இனி ஓய்வு பெறும் அரசு
ஊழியர்களுக்கு, "பென்ஷன்' மற்றும் இதர பணப்பலன்களை
வழங்கும் நடைமுறையை எளிதாக்கும் பொருட்டு புது
விண்ணப்பத்தை
அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
இதற்காக
"படிவம்-5" என்ற புதிய விண்ணப்பம்
அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் அனைத்து
விதமான தகவல்களையும், சம்பந்தப்பட்ட ஊழியரே சுயமாக சான்றொப்பம்
அளிக்க வேண்டும்.
இதில் அந்த ஊழியர்,
பெயர், முகவரி, வங்கி கணக்கு
விபரம் அளிக்க வேண்டும். மேலும்
மொபைல் போன் நம்பர், இ
மெயில் முகவரி ஆகியவற்றையும் குறிப்பிட
வேண்டும்.இதன் மூலம் தனிப்பட்ட
ஊழியருக்கு ஏற்படும் சிரமங்களை சரி செய்வதோடு, அனைத்து
நடவடிக்கைகளும் வெளிப்படையாக இருக்கும் வகையில் இந்த மாற்றம்
செய்யப்பட்டுள்ளது.