பள்ளிக்கல்வித்
துறையில் பணிபுரிந்து பணிக் காலத்தில் காலமான
பணியாளர்களின் வாரிசுதாரர்களில் 504 பேர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை
உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை
வழங்குவதன் அடையாளமாக முதல்வர்
அவர்கள் ஒருவருக்கு பணி நியமன ஆணை
வழங்கினார்.
மேலும்,
தமிழ்நாடுப் பாடநூல் மற்றும் கல்வியியல்
பணிகள் கழகத்தில் நிரப்பப்படாமல் இருந்த இளநிலை உதவியாளர்
பணியிடத்திற்கு வேலை வாய்ப்பு அலுவலகம்
மூலம் தெரிவு செய்யப்பட்ட 23 பேர்களுக்கு
பணிநியமன ஆணை வழங்கும் அடையாளமாக,முதல்வர் அவர்கள் ஒருவருக்கு இளநிலை
உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணை
வழங்கினார்.
பள்ளிகல்வித்துறையில்
504 பேருக்கு கருணை அடிப்படையில் நியமனம்
வழங்கியமைக்கும்,தமிழ்நாடுப் பாடநூல் மற்றும் கல்வியியல்
பணிகள் கழகத்தில் நிரப்பப்படாமல் இருந்த இளநிலை உதவியாளர்
பணியிடத்திற்கு வேலை வாய்ப்பு அலுவலகம்
மூலம் தெரிவு செய்யப்பட்ட 23 பேர்களுக்கு
பணிநியமன ஆணை வழங்கியமைக்கும், மாண்புமிகு
தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு இதயப்பூர்வமான
நன்றியினை பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம்
தெரிவித்துக்கொள்கிறது.