550 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்,710 இளநிலை உதவியாளர்கள் மற்றும் ஆய்வக உதவியாளர்கள் பணியிடங்களுக்கு 7.12.2013 முதல் 31.12.2014 வரை தொடர்நீட்டிப்பு ஆணை வெளியிடப்பட்டுள்ளது

16/02/2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண்களில் மாற்றம், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் அதிர்ச்சி?

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்தில்வெயிட்டேஜ் மதிப்பெண் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. பட்டதாரிஆசிரியர்களைப் பொருத்தவரை பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட் மற்றும் டிஇடி தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களைக் கணக்கிட்டு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்களைப் பொருத்தவரை பிளஸ்2 , டி.டி.எட்., மற்றும் டி.இ.டி தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களைக் கணக்கிட்டு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

தற்போது அரசாணை எண்: 29 நாள் : 14.02.2014பள்ளிக்கல்வி (டிஆர்பி) துறை வெளியிடப்பட்ட அரசாணையில் இடஒதுக்கீட்டுப்பிரிவினர் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 82 முதல் 89 மதிப்பெண் வரை எடுத்தாலே தேர்ச்சிஎன தமிழக அரசு அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்த இடஒதுக்கீட்டுப் பிரிவினர் டி.இ.டி. வெயிட்டேஜ் மொத்த மதிப்பெண்ணான 60மதிப்பெண்ணில் 42 மதிப்பெண் கிடைக்கும் என்று நம்பியிருந்தனர். ஆனால் தற்போது 55லிருந்து 60 சதவீதத்திற்கும் குறைவாக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு வெறும் 36 மதிப்பெண் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 முதல் 89மதிப்பெண் வரை பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 6 மதிப்பெண் குறைவாகவெறும் 36 மதிப்பெண் மட்டுமே கிடைக்கும். ஆனால் 89ஐவிட ஒரு மதிப்பெண்கூடுதலாக பெற்று 90 மதிப்பெண் பெற்றவர்கள் கூடுதலாக 6 மதிப்பெண்பெறுகின்றனர். இந்த வெயிட்டேஜ் முறையால் 82 முதல் 89 வரை மதிப்பெண் பெற்றஇடஒதுக்கீட்டுப்பிரிவினர் எவருக்கும் அரசு வேலை கிடைக்காது என்பதுஉறுதியாகியுள்ளது. 90 மதிப்பெண் மற்றும் அதற்கு மேல் பெற்றவர்களுக்குமட்டுமே ஆசிரியர் நியமனத்தில் முன்னுரிமை கிடைக்கக்கூடிய நிலைஏற்பட்டுள்ளது.

இதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே எனஇடஒதுக்கீட்டுப் பிரிவினர் மனம் நொந்துபோய் உள்ளனர்.அதாவது 60 முதல் 70சதவீதம் வரை வெயிட்டேஜ் மதிப்பெண் 42, 70 முதல் 80 வரை 48, 80 முதல் 90வரை 54, 90 முதல் 100 வரை 60 மதிப்பெண் என வெயிட்டேஜ் முறை உள்ளது.அதாவது ஒவ்வொரு 10 சதவீத மதிப்பெண் உயர்வுக்கும் 6 மதிப்பெண்வழங்கப்படுகிறது. ஆனால் 55 சதவீதம் முதல் 60 சதவீதத்திற்குள் அதாவது 82மதிப்பெண் முதல் 89 மதிப்பெண் பெற்றவர்கள் அதாவது 5 சதவீதவித்தியாசத்துக்கு மட்டும் 6 மதிப்பெண்களை வெயிட்டேஜ் முறையில் குறைத்துஅளிப்பது எவ்வகையில் நியாயம் என தேர்வர்கள் புலம்புகின்றனர்.தேர்வர்களின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்று 55 சதவீதம் முதல் 70சதவீதம் வரை மதிப்பெண் பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வெயிட்டேஜ்மதிப்பெண் 42 மதிப்பெண்கள் வழஙகும் வகையில் புதிய அரசாணையை வெளியிடவேண்டும்.

மேலும் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பணிநியமனம்பெற்றவர்கள் தவிர மற்றவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்து அடுத்துவரும் பணிநியமன்ங்களை பணியமர்த்தவேண்டும். காத்திருப்பவர்கள் அனைவரும்பணிநியமனம் பெற்ற பிறகே புதிதாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தவேண்டும்என்பதே ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய தேர்வகளின் எதிர்பார்ப்பாகஉள்ளது. இவற்றை செய்யவில்லை என்றால் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குஅளிக்கப்பட்ட சலுகை வெறும் கண்துடைப்பு என்று தேர்வர்கள் கூறுவதுஉண்மையாகிவிடும். தேர்வர்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்குமா?

-YAZHINIJITEESH

TET தேர்வில் 90 (82-89) க்கும் குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு 36 மதிப்பெண்கள் - அரசாணை வெளியீடு

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய சில தகவல்கள்

* தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள் EL எடுத்தால் probation period தள்ளிப்போகும்.
* பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய
விடுப்பினை ஒப்படைத்து பணமாகப் பெறலாம். ஆண், பெண் இருவரும்.

* தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2 வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த வருடத்திற்கான EL -ஐ ஒப்படைக்க முடியாது. EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும்.



* ஒரு நாள் மட்டும் EL தேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம்.

* வருடத்திற்கு 17 நாட்கள் EL. அதில் 15 நாட்களை ஒப்படைத்து பணமாகப் பெறலாம் .

* மீதமுள்ள 2 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும் அதை ஓய்வுபெறும் பொழுது ஒப்படைத்து பணமாகப் பெறலாம்.

* 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL கழிக்கப்படும்.

* வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள்.இதை 17ஆல் (EL) வகுத்தால் 365/17=21.

* எனவே 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL என்ற கணக்கில் கழிக்கப்படுகிறது.

* அரசு ஊழியர்களுக்கு மட்டும் வருடத்திற்கு 30 நாட்கள் EL (ஆசிரியர்களுக்கு 17 நாட்கள் மட்டுமே). அதில் 15 நாட்களை ஒப்படைக்கலாம்.
மீதம் உள்ள 15 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்சமாக 240 நாட்களைச் சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம். அதற்கு மேல் சேருபவை எந்தவிதத்திலும் பயனில்லை.

தகவலுக்கு நன்றி:தேவராஜன்,தஞ்சாவூர் 

11/02/2014

இடைநிலை ஆசிரியருக்கு 'CELT 'ஆங்கில பயிற்சி 19.02.2014 முதல் 20.03.2014வரையில் 30 நாட்கள்

அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டால், சம்பளக் குறைப்பு, துறை ரீதியான நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை

ஸ்டிரைக்கில் ஈடுபட்டால், சம்பளக் குறைப்பு, துறை ரீதியான நடவடிக்கை போன்ற, கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என, மத்திய அரசு ஊழியர்களுக்கு, அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.மத்திய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்றும், நாளையும், வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசு அலுவலகங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய பணியாளர் நலம் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகத்தின் சார்பில், மத்திய அரசின், அனைத்து துறை செயலர்களுக்கும் நேற்று அனுப்பப்பட்டுள்ள அறிக்கை:

ஊழியர் சங்கங்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு அதிகாரம் இல்லை. இதை மீறி, வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தால், அது, தவறான நடத்தையாகக் கருதப்படும் என, சுப்ரீம் கோர்ட், ஏற்கனவே ஒரு உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. இந்த உத்தரவை, அரசு ஊழியர் சங்கங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதையும் மீறி, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால், சம்பளக் குறைப்பு, துறை ரீதியான நடவடிக்கைகள் ஆகிய விளைவுகளை, ஊழியர்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.
போராட்டம் நடக்கும் காலத்தில், எந்த ஒரு ஊழியருக்கும் விடுப்பு அனுமதிக்கக் கூடாது; வேலைக்கு வரும் ஊழியர்களை தடுக்கவும் கூடாது. ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், எத்தனை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடப் போகின்றனர் என்பதை, தெரிவிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

08/02/2014

இரட்டைப்பட்டம் பெற்று பதவி உயர்வு பெற்றவர்களை பதவி இறக்கம் செய்ய அடுத்த வாரம் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது

இரட்டைப்பட்டம் செல்லாது எனவும், பணி நியமனம் மற்றும் பதவி உயர்விற்கு இனி மூன்று வருட பட்டப்படிப்பு மட்டுமே தகுதியானது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இரட்டைப்பட்டம் பெற்று பதவி உயர்வு பெற்றவர்களை பதவி இறக்கம்
செய்ய அடுத்த வாரம் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
திங்கள் கிழமை இரட்டைப்பட்டம் தீர்ப்பு நகல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

06/02/2014

ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அரசாணை வெளியீடு - TET 82/150 Pass GO

குரூப் - 2 பிரிவில் 1,262 இடங்களை நிரப்ப 10-ம் தேதி முதல் கலந்தாய்வு என அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,)அறிவிப்பு

அறிவிப்பு விவரம்:

நேர்காணல் அல்லாத, 1,262 உதவியாளர் இடங்களுக்கான கலந்தாய்வு, 10ம் தேதி முதல், 18ம் தேதி வரை, தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கும். இதற்கு, 2,000 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர். இவர்களின் பதிவு எண்கள் விவரம்  http://www.tnpsc.gov.in  என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் அழைப்பு கடிதம், விரைவு அஞ்சல் மூலம், ஒவ்வொருவருக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. இவ்வாறு, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.

பி.எட்., எம்.எட். தேர்வு முடிவுகள் வெளியீடு

ஒரே கட் ஆப் மார்க் வந்தால் மூத்தவர்களுக்கு முன்னுரிமை - இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் அரசு முடிவு

தகுதித்தேர்வு மதிப்பெண் உள்ளிட்ட வெயிட்டேஜ் மார்க் முறையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்யும்போது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட்ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால் வயதில் மூத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க அரசு முடிவுசெய்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர் பணியில் சேர, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் 12,596 பேர், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் 14,496 பேர் தேர்ச்சி பெற்றனர்.
வெயிட்டேஜ் மார்க் முறை
இந்நிலையில், இடஒதுக்கீடுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீதம் சலுகை வழங்கி தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. எனவே, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் இரு தகுதித் தேர்வுகளிலும் தேர்ச்சி விகிதம் கணிசமாக அதிகரிக்கும். சலுகை காரணமாக எத்தனை பேர் தேர்ச்சி பெறுவர் என்ற விவரத்தை இடஒதுக்கீடு பிரிவுவாரியாக கணக்கெடுக்கும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
வெயிட்டேஜ் மார்க் மூலம் கட்ஆப் மதிப்பெண் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்த மார்க் 100. இதில் 60 சதவீத மதிப்பெண் தகுதித் தேர்வுக்கும், எஞ்சிய மதிப்பெண்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, ஆசிரி
யர் பட்டயத் தேர்வுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். தேர்வுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பலர் ஒரே மதிப்பெண்
60 சதவீதம் தேர்ச்சி என்ற கணக்கீட்டின் கீழ் முன்பு அறிவிக்கப்பட்ட தேர்வு முடிவின்படி, தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. அப்போது கட்ஆப் மதிப்பெண் பதிவு செய்யப்பட்டது. இதில் 73, 74, 75, 76, 77 கட்ஆப் மதிப்பெண்ணில் ஏராளமானோர் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர்.
ஒரே கட்ஆப் மதிப்பெண் வந்தால் தகுதித் தேர்வு மதிப்பெண் பார்க்கப்படுமா? பிறந்த தேதி கணக்கில் கொள்ளப்படுமா? அல்லது பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண்ணை பார்ப்பார்களா என்ற பல்வேறு சந்தேகங்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்றுவந்த ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, பணிநியமனப் பணிகளை மேற்கொண்டு வரும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால், பிறந்த தேதி அடிப்படையில், அதாவது வயதில் மூத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் தொடர்பாக முன்பு வெளியிடப்பட்ட அரசாணையில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

-தி இந்து(தமிழ்)

03/02/2014

1591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 29.10.2013 முதல் மேலும் ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்குதல்-ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மதிப்பெண் சலுகை முதல்வர் சட்டசபையில் அறிவிப்பு

கவர்னர் உரைக்கு பதில் அளித்து இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா அவர்கள், 'எஸ்,.சி., எஸ்.டி., எம்.பி.சி., மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத சலுகை மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download