24/12/2016

நாட்டு நலப்பணித்திட்ட மாநில ஆலோசனைக்கூட்டம்


ஐம்பத்து மூன்று வயதைக் கடந்து பதவி உயர்வு பெற்ற உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி ரத்து; தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு பணியில் உள்ள பதவி உயர்வு பெற்றுள்ள உதவியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படை பயிற்சியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:–

அரசுக்கு பரிந்துரை
2003–ம் ஆண்டு பணியில் சேர்ந்த இளநிலை உதவியாளர்கள் மற்றும் 2007–ம் ஆண்டு பணியில் சேர்ந்த தட்டச்சர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக தேர்வு செய்யப்பட்டு, 53 வயதை கடந்த நிலையில் உதவியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.
அவர்கள் இதுவரை பணியாற்றிய அனுபவமே போதுமானது என்பதாலும், பயிற்சி முடித்துவிட்டு குறைந்தது 5 ஆண்டுகள் கூட பணியாற்ற முடியாமல் போவதால் அரசுக்கு பண விரயம் உண்டாகும் எனவும், 53 வயதை கடந்த இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர் பதவியில் இருந்து உதவியாளராக பதவி உயர்வு பெற்றவர்கள் பவானிசாகரில் அடிப்படை பயிற்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைவிடப்பட்டிருந்தது. இவர்களுக்கு விலக்கு அளிக்கலாம் என்று பயிற்சி துறைத்தலைவர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

23/12/2016

தமிழக அஞ்சல் வட்டத்தில் பணி: ஜனவரி 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!


மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அஞ்சல் துறையின் தமிழக அஞ்சல் வட்டத்தில் 2017-ஆம் ஆண்டிற்கான 8 ஸ்கில்டு பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் சான்றிதழ் மற்றும் பணி அனுபவம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

24.12.2016 நமது சங்கத்தின் சிவகங்கை மாவட்டப் பொதுக்குழு கூட்டம்


24.12.2016 நமது சங்கத்தின் மதுரை மாவட்ட பொதுக்குழு கூட்டம்


21/12/2016

TNPSC DEO EXAM CERTIFICATE VERIFICATION WILL BE HELD ON 27.12.2016 | TNPSC DEO தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

TNPSC DEO EXAM CERTIFICATE VERIFICATION WILL BE HELD ON 27.12.2016 | TNPSC DEO தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் அடங்கிய மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கான 11 காலிப்பணியிடங்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 06.08.2015 மு.ப, 07.08.2015 மு.ப. மற்றும் 08.08.2015 மு.ப ஆகிய தினங்களில் நடத்தப்பட்டது. அதில் 2432 தேர்வர்கள் பங்கேற்றனர். இத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் இயற்பியல் மற்றும் வேதியியல் ஆசிரியர் பிரிவில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அழைக்கப்பட்ட 15 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல்-II தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.சான்றிதழ் சரிபார்ப்பு 27.12.2016 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.

G.O.455 for 1591 PG Asst Post Continuation Order

20/12/2016

ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 1-7-2016ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் ஆணை

01.07.2016 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு அரசாணை

Due DA Calculator.xls

Seniority list for regular superintendent as on 15.03.2016

அரசு ஊழியர்கள் துறைத்தேர்வு எழுத நுழைவுச் சீட்டு வெளியீடு

Departmental Examinations, December 2016
Memorandum of Admission (Hall Ticket)
(Dates of Examinations: 23.12.2016 to 31.12.2016)

           Enter Your Application Number :DED16                                 
                                                                                          Date                  Month             Year
                Enter Your Date of Birth :         /                       /   
                                                                                               
NOTE :
Before generating the Hall Ticket, kindly make sure that both Top and Bottom margins of the print area will have only maximum of 5 mm. and set the Page Size as 'A4' so as to generate the Hall Ticket in a single A4 size paper. This can be adjusted using File->Page Setup option of the browser.

14/12/2016

உடையார்பாளையம் கல்வி மாவட்ட பொதுக்குழு கூட்டம்;மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் மறைவுக்கு மௌன அஞ்சலி



                                                                                                                                            
 பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் உடையார்பாளையம் கல்வி மாவட்டம் சார்பாக பொதுகுழு 12.12.2016 மாலை உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்டத்தலைவர் திரு வை.ஆசைத்தம்பி தலைமையில் கூடியது.மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

09/12/2016

அரசு அலுவலர் பயிற்சி நிலையம் இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களுக்கான அடிப்படைப்பயிற்சி 37 பணி நாட்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப் பயிற்சி - 1 ம் அணி கோவை மையத்தில் (பெண்கள்) 14.12.2016 புதன்கிழமை முதல் 28.01.2017 சனிக்கிழமை முடிய நடைமுறைப்படுத்துதல் - பணியாளர்களை பயிற்சிக்கு அனுப்புதல் ஆணை மற்றும் பெயர்ப்பட்டியல் வெளியீடு

அரசு அலுவலர் பயிற்சி நிலையம் இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களுக்கான அடிப்படைப்பயிற்சி 37 பணி நாட்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப் பயிற்சி - 1 ம் அணி கோவை மையத்தில் (பெண்கள்) 14.12.2016 புதன்கிழமை முதல் 28.01.2017 சனிக்கிழமை முடிய நடைமுறைப்படுத்துதல் - பணியாளர்களை பயிற்சிக்கு அனுப்புதல் ஆணை மற்றும் பெயர்ப்பட்டியல் காண மற்றும் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...




பவானிசாகர் பயிற்சி அக்ரிமெண்ட் பார்ம், ஆளறி அடையாள அட்டை, பயிற்சியில் கலந்து கொள்ளவிருக்கும் பயிற்சியாளரை பணிவிடுவிப்பு செய்ய சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரிடம் அனுமதி கோரும் முகப்புக்கடிதம் மற்றும் பயிற்சிக்கு பணிவிடுவிப்பு செய்யும் ஆணை ஆகியவற்றின் மாதிரி கோப்பினை தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...

மாநில தலைவர் அறிக்கை

மாண்புமிகு தமிழக முதல்வர்  அம்மாவின் மறைவிற்கு இன்று முதல் 11-12-2016 வரை ஏதாவது ஒரு நாளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்ணீர் அஞ்சலி கூட்டம் நடத்தவும்,அப்போது மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்கள் நலன் காக்கும் வகையில் அறிவித்த ஆணைகளை நினைவுகூர்ந்து நன்றியுடன் கலந்த கண்ணீர் அஞ்சலி செலுத்த வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநிலத்தலைவர் ஏ.எஸ்.இராஜேந்திர பிரசாத் அறிக்கைவிடுத்துள்ளார்.

06/12/2016

தமிழக முதல்வர் அவர்களின் மறைவுக்கு நமது சங்கத்தின் மாநில நிர்வாகிகள் சார்பாக மாநிலத் தலைவர் ஏ.எஸ்.இராஜேந்திரபிரசாத் அவர்களின் அறிக்கை

அம்மா என்ற சொல் காற்றோடு கலந்து விட்டது.
அவர் கற்று தந்த பாடம்
எத்தகைய சோதனைகளை யும் துணிவுடன் எதிர் கொண்டு வெல்ல வேண்டும் என்பதே!
சோதனை , வேதனை, தோல்வி, துரோகம், நய வஞ்சகம், ஏய்த்து பிழைப்பது
போன்ற எல்லாவற்றையும்
முறியடித்து வெற்றி வாகை
சூடிய அம்மா நம்மிடம் இல்லை.
அம்மா என்ற சொல்  நம் முதல்வரின் அடையாளமே!.
அம்மா புகழ் ஓங்கட்டும்.அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டும்.

மாநில நிர்வாகிகள்,
பள்ளி கல்வி துறை நிர்வாக அலுவலர் சங்கம்,
மாநில மையம்,சென்னை.

தமிழக அரசு 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு; பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தின் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு 11.30 மணி அளவில் இயற்கை எய்தினார்.இரவு 11:30
மணிக்கு (05-12-2016) உயிர் பிரிந்ததாக அப்போல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்றன வியாழக்கிழமை வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் இதய பூர்வமான கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறது.

தமிழக முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் இதய பூர்வமான கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறது.

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download